முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / Math Riddles | மூளைக்கு சவால்... விடுபட்ட சரியான எண்ணை கண்டுபிடிங்க பார்ப்போம்!

Math Riddles | மூளைக்கு சவால்... விடுபட்ட சரியான எண்ணை கண்டுபிடிங்க பார்ப்போம்!

கணித புதிர்

கணித புதிர்

Math Riddles: கணக்கு புதிர்களை பொறுத்தவரை புதிரில் உள்ள எண்களில் உள்ள தொடர்புதான் விஷயமே.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai |

புதிர்கள் என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாருக்கும் பிடித்தமான ஒன்று. அதுவும் கணக்கு புதிர்களில் சுவாரஸ்யம் அதிகம்.  கணக்கு புதிர்களை பொறுத்தவரை புதிரில் உள்ள எண்களில் உள்ள தொடர்பு தான் முக்கியமே. அதை மட்டும் கண்டுபிடித்துவிட்டால் போதும்.

அப்படி ஓர் எண் புதிரைதான் இன்று உங்களுக்கு வழங்குகிறோம். மிகவும் எளிமையான ஒன்றுதான்.  5 ஆம் வகுப்பு மாணவன் போடக்கூடிய அளவில்தான் இந்த புதிர் இருக்கும்.  அதனால் யார் வேண்டுமானாலும் இந்த புதிருக்கான விடையை கண்டுபிடிக்கலாம். புதிரை பார்த்துவிடலாமா?

இந்த வட்டத்தில் இருக்கும் ஒவ்வோர் எண்ணெயும் கூர்ந்து கவனித்துப் பாருங்கள். முன்னாடி இருக்கும் எண்ணிற்கும் அடுத்து வரும் எண்ணிற்கும் என்ன தொடர்பு என்று யோசியுங்கள். அந்த எண்களை வரிசைப்படுத்தி அதில் உள்ள தொடர்புகளை கூட புரிந்துகொள்ள பாருங்கள்.

கஷ்டமாக இருக்கிறதா? ஒரு ஹிண்ட் : - இதில் கழித்தல், பெருக்கல், வகுத்தல் போன்றவை எல்லாம் எதுவும் இல்லை. இது ஒரு எளிய எண் வரிசையை குறிக்கும். எண்களை கிடைமட்டமாக வரிசைப்படுத்தி எழுதி பாருங்கள். என்ன விடை கிடைத்துவிட்டதா? இந்த புதிருக்கான விடை 21 என்று வந்தால் அதுதான் சரி.

இன்னும் விடை கிடைக்கவில்லை என்றால் இந்த விளக்கத்தை படித்து பாருங்கள் புரிந்துவிடும். பள்ளி கணக்கு பாடத்தில் பிபனாச்சி எண்கள் (Fibonacci numbers), பிபனாச்சி தொடர் என்று ஒன்றை படித்துள்ளோம் நினைவிருக்கிறதா? சூரியகாந்தி பூவின் விதைகளை வைத்து இந்த வரிசையை சொல்லிக் கொடுத்திருப்பார்கள்.

பிபனாச்சி ( Fibonacci) தொடர்

பிபனாச்சி தொடர், பிபனாச்சி வரிசை, பிபனாச்சி எண்கள் என்றெல்லாம் அழைக்கப்படும் வரிசையில் உள்ள ஒவ்வொரு எண்ணும் அதற்கு முன் உள்ள இரண்டு எண்களின் கூட்டுத்தொகைக்கு சமமாக இருக்கும் . 0, 1 ஆகிய இரண்டு எண்களை வைத்துதான் இந்த வரிசை தொடங்கும்.

0

1

0+1 = 1

1 + 1 =2

1 + 2 = 3

2 + 3 = 5

3 + 5 = 8

5 + 8 = 13

இதை தொகுத்து பார்த்தால், 0 , 1, 1,2, 3,5,8,13,.... என்று தொடரும். நம் கணக்கில் உள்ள எண்களை கவனியுங்கள். இதே வரிசையில் இருக்கிறதா? 1,  1, 2,  3, 5, 8, 13 வரை கொடுத்துள்ளனர். இப்போது 13 க்கு அடுத்து வரும் பிபனாச்சி எண்ணை கண்டுபிடிக்கவேண்டும்.அதை கண்டுபிடிக்கும் வழி தெரியும் தானே? அடுத்து வரும் எண்ணை கண்டுபிடிக்க முன்னால் உன்ன 2 எண்களை கூட்ட வேண்டும்.

இதையும் முயற்சி செய்து பாருங்க : லாஜிக் புரிந்துவிட்டால் இந்த கணக்கை 30 வினாடிகளில் போட்டுவிடலாம்.. எவ்ளோ நேரம் எடுத்தீங்க?

எனில் வரிசையில் கடைசியாக இருக்கும் 2 எண்கள் என்னவென்று பாருங்கள். 8, 13 ஆகிய எண்கள் இருக்கிறது. இப்போது இந்த இரண்டு எண்களையும் கூட்டுங்கள்.

8 + 13 = 21

எனவே 13 க்கு அடுத்து வரும் பிபனாச்சி எண் 21 என்று கிடைத்து விட்டது.  விடை சரியாக வந்து விட்டதா? அவ்வளவு தான் கணக்கு தீர்ந்தது.

First published:

Tags: Entertainment