Home /News /trend /

கர்ப்பமாக இருந்த மகள் - தாயைப் போல கவனித்துக் கொண்ட தந்தை.!

கர்ப்பமாக இருந்த மகள் - தாயைப் போல கவனித்துக் கொண்ட தந்தை.!

Trending | தனியொரு நபராக, தந்தையாக தனது மகளை பார்த்துக் கொள்வதில் எதிர்கொண்ட சிரமங்கள் அனைத்தையும் டிவிட்டர் தளத்தில் அவர் பட்டியலிட்டுள்ளார்.

Trending | தனியொரு நபராக, தந்தையாக தனது மகளை பார்த்துக் கொள்வதில் எதிர்கொண்ட சிரமங்கள் அனைத்தையும் டிவிட்டர் தளத்தில் அவர் பட்டியலிட்டுள்ளார்.

Trending | தனியொரு நபராக, தந்தையாக தனது மகளை பார்த்துக் கொள்வதில் எதிர்கொண்ட சிரமங்கள் அனைத்தையும் டிவிட்டர் தளத்தில் அவர் பட்டியலிட்டுள்ளார்.

பிள்ளைகளை கவனித்து கொள்வதில் பெற்றோரின் கடமைகள் என்பது மிகுந்த சவால்களை கொண்டதாகும். குறிப்பாக, கணவன் அல்லது மனைவி இருவரில் ஒருவர் இல்லாத நிலையில், ஒற்றை நபராக பிள்ளைகளை கவனித்துக் கொள்ள வேண்டும் என்றால் பெரும் சிரமங்களை சந்திக்க நேரிடும்.

ஒற்றை நபராக இருந்தாலும் தாய் - தந்தை இருவரும் இணைந்து செய்யக் கூடிய கடமைகளைச் செய்தாக வேண்டும். பொறுப்புகளை பூர்த்தி செய்ய வேண்டும். ஓய்வுபெற்ற ராணுவ கர்னல் சண்சய் பாண்டேவும் கூட ஒற்றை நபராக தனது மகளை கவனித்து வருகிறார். தாயை இழந்து வாடும் மகளுக்கு அவரே தாயாகவும் இருக்கிறார். குறிப்பாக, மகள் என்ன எதிர்பார்க்கிறார் என்பதை புரிந்து கொண்டு, அதை செய்து கொடுப்பதன் மூலமாக தாய் இல்லாத குறையை தீர்த்து வைக்கிறார்.

கர்ப்பமாக இருந்த மகள் :

மனைவியின் மறைவுக்கு பிறகு, மகள் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்ததும் முதலில் அவருக்கு உதவி செய்ய முடியாதவராய் இருந்ததாக சஞ்சய் பாண்டே குறிப்பிட்டுள்ளார். இது மட்டுமல்லாமல், தனியொரு நபராக, தந்தையாக தனது மகளை பார்த்துக் கொள்வதில் எதிர்கொண்ட சிரமங்கள் அனைத்தையும் டிவிட்டர் தளத்தில் அவர் பட்டியலிட்டுள்ளார்.

அவரது பதிவில், “எனது மனைவி காலமாகிவிட்டார். ஓராண்டு கடந்த நிலையில், நான் தாத்தா ஆகப் போகிறேன் என்று எனது மகள் என்னிடம் தெரிவித்தார். பொதுவாக நான், ஒரு தந்தை என்ற வகையில், அதுவும் ஒற்றை பெற்றோர் என்ற வகையில், எனது மகளின் கர்ப்ப காலத்தில் பயனற்ற நபராக இருக்கப் போகிறேன் என நினைத்தேன். குழந்தை பிறப்புக்குப் பிறகும் அது தொடரும் எனக் கருதினேன். நான் ஒரு போர் வீரன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.



தாயை போல மாற முடிவு :

நான் எனது மகளுக்கு தாயாக மாற முடிவு செய்தேன். கர்ப்பமாக இருப்பதை எனது மகள் என்னிடம் சொன்ன நாள் முதல் அவர் என்ன சாப்பிட வேண்டும் என்பதை பார்த்து, பார்த்து கொடுத்தேன். யூடியூப், பெரியவர்களின் ஆலோசனைகள், புத்தக குறிப்புகள் போன்ற அனைத்தையும் பரிசீலனை செய்து மகளை பார்த்துக் கொண்டேன்.

Also Read : McDonalds-இல் இலவசமாக சாப்பிட ரூ.1 லட்சம் சம்பளமாம்..

லட்டு பார்சல் :

கர்ப்ப காலத்தில் முதல் 30 நாட்களுக்கு சத்தாக சாப்பிட வேண்டிய பாரம்பரிய லட்டுகள் தயாராக இருந்தன. ஆனால், நான் டெல்லியிலும், மகள் பிரிட்டனிலும் இருந்தோம். இதைத் தொடர்ந்து காற்று புகாத இயந்திரம் ஒன்றில், லட்டுகளை 96 மணி நேரம் பதப்படுத்தி பிரிட்டனுக்கு அனுப்பி வைத்தேன்.



கர்ப்பமாக இருக்கும் மகளுக்கு, ஒரு இந்திய தாய் பாரம்பரியமாக என்ன தயார் செய்து கொடுப்பாரோ, அவை அனைத்தையும் நானே என் கைப்பட தயாரித்து அனுப்பினேன். குறிப்பாக, எனது மகள் கர்ப்பமாக இருந்த 8 மாதத்திலும் அவருக்கு தேவையான ஊட்டச்சத்து அனைத்தையும் பார்சல் மூலமாகவே அனுப்பி வைத்தேன்.



கடந்த ஜூலை மாதத்தில் எனது மகளுக்கு குழந்தை பிறந்தது. அதற்குப் பிறகு தாய்க்கும், குழந்தைக்கும் என்ன கொடுக்க வேண்டும், என்ன உணவை கொடுத்தால் தாய்ப்பால் அதிகரிக்கும் என்பதையெல்லாம் ஆய்வு செய்து கொடுக்கத் தொடங்கினேன். ஒருமுறை பிரிட்டன் சென்று மகளுக்கு தேவையான அனைத்தும் அங்கு இருக்கிறதா என்பதை உறுதி செய்தேன்’’ என்று சஞ்சய் பாண்டே கூறியுள்ளார்.



இதுவரை 12 வகையான லட்டுகளை தயார் செய்து மகளுக்கு அனுப்பி வைத்ததாக கூறியுள்ள அவர், ஒரு தந்தையாக மகளின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ததை நினைத்து பெருமை கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
Published by:Selvi M
First published:

Tags: Father, Trending

அடுத்த செய்தி