• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • இவள் ஒரு இளங்குருவி... இணையத்தை கலக்கும் ப்ரநிதி

இவள் ஒரு இளங்குருவி... இணையத்தை கலக்கும் ப்ரநிதி

இணையத்தை கலக்கும் ப்ரநிதி

இணையத்தை கலக்கும் ப்ரநிதி

இவள் ஒரு இளங்குருவி.. இணையத்தில் குயிலாய் ஒலிக்கும் பிரணிநிதி குறித்த அறிந்தவர்கள் அவளை இளங்குருவி என்றே அழைக்கின்றனர்.

  • Share this:
    பாடல், ஆடல், நடிப்பு என இணையத்தை கலக்கி வருகின்றார் குழந்தை நட்சத்திர பாடகி ப்ரநிதி. இவரது பாடலை காணாமல் இணையத்தில் மற்ற வீடியோக்களை கடந்து வருவது அரிது. தனது இனிய குரல் வளத்தால் இணையத்தில் பல ரசிகர்களை கட்டிப் போட்டுள்ளார். ப்ரநிதி பாடகி மட்டும் அல்ல குழந்தை நட்சத்திரமும் கூட. அருவி படத்தில் குழந்தை அருவியாக நடித்து அசத்தினார்.

    3ம் வகுப்பு படிக்கும் போது ஏ.ஆர்.ரகுமான் வைத்துள்ள கே.ஆர் மியூசிக் காலேஜில் 2 வருடம் சங்கீதம் கற்ற ப்ரநிதி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சுட்டி சூப்பர் சிங்கராக அறிமுகமாகி தற்போது, யூடியூப் , முகநூல், இன்ஸ்டாகிராம் என அனைத்திலும் ட்ரெண்டிங்கில் உள்ளார்.



    இசையமைப்பாளர் இமான் ஒருமுறை இவரை அழைத்து இவரது திறமையை பாராட்டியிருந்தார். இது குறித்து தனது அனுபவத்தை பகிர்ந்த ப்ரநிதி, சரவணன் இருக்க பயமேன்’ படத்தில் வரும் ’லங்கு லங்கு லபகரு’ பாட்டு பத்தி சொல்லி, ஒருதடவை அந்தப் பாட்டைப் பாடிக் காட்டினார். அதே மாதிரி நானும் பாடினேன். இரண்டு, மூணு இடத்துல திருத்திக்கச் சொன்னார். 'சூப்பர் ப்ரணிதி, நான் எதிர்பார்த்ததைவிட சீக்கிரமே பாடி முடிச்சிட்டே'னு பாராட்டினார். என கூறியிருந்தார்.

    இவள் ஒரு இளங்குருவி.. இணையத்தில் குயிலாய் ஒலிக்கும் பிரணிநிதி குறித்த அறிந்தவர்கள் அவளை இளங்குருவி என்றே அழைக்கின்றனர்.



    சன்டிவியில் நடிகர் தனுஷ் உடன் சேர்ந்து இவர் பாடிய தங்க மாரி ஊதாரி பூட்டுக்கின நீ நாறி பாடல் இணையத்தில் இன்றளவும் பேசப்படுகின்றது.





    இந்த குழந்தை தற்போது பாடல் மட்டும் அல்லாது நடனத்திலும் அசத்தி வருகின்றது. தனது பாடலுக்கு தானே நடனமாடி அந்த வீடியோக்களையும் தனது யூட்யூப் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றார்.

     



     




    View this post on Instagram





     

    A post shared by Praniti (@pranitiofficial)






     



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: