ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

“சிங்கப் பெண்ணே“ பாடலுக்கு பரதம் ஸ்டைலில் ஆடும் 3 பெண்கள்... குவியும் லைக்ஸ்கள்...!

“சிங்கப் பெண்ணே“ பாடலுக்கு பரதம் ஸ்டைலில் ஆடும் 3 பெண்கள்... குவியும் லைக்ஸ்கள்...!

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படத்தின் 'சிங்கப் பெண்னே' பாடலுக்கு 3 பெண்கள் பரதம் ஆடும் டிக்-டாக் வீடியோவிற்கு நெட்டிசன்களிடம் பாரட்டுகள் குவிந்து வருகிறது.

அட்லீ இயக்கத்தில் விஜய், நயன்தாரா நடித்த பிகில் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு கடந்த அக்டோபர் மாதம் 25ம் தேதி வெளியானது. பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், யோகி பாபு, ஆனந்தராஜ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மெர்சல் படத்திற்கு பின் விஜய் - அட்லீ கூட்டணிக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருப்பார். இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த படத்தில் பெண்களின் பெருமையை போற்றும் விதமாக “சிங்கப் பெண்ணே“ என்ற பாடல் இடம் பெற்றுள்ளது. பெண்கள் மத்தியில் இந்த பாடல் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த பாடலின் வீடியோவை படக்குழு இன்று யூ-டியூபில் வெளியிட்டுள்ளது.

மேலும் டிக்-டாக் செயலியில் சிங்கப் பெண்ணே பாடலுக்கு பெண்கள் பலர் நடனமாடி அதனை பதிவேற்றி உள்ளனர். அவற்றுள் பரதம் மூலமாக நடனமாடிய  3 பெண்களின் வீடியோ இணையத்தில் வேகமாய் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில் 3 பெண்கள் சிங்க பெண்ணே பாடலுக்கு ஏற்றவாறு நேர்த்தியாக பரதம் ஆடி உள்ளனர். இந்த வீடியோவை பார்த்த பலரும் இந்த பெண்களுக்கு தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Also watch

Published by:Vijay R
First published:

Tags: Viral Video, Viral Videos