முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / Math Riddle | 50 நொடிக்குள் லாஜிக் புரிந்து கண்டுபிடித்தால் நீங்க தான் பாஸ்..!

Math Riddle | 50 நொடிக்குள் லாஜிக் புரிந்து கண்டுபிடித்தால் நீங்க தான் பாஸ்..!

கணித புதிர்'

கணித புதிர்'

ரொம்ப சிரமப்படத் தேவை இல்ல... எளிமையான கணக்கு தான். நிதானமாக யோசித்தால் புதிருக்கு விடை கிடைத்துவிடும்

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Chennai |

வெவ்வேறு விதமான கணித புதிர்களை தினமும் பயிற்சி செய்து வருகிறோம். புதிர்கள் மற்ற கணக்குகளை போல அல்ல. அதன் ட்ரிக் மற்றும் லாஜிக் புரிந்துவிட்டால் நிமிடத்திற்குள் அதை தீர்த்துவிடலாம் என்று உணர்ந்திருப்பீர்கள். ஆனால், ஒவ்வொரு கணக்கு புதிரும் ஒவ்வொரு லாஜிக்கை அடிப்படையாக கொண்டு இருக்கும்.

கணக்கு புதிர்களில் பல வகைகள் உண்டு. சமன்பாடுகள் கொண்ட புதிர்கள், வெறும் எண்களை கொண்ட புதிர்கள், படப்புதிர்கள், லாஜிக் எண்கள் என்று பல வகைகள் உண்டு. அதில் லாஜிக் கணக்கு தான் உங்களுக்கு இப்போது கொடுக்கிறோம். என்ன லாஜிக் பயன்படுத்தினால் விடுபட்ட எண்ணை கொண்டு வர முடியும் என்று சிந்தித்து பாருங்கள்.

புதிர்களை பொறுத்தவரை அதன் கணக்குகள், விடைகள் எல்லாம் நேரடியாக கொடுப்பட்டு இருக்காது. கொடுக்கப்பட்ட எண்களை தனியாக எடுத்து அவற்றை வைத்து கணக்கு உருட்டுகள் சில செய்தால் தான் விடை கிடைக்கும். நேரடியாக பார்த்தால் இந்த எண்களுக்கும் விடைக்கும் சம்பந்தமே இல்லையே என்று தான் தோன்றும்.

அதேபோல் கண்ணால் பார்த்தால் மட்டும் கணக்கு வந்துவிடாது. காகிதத்தை வைத்து கொஞ்சம் கிறுக்கி பாருங்கள். கொடுக்கப்பட்டுள்ள 3 எண்களை என்ன செய்தால் நடுவில் உள்ள எண் கிடைக்கும் என்று போட்டு பாருங்கள். பள்ளி அளவு கணக்கு என்று சொல்லிவிட்டோம். அதனால் கூட்டல், கழித்தல் பெருக்கல் தான் இருக்கப்போகிறது. எதை கூட்ட வேண்டும் எதை பெருக்க வேண்டும் என்று சிந்தியுங்கள்.

இந்த கணக்கு எளிதானது தான். அதிகபட்சம் 50 நொடிக்குள் இதற்கான விடையை கண்டுபிடித்துவிடலாம் கொஞ்சம் எண்களை வைத்து கவனித்து யோசியுங்கள். லாஜிக் கண்டிப்பாக பிடிபடும். விடையும் கிடைத்து விடும். சரி இந்நேரம் உங்களுக்கு விடை கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன். சரியான விடைகாண வழிமுறைகளை கீழே சொல்கிறோம். உங்கள் விடை இதே முறையில் வந்திருக்கிறதா என்று பாருங்கள்.

இந்த கணக்கின் அடிப்படை லாஜிக் என்னவென்றால், கணக்கில் உள்ள 4 எண்களில், முதல் இரண்டு எண்களை பெருக்க வேண்டும். இறுதியாக இருக்கும் இரண்டு எண்களை கூட்ட வேண்டும். பின்னர் முதல் விடையில் இருந்து இரண்டாம் விடையை கழித்தால் விடை கிடைக்கும்

முதல் வரிசையை பார்ப்போம்,

6666 = (6 * 6) - (6 + 6) = 24

இரண்டாம் வரிசையை பார்ப்போம்,

2222 = (2 * 2) - (2 + 2) = 0

இதையும் முயற்சி செய்து பாருங்க:  முக்கோணத்தில் விடுபட்ட எண்ணை 30 வினாடிகளில் கண்டுபிடித்து காட்டுங்கள் !

மூன்றாம் வரிசையை கணக்கிட்டால்,

4444 = (4 * 4) - (4 + 4) = 8

இறுதியாக கேள்விக்கு வருவோம்.

8888 = (8 * 8) - (8 + 8) = 48

எனவே 48 என்பது தான் சரியான விடை. இப்போது மீண்டும் நீங்களே முயற்சி செய்து பாருங்கள். எல்லோருக்கும் கணக்கு எளிதாக வரும். தினமும் பயிற்சி செய்யுங்கள். ஒரு நாள் நிச்சயம் உங்களுக்கும் சரியான விடை முதல் முயற்சியிலேயே கிடைத்துவிடும். நாளைய புதிரில் கூட கிடைத்துவிடலாம். விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி ....

First published:

Tags: Trending