முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / Math riddle | இந்த எண் பிரமிடில் உச்சியில் வரும் எண்ணை கண்டுபிடிப்பவர் கணக்கில் புலிதான்..!

Math riddle | இந்த எண் பிரமிடில் உச்சியில் வரும் எண்ணை கண்டுபிடிப்பவர் கணக்கில் புலிதான்..!

கணக்கு புதிர்

கணக்கு புதிர்

ரொம்ப சிரமப்படத் தேவை இல்ல... எளிமையான கணக்கு தான். நிதானமாக யோசித்தால் புதிருக்கு விடை கிடைத்துவிடும்.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Chennai |

கணக்கு என்பது எல்லாரும் கஷ்டமான பாடம் என்ற எண்ணம் உள்ளது. அதில் பதிலை கொண்டு வருவது சிரமம். சரியாக பதிலே வராது. மனப்பாடம் கூட செய்ய முடியாது என்று நினைப்பார்கள். ஆனால் உண்மையில் கணக்கு பாடத்தை போன்ற எளிமையான பாடம் வேறு எதுவும் கிடையாது. மொத்த கணக்கு படத்தையும் கைக்குள் கொண்டு வர ஒரு சிறிய விஷயம் இருக்கிறது.

அதற்கு பெயர் தான் ‘லாஜிக்’. கணக்கு என்பது தினசரி நாம் பயன்படுத்தும் செயல்களில் இருந்து தான் உருவாகிறது. ஆனால் அந்த பாடத்தை நடத்தும்போது நமக்கு அதை இணைத்து நடத்துவதில்லை. அதனால் அதை எதோ வேற்று கிரகத்தில் இருந்து வந்த ஏலியன் பாஷை போல பார்க்கப்படுகிறது. கணக்குகளை எளிமையாக்க, அதை வைத்து புதிர்களை போட்டு அதை அவிழ்க்க முயற்சி செய்ய வைக்கிறோம்.

எல்லோருக்கும் கணக்கை எளிதாக்க சிறிய அளவிலான கணக்கு புதிர்களை தினசரி கொடுத்து வருகிறோம்.அந்த வகையில் இன்றும் மிக எளிதான ஒரு கணக்கு புதிரை கொடுக்கிறோம். அதன் லாஜிக்கை புரிந்துகொள்ள முயற்சி செய்து பாருங்க…

ஒரு கணக்கின் அடிப்படை சாரம் புரிந்துவிட்டால், அதை நிமிடத்திற்குள் முடித்துவிடலாம். அதில் உள்ள எண்களின் நேரடி கூட்டல், கழித்தல், பெருக்கல் மட்டும் இல்லாமல்  அந்த எண்களை வைத்து சிறிய அளவிலான உட்கணக்குகள் போடப்பட்டு அதை சேர்த்து ஒரு விடையாக கொடுத்திருப்பார்கள். மூளையை கொஞ்சம் கூடுதலாக கசக்க வேண்டும். கசக்கி பாருங்கள். விடை கிடைத்துவிடும்.

கொடுக்கப்பட்டுள்ள எண்கள் இடையே எதாவது தொடர்பு இருக்கிறதா என்று முதலில் பாருங்கள். அப்படி எந்த தொடர்ப்பையும் கண்டு பிடிக்க முடியவில்லை என்றால், அதை எல்லாம் கூட்டல், கழித்தல் செய்து பாருங்கள். புதிர் என்றால் நேராக இருக்காது தானே. நேராக இருந்து விட்டால் அதில் என்ன சுவாரசியம். ஆனால் இந்த கணக்கின் லாஜிக் எளிதுதான். கொஞ்சம் சிந்தித்து பார்த்தால் கிடைத்து விடும்.

1 நிமிடத்திற்குள் போடும் அளவிலான கணக்கு தான் இது. இன்னும் கொஞ்சம் முயற்சி செய்து பாருங்க. இந்நேரம் உங்களுக்கு விடை கிடைத்திருக்கும் என்று நம்புகிறோம். உங்களது விடை எங்கள் விளக்கத்தோடு ஒத்து போகிறதா என்று சரி பார்த்துக் கொள்ளுங்கள். இல்லை என்றாலும் புதிரின் லாஜிக்கை புரிந்து கொள்ளுங்கள்.

இந்த கணக்கின் அடிப்படை லாஜிக் கூட்டல் தான். 

கீழ்வரிசையில் இருந்து வருவோம்.

கீழ்வரிசையில் உள்ள எண்களை கவனியுங்கள். 1,3,5,2 என்பதை கொடுத்துள்ளனர். இந்த எண்களில் எந்த தொடர்ச்சியும் இல்லை. தொடர் லாஜிக்கும் இல்லை. எனில் இதை வைத்து எதோ கணக்கு தான் போட்டிருக்கிறார்கள். இந்த எண்களை கூட்டி பார்ப்போம்.

1+3+5+2=11

அடுத்து மேலே உள்ள வரிசைக்கு வருவோம்.அதில் உள்ள எண்கள், 2, 4, 7. இந்த எண்களையும் கூட்டி பார்ப்போம். 

2+4+7=13

மூன்றாம் அடுக்குக்கு வருவோம். அதில் உள்ள எண்கள், 9, 6. இதையும் கூட்டி கொள்வோம். 

 9+6= 15

இப்போது கீழ் இருந்து உள்ள கூட்டல் எண்களை கவனியுங்கள்.

11 , 13. 15…

இந்த எண்களின் இடையே தொடர்புகள் உள்ளதை பார்க்க முடியும். ஒற்றைப்படை எண்களின் வரிசையாக இந்த எண்கள் உள்ளது. அப்படி எனில் அடுத்து வரும் எண்ணை எளிதாக கணித்து விடலாம். அடுத்த வரிசையின் கூட்டல் 17 என்று வர வேண்டும். கேள்வி உள்ள வரிசையில் ஒரு எண் மட்டும் தான் தேவையாக உள்ளது. எனில் 17 என்பது தான் இறுதியான விடை. 

உங்கள் விடையும் 17 என்று வந்திருந்தால் வாழ்த்துகள். அப்படி வரவில்லை என்றாலும் லாஜிக் இப்போது தெரிந்து விட்டது தானே. இதே போல  புதிய புதிரை அமைத்து உங்கள் நன்பர்களிடம் போட சொல்லி கேட்டு அசத்துங்கள். லாஜிக் புரிந்துவிட்டால் நாமே புதிய புதிர்களை உருவாக்கி விடலாம்.

First published:

Tags: Trending