• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • பாய்ச்சல்ல சிங்கம்...குணத்துல தங்கம்... மக்கள் மனதை வென்ற காளை...! - வீடியோ

பாய்ச்சல்ல சிங்கம்...குணத்துல தங்கம்... மக்கள் மனதை வென்ற காளை...! - வீடியோ

சிவகங்கை

சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சிறாவயல் மஞ்சுவிரட்டு நிகழ்வில் நடந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே நடைபெற்ற சிராவயல் மஞ்சுவிரட்டு போட்டியில் சீறிவந்த காளை எதிரில் வந்த தாய் குழந்தையைக் கண்டதும் தன் ஆவேசத்தை அடக்கி அவர்களைத் தாண்டி சென்ற காட்சி அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.

    மஞ்சுவிரட்டு என்பது கண்மாய் , வயல் வெளி பொட்டல் பகுதியில் காளைகளின் கழுத்தில் மஞ்சல் துண்டு கட்டி விடுவார்கள். காளையர்கள் ஒன்று சேர்ந்து விரட்டி பிடித்து காளையை அடக்கி கழுத்தில் உள்ள மஞ்சல் துண்டை அவிழ்ப்பர் இதற்கு மஞ்சுவிரட்டு என பெயர்.

    Also see...இசை மழையில் நனையத் தயாரா? பாட்டு பாடி அசத்தும் நாய் - வைரல் வீடியோ

    சிவகங்கை மாவட்டம் முழுவதும் அநேக இடங்களில் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்காவிட்டாலும் தடையை மீறி மஞ்சு விரட்டு நிகழ்ச்சி நடைபெறும். இதனிடையே நேற்று நடந்த மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் ஆவேசமாக வந்த காளை எதிரில் வந்த தாய் குழந்தையைக் கண்டதும் தன் ஆவேசத்தை அடக்கி அவர்களைத் தாண்டி சென்றது.



    சிவகங்கை மஞ்சுவிரட்டில் சீறி வந்த காளையை பார்த்ததும் குழந்தையை முற்றிலும் தன் உடம்புக்குள் வைத்துப் பாதுகாத்த தாய், அவ்வளவு சீற்றத்திலும், தாயையும் குழந்தையையும் தாண்டிச் செல்லும் காளை என சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் இந்த புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.

    பாய்ச்சல்ல சிங்கம்...குணத்துல தங்கம்... மனித மனங்களை வென்று நிற்கும் காட்சி என சிவகங்கை காளைக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகின்றது.

    Fact Check : எழும்பூர் ரயில் நிலையத்தில் கழிவறைக்கு பயன்படுத்தப்படும் தண்ணீர் பாலில் கலக்கப்பட்டதா..?

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: