கணக்கு புதிர்களை பொறுத்தவரை நேரடியாக கேள்விகளில் உள்ள எண்களை மட்டும் அல்லாமல் அதற்கு இடையே உள்ள தொடர்புகளையும் அதற்கு இடையே அமைந்துள்ள எண்களையும் கவனிக்க வேண்டும். அதுதான் கணக்கின் சூட்சம புள்ளி. அதை பிடித்துவிட்டேன் கணக்கெல்லாம் சுண்டெலி போலத்தான்.
இன்றைக்கான புதிர் எண்கள் இடையே உள்ள தொடர்புகளை உங்களுக்கு பழக்கபடுத்துவதற்கானதே. இந்த கணக்கு புதிரில் உள்ள எண்களை மட்டும் பார்க்காமல் அதில் உள்ள தொடர்புகளையும் வரிசைகளையும் கவனிக்க முயலுங்கள்.
மேற்கண்ட புதிரில் மொத்தம் நான்கு கணக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது. மூன்று விடைகள் எப்படி வந்தது என்று கண்டுபிடித்து விட்டால் நான்காவது கணக்கின் விடை துல்லியமாக கிடைத்து விடும். முதல் வரிசை எளிதாக இருக்கும். அடுத்த வரிசை தான் புதிரே தொடங்குகிறது. அதில் உள்ள சின்ன சூட்சமத்தை மட்டும் கவனியுங்கள். கணக்கு டக்குனு முடிந்துவிடும்.
என்ன விடை கிடைத்து விட்டதா மக்களே? இந்த புதிருக்கான விடை 296 என்று கிடைத்திருந்தால் உங்கள் மூளையின் செயல்பாடு குறித்து நீங்கள் கவலையே படத்தேவை இல்லை. அட்டகாசமாக இருக்கின்றது என்று பொருள். மற்றவர்களும் கவலை பட வேண்டாம்.. லாஜிக் பிடிபடவில்லை இன்னும் அவ்வளவு தான்.
எப்படி 296 வந்தது என்று பார்த்துவிடலாமா?! முதல் வரிசையை எடுத்துக்கொள்வோம்,
21+10 =31 நேரடியாக கூறினாலே விடை வருகிறது.
அடுத்த வரிசையை கவனிப்போம்.
22+20 =84 என்று கொடுத்துள்ளனர்.
ஆனால் 22+20 கூடினால் 42 தான் வரும்.
இப்போது 42 மற்றும் 84 கிற்கு எதாவது தொடர்பு இருக்கிறதா என்று யோசியுங்கள். 42 இன் இரண்டு மடங்கு 84 தானே அப்படியெனில்,
(22 + 20) * 2 = 42 * 2 = 84 என்ற முறை பயன்படுத்தப்பட்டுள்ளது.
இது மற்ற வரிசைகளுக்கும் பொருந்துகிறதா என்று பாருங்கள்.
மீண்டும் முதல் வரிசையை கவனிப்போம்,
21 + 10 * 1 = 31
முதல் வரிசை என்பதால் இந்த என்னுடன் 1 ஐ பெருக்குவோம்,
31* 1 = 31 .இதற்கு பொருந்துகிறது.
எனவே, இவற்றின் பொது விதி, கொடுக்கப்பட்ட எண்களை கூடி வரும் விடையை வரிசையாக 1,2,3,4 என்ற எண்களால் பெருக்க வேண்டும்
அடுத்து மூன்றாம் வரிசையில் போட்டு சரி பார்ப்போமா?
23 + 30 * 3 = 53
மூன்றாவது வரிசை என்பதால் இதோடு 3 ஐ பெருக்குவோம்,
53* 3 = 159
விடை சரியாக வந்துவிட்டது. இதற்கும் கட்சிதமாக பொருந்துகிறது.
இதையும் முயற்சி செய்து பாருங்க : முக்கோணத்தின் மதிப்பை 30 விநாடிகளில் கண்டுபிடித்து விட்டால் நீங்கள் ’கணக்கில் புலிதான்’!
இதே முறையை அடுத்து நான்காவது வரிசைக்கு உள்ளிடலாம்,
24+50 என்பது கேள்வி. முதலில் இரண்டு எண்களை கூட்டிக்கொள்வோம்
24 + 50 = 74
நான்காவது வரிசை என்பதால் 74 ஐ நான்கால் பெருக்குவோம்.
74 * 4 = 296
எனவே 24+50 =296 என்பதுதான் விடை
மீண்டும் ஒரு முறை இந்த கணக்கை முயற்சித்து பாருங்கள். சரியாக வருகிறதா என்று சரி பாருங்கள். கணக்கு பாடம் எளிமை தானே?
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.