வெவ்வேறு விதமான கணித புதிர்களை தினமும் பயிற்சி செய்து வருகிறோம். புதிர்களை மற்ற கணக்குகளை போல அல்ல. அதன் ட்ரிக் மற்றும் லாஜிக் புரிந்துவிட்டால் நிமிடத்திற்குள் அதை தீர்த்துவிடலாம் என்று உணர்ந்திருப்பீர்கள். ஆனால் ஒவ்வொரு கணக்கு புதிரும் ஒவ்வொரு லாஜிக்கை அடிப்படையாக கொண்டு இருக்கும்.
ஒரு கணக்கின் அடிப்படை சாரம் புரிந்துவிட்டால், அதை நிமிடத்திற்குள் முடித்துவிடலாம். அதில் உள்ள எண்களின் நேரடி கூட்டல், கழித்தல், பெருக்கல் மட்டும் இல்லாமல் வைத்து பல சிறிய அளவிலான கணக்குகள் போடப்பட்டு அதை சேர்த்து ஒரு விடையாக கொடுக்கப்பட்டிருக்கும். அந்த கணக்கிற்கான வரிசையில் முதல் விடை எப்படி வந்தது என்பதை கண்டுபிடித்துவிட்டாலே பாதி வேலை முடிந்துவிடும். சரி இன்றைய கணக்கிற்கு வருவோம்.
முதல் வரிசையை பார்த்ததும் முதல் இரண்டு எண்களைக் கூட்டினால் விடை எண் வந்துவிட்டது. எளிது என்று தோன்றும். ஆனால் அடுத்த வரிசை அதை பொய் என்று மாற்றி விடும். ஆனால் இதில் எளிமையான ட்ரிக் தான் ஒளிந்துள்ளது. நிச்சயம் உங்களால் கண்டுபிடிக்க முடியும். இந்த கணக்கை போட அதிகபட்சம் இரண்டு நிமிடங்கள் தான் ஆகும். இன்னும் நேரம் இருக்கிறது மீண்டும் கணக்கை போட்டு பாருங்கள். கண்ணால் பார்த்து கணக்கைப் போட முடியாது. ஒரு காகிதம் எடுத்து கிறுக்கி பாருங்கள். நிச்சயம் விடை வந்தே தீரும்.
விடையை கண்டுபிடித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். விடை 96 என்று வந்திருந்தால் அது தான் சரியான விடை. இதை போடா இரண்டு வழிகள் உள்ளது.இதில் எந்த வழியில் நீங்க;ல் போட்டீர்கள் என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
1+4 = 1 + 1(4) = 1 + 4 = 5
2+5 = 2 + 2(5) = 2 + 10 = 12
3+6 = 3 + 3(6) = 3 + 18 = 21
8+11 = 8 + 8(11) =8 + 88 = 96
இந்த முறை மிக எளிதானது சீக்கிரம் விடை வந்துவிடும். மற்றொரு லாஜிக் வைத்தும் இந்த விடையை கொண்டு வரலாம். அதன் வழியையும் பார்த்துக்கொள்ளுங்கள்.
1 + 4 = 5
5 + 2 + 5 = 12
12 + 3 + 6 = 21
21 + 4 + 7 = 32
32 + 5 + 8 = 45
45 + 6 + 9 = 60
50 + 7 + 10 = 77
77 + 8 + 11 = 96
இதில் எப்படி நீங்கள் போட்டிருந்தாலும் சரி. இதே போல பல லாஜிக் கணக்குகளை போட்டு பாருங்கள் அப்புறம் கணக்கு புதிர் எல்லாம் கைக்குள் அடங்கும். கணக்கு என்பது போட போட வந்துவிடும். கவலை பாடாமல் முயற்சி செய்துகொண்டே இருங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Entertainment, Trending