வாழ்க்கையில் நன்றாக இருக்கும் போதே சொந்த வீடு வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கும். ஆனால் இன்றைய அதிக விலையுயர்ந்த ரியல் எஸ்டேட் மார்க்கெட்டில் ஒரு வீட்டைப் பற்றி கனவு காண கூட பல மில்லினியல்கள் போராடும் நிலையில், அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 6 வயது சிறுமி சொந்தமாக வீடு ஒன்றை வாங்கி உலகம் முழுவதும் வீடு வாங்கும் கனவில் இருக்கும் கோடிக்கணக்கான மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருக்கிறார்.
ஆம் நிச்சயமாக இந்த வீட்டை வாங்க குறிப்பிட்ட 6 வயது சிறுமிக்கு அவளுடைய பெற்றோர் முழு பணம் கொடுக்கவில்லை. அந்த சிறுமி தனது சகோதரன், சகோதரி, மற்றும் தந்தை உதவியுடன் தங்களுக்கான சொந்த வீட்டை வாங்கி இருக்கிறார். உலகை ஒன்றரை வருடங்களுக்கு மேலாக ஆட்டி படைத்தது வரும் கோவிட் தொற்று நோயைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் முக்கிய சிட்டியான மெல்போர்னின் புறநகரில் உள்ள ப்ராப்பர்ட்டிகளின் விலைகள் வியத்தகு முறையில் சரிவை சந்தித்துள்ளன.
இதனை தொடர்ந்து அந்த 6 வயது சிறுமி தான் சேமித்து வைத்திருந்த பாக்கெட் மணியை கொண்டு ஒரு வீட்டை வாங்கி இருக்கிறார். 37 வயதானவர் கேம் மெக்லெலன் (Cam McLellan). இவர் ஒரு பெரிய ப்ராப்பர்ட்டி டீலர் ஆவார். கோவிட் தொற்று காரணமாக ப்ராப்பர்ட்டி மார்க்கெட் சரிவில் இருந்தாலும், விலைகள் விரைவில் உயரும் என்று நம்பினார். மேலும் அவர் தனது 3 குழந்தைகளிடம் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவித்த அதே நேரத்தில், சேமிப்பு மட்டுமே புத்திசாலித்தனம் அல்ல.
அதை சாமர்த்தியமாக முதலீடு செய்ய வேண்டும் என்பதையும் தனது சிறு குழந்தைகளுக்கு கற்று கொடுத்தார். கேம் மெக்லெலன் பெரிய ப்ராப்பர்ட்டி டீலர் என்பதால் தனது குழந்தைகளுக்கு சொத்துக்களை வாங்க ஊக்குவித்தார். இதற்காக அவர் முழு பணத்தையும் கொடுக்கவில்லை. மாறாக, பணம் சம்பாதிப்பதன் முக்கியத்துவத்தை குழந்தைகளுக்கு உணர்த்த, அவர்களின் பாக்கெட் மணியை அதிகரிக்க ஒரு ஐடியா கொடுத்தார்.
Also read... தலைகீழாக கவிழ்ந்து கிடந்த ஆமைக்கு உதவிய எருமை... வைரல் வீடியோ!
அவர் தனது குழந்தைகள் மூவரையும் வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தினார் மற்றும் வீட்டு வேலைகளை செய்வதற்கு ஈடாக தன் குழந்தைகள் மூவருக்கும் பணம் கொடுத்தார். தந்தையின் பேச்சை கேட்டு குழந்தைகளும் புத்தகங்களை பேக் செய்வது உட்பட பல வீட்டு வேலைகளில் அவருக்கு உதவினார்கள். இப்படி செய்யப்பட்ட வேலைகள் மூலம் குழந்தைகள் மூவரும் இந்திய மதிப்பில் சுமார் ரூ.4.5 லட்சம் ரூபாய் பாக்கெட் மணியாக சேகரித்தனர்.
Also Read : டிக்டாக் வீடியோவால் மாட்டிக்கொண்ட திருடன்... வைரலாகும் வீடியோ!
அவர்களின் பாக்கெட் மணியோடு சேர்த்து குறிப்பிட்ட வீட்டை வாங்க தேவைப்பட்ட மீதிப் பணத்தை கேம் மெக்லெலன் போட்டு தனது 3 பிள்ளைகளின் பெயரில் ஒரு வீட்டைவாங்கினார். தற்போது வாங்கி இருக்கும் இந்த வீட்டின் மதிப்பு அடுத்த 10 ஆண்டுகளில் இரட்டிப்பாகும் என்று அவர் நம்புகிறார். தந்தையின் உதவியுடன் 6 வயதான ரூபி, அவரது சகோதரர் கஸ் மற்றும் சகோதரி லூசி மெக்லெலன் ஆகியோர் மெல்போர்னின் தென்கிழக்கில் உள்ள Clyde-ல் தங்கள் சொந்த வீட்டை வாங்கியுள்ளனர்.
Also read... பெண்களை மாடுகளுடன் ஒப்பிட்டு எடுத்த விளம்பரம்... வலுத்த எதிர்ப்புகள்!
Clyde-ல் உள்ள இந்த ப்ராப்பர்ட்டியின் மொத்த விலை ரூ. 6,71,000 ஆஸ்திரேலியன் டாலர் (ரூ.3.6 கோடி) ஆகும். குழந்தைகள் மூவரும் நிதி ரீதியாக 2000 ஆஸ்திரேலியன் டாலர் பங்களித்துள்ளனர். எனது குழந்தைகள் போதுமான வயதாக இருக்கும் போது அதைப் பயன்படுத்துவதற்காக இந்த வீடு அவர்களின் பெயரில் எழுதப்பட்டுள்ளது. இளம் நிலஉரிமையாளர்கள் சரியாக 10 ஆண்டுகள் கழித்து 2032-ல் ப்ராப்பர்ட்டியை விற்று லாபத்தை தங்களுக்குள் பிரித்து கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.