முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / Math Riddles | கணக்கில் கில்லாடியா நீங்க? அப்போ இந்த எளிய கணக்க 1 நிமிடத்திற்குள் முடிங்க பார்ப்போம் !

Math Riddles | கணக்கில் கில்லாடியா நீங்க? அப்போ இந்த எளிய கணக்க 1 நிமிடத்திற்குள் முடிங்க பார்ப்போம் !

கணித புதிர்

கணித புதிர்

Math riddles | கேள்விகளில் உள்ள எண்களை மட்டும் அல்லாமல் அதற்கு இடையே உள்ள தொடர்புகளையும் கவனிப்பது முக்கியம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai |

வெவ்வேறு விதமான கணித புதிர்களை தினமும் பயிற்சி செய்து வருகிறோம். புதிர்களை மற்ற கணக்குகளை போல அல்ல. அதன் ட்ரிக் மற்றும் லாஜிக் புரிந்துவிட்டால் நிமிடத்திற்குள் அதை தீர்த்துவிடலாம் என்று உணர்ந்திருப்பீர்கள். ஆனால் ஒவ்வொரு கணக்கு புதிரும் ஒவ்வொரு லாஜிக்கை அடிப்படையாக கொண்டு இருக்கும்.

கணக்கில் உள்ள ஏதோ ஒரு முறையை தேர்ந்தெடுத்து அதன் வழி தான்  புதிர் புனையப்பட்டிருக்கும். இதை கண்டுபிடிக்க கணித மேதைகளால் தான் முடியும் என்றெல்லாம் ஒன்றும் இல்லை. பார்க்கும் பார்வையில் தான் இருக்கிறது. என்னவாக இருக்கும் என்ற தேடல் கூட உதவி செய்யும். சொல்லபோனால் ஆர்வம் தான் புதிர்களை திறக்கும் சாவி. சரி இன்றைய புதிருக்கு வருவோம்.

இன்றைய புதிர் கூட மிக எளிதான ஒன்றே. பள்ளி மாணவர்கள் போடும் அளவிற்கு எளிதானது தான் கொடுத்திருக்கிறோம். கூட்டல், கழித்தல் தெரியும் யாரும் இதை போட்டு விடலாம். கொடுக்கப்பட்டுள்ள எண் கோவைகளை கணக்கையும் உற்று கவனியுங்கள். சொல்லப்போனால் இந்த புதிருக்கான ஹிண்டையும் கூட சொல்லிவிட்டேன்.

புதிர் கணக்குகளை பொறுத்தவரை விடைகள் எப்போது நேரடியாக இருக்க வாய்ப்பில்லை என்பது உங்களுக்கே தெரியும். கணக்கில் உள்ள எண்களை வைத்து ஏதாவது  கணக்கு போட்டு அதன் குறுக்கு  கோர்வை தான் விடையாக வைத்திருப்பார்கள். இதில்  கூட அப்படி தான். விடையில் தான் விஷயம்  இருக்கிறது. அதை கொஞ்சம் பிரித்து  அலசி பாருங்கள். லாஜிக் பிடிப்படலாம்.

இந்த புதிரை அதிகபட்சம் 1 நிமிடத்திற்குள் தீர்த்துவிடலாம். மீண்டும்  முயற்சி செய்து பாருங்கள். நிச்சயம் உங்களால் விடையை கண்டுபிடிக்க முடியும். கண்டுபிடித்துவிடீர்களா? விடை 410 என்று வந்துள்ளதா? பார்ரா... கணக்கு புலி ஆகிவிட்டிர்கள் போலயே.

விடை வரவில்லை என்று சிரமப்பட வேண்டாம். விளக்கத்தை படித்து பாருங்கள் புரிந்து விடும்.

முதல் வரிசையை எடுத்துக்கொள்வோம்,

4 + 6 = 26  என்று கொடுத்துள்ளனர்.

4 + 2 = 6 தானே! எப்படி 26 வந்தது என்று தானே மண்டையை உடைத்தீர்கள். நாங்கள் தான் முன்னரே சொன்னோமே விடையை பிரித்து பார்க்கவேண்டும்  என்று.

விடையை இரண்டாக புரியுங்கள் 2  ||  6

4 + 2 = 6  என்று தெரியும். அது தான் விடையின் இரண்டாம் பகுதியாக இருக்கிறது. முதல் பகுதி எப்படி வந்தது என்று தான் கண்டுபிடிக்க வேண்டும்.

4 - 2 =2

4/2 = 2 என்று இரண்டு முறைகளில் வருகிறது. எனவே அடுத்த வரிசையை கவனிப்போம்.

8 + 1 = 79

8 -1  = 7 || 8 + 1 = 9  என்பதில் இருந்து முதல் பகுதி 2 எண்களையும் கழிப்பதால் கிடைக்கும் விடை என்பது தெரிந்துவிட்டது.

இதையும் முயற்சி செய்து பாருங்க : மூளைக்கு சவால்... விடுபட்ட சரியான எண்ணை கண்டுபிடிங்க பார்ப்போம்!

கணக்கு பாதி முடிந்து விட்டதா? இப்போது மூன்றாம் வரிசையை பார்ப்போம்..

6 + 5 = (6 – 5) ||   (6 + 5) = 1  ||  11

6 + 5 = 111 என்பதும் சரியாக வந்துவிட்டது.

இறுதியாக  7 +3  இந்த விடையை தான் கண்டுபிடிக்க வேண்டும். முன்னர் செய்த அதே வழிமுறையை பின்பற்றுவோம்...

7 +3 = (7 – 3) ||  (7 + 3) = 4   ||  10

எனவே   7 + 3 = 410 . விடை கிடைத்து விட்டது தானே. மனம் தளராமல் மீண்டும் முயற்சி செய்யுங்கள். நிச்சயம் உங்களுக்கும் சரியான விடை முதல் முயற்சியிலேயே கிடைத்துவிடும். விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி ....

First published:

Tags: Trending