வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு என்று செய்யலாம் என்று யோசிக்கும்போது ஒரு சிலர் படம், சீரிஸ் என்று பார்ப்பார்கள். சிலர் தூங்குவார்கள். ஒரு சிலர் ஓய்வு நேரத்தில் ஏதாவது கற்றுக்கொள்ள நினைப்பார்கள். சிலர் புதிர், விடுகதைகள், சுடோகு போன்றவற்றை போடுவார்கள். அப்படி புதிர்களை கட்டவிழ்ப்பவர்களுக்கும் அதை முயற்சி செய்ய நினைப்பவர்களுக்கும் ஒரு கணக்கு புதிரை கொண்டு வந்திருக்கிறோம்.
கணக்கு புதிர்களில் பல வகைகள் உண்டு. சமன்பாடுகள் கொண்ட புதிர்கள், வெறும் எண்களை கொண்ட புதிர்கள், படப்புதிர்கள், லாஜிக் எண்கள் என்று பல வகைகள் உண்டு. அதில் லாஜிக் கணக்கு தான் உங்களுக்கு இப்போது கொடுக்கிறோம். என்ன லாஜிக் பயன்படுத்தினால் விடுபட்ட எண்ணை கொண்டு வர முடியும் என்று சிந்தித்து பாருங்கள்.
கொடுக்கப்பட்டுள்ள செவ்வகத்தில் மொத்தம் ஐந்து எண்கள் உள்ளன. கட்டத்தை சுற்றி உள்ள நான்கு எண்களை வைத்து கணக்கு போட்டால் உள்ளே இருக்க எண் வந்துவிடும். ஆனால் சுற்றியுள்ள எண்களை என்ன முறையில் கணக்கிட வேண்டும் என்பதை நீங்கள் தான் கண்டுபிடிக்க வேண்டும். அதை கண்டுபிடித்துவிட்டால் கணக்கு தீர்ந்துவிடும்.
பாதி கணக்கையே சொல்லிவிட்டோம். அதை கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. பக்கவாட்டு எண்களை வைத்து முயற்சி செய்யுங்கள். குறுக்கு எண்களை வைத்து ஏதேனும் செய்ய முடிகிறதா என்று பாருங்கள். கண்ணில் பார்த்து கணக்கை போடுவது சிரமம். ஒரு பேப்பர் , பேனா எடுத்து கிறுக்கி பாருங்க. கணக்கு எல்லாம் போட போடத் தான் வரும். விடை வந்துவிட்டதா?
விடையை நெருங்கி இருப்பீர்கள் என்று நம்புகிறேன். சரி விடைக்கு வருவோம். இதில் ஒரு சில லாஜிக் தான். கட்டத்தில் மேலுள்ள எண்ணையும் கீழ் உள்ள எண்ணையும் கூட்ட வேண்டும். இடம் உள்ள எண்ணில் இருந்து வலம் உள்ள எண்ணை கழிக்க வேண்டும். கிடைக்கும் இரண்டு எண்களையும் பெருக்கினால் நடுவில் உள்ள எண் கிடைத்துவிடும்.
முதல் செவ்வகத்தை பார்ப்போம்,
(12 + 4) x (8 – 5)
=> 16 x 3
=> 48 நடுவில் உள்ள எண் கிடைத்து விட்டது.
அடுத்த கட்டத்தை பார்ப்போம்.
=> (15 + 4) x (11 - 5)
=> 19 x 6
=> 114
இதையும் முயற்சி செய்து பாருங்கள்: இந்த கணக்கில் உள்ள லாஜிக்கை 40 வினாடிக்குள் கண்டுபிடித்து பதில் சொல்லுங்க பார்ப்போம்
இறுதியாக கேள்வி உள்ள கட்டத்தில் உள்ள எண்களை கணக்கிட்டு பார்க்கலாம்,
=> (18 + 3) x (18 - 12)
=> 21 x 6
=> 126
எனில் 126 என்பது தான் சரியான விடை. உங்களுக்கும் இந்த விடை தான் வந்திருக்கும் என்று நம்புகிறோம்.இல்லை என்றாலும் கவலை பட வேண்டாம். லாஜிக் புரிந்துவிட்டது தானே. மீண்டும் முயற்சி செய்து பாருங்கள். சரியான விடை நிச்சயம் கிடைக்கும். கணக்கை போட்டுக்கொண்டே இருந்தால் தான் எளிதாகும். அதனால் நிறைய கணக்கு புதிர்களை முயற்சி செய்து பாருங்க.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Trending