முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / Math Riddle | முக்கோணத்தில் விடுபட்ட எண்ணை 30 வினாடிகளில் கண்டுபிடித்து காட்டுங்கள் !

Math Riddle | முக்கோணத்தில் விடுபட்ட எண்ணை 30 வினாடிகளில் கண்டுபிடித்து காட்டுங்கள் !

கணித புதிர்

கணித புதிர்

ரொம்ப சிரமப்படத் தேவை இல்ல... எளிமையான கணக்கு தான். நிதானமாக யோசித்தால் புதிருக்கு விடை கிடைத்துவிடும்

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

கணக்கு என்று சொன்னதுமே நம்மில் பலருக்கு பாகற்காயைக் கொடுத்தது போலவே இருக்கும். இதை எப்படித்தான் கடந்து போவதோ என்று சலித்துக்கொள்வோம். ஆனால், உண்மை என்னவென்றால் மற்ற எல்லா பாடங்களை விடவும் கணக்கு தான் எளிதானது. அதில் எதையும் மனனம் செய்யத்தேவை இல்லை. கணக்கை புரிந்துகொண்டால் விடை தானாக வந்துவிடும்.

அந்த புரிதலையும் கணக்கில் உள்ள லாஜிக்கையும் மக்கள் அனைவரும் புரிந்துகொள்ள பழக்கத் தான் தினமும் ஒரு எளிமையான கணக்கு புதிரை உங்களுக்கு கொடுக்கிறோம். பள்ளி மாணவர்கள் தரத்தில் இருந்து இன்றைய புதிரை தயாரித்து கொடுக்கிறோம். இதை முயற்சி செய்து பாருங்கள்….

ஒரு கணக்கின் அடிப்படை சாரம் புரிந்துவிட்டால், அதை நிமிடத்திற்குள் முடித்துவிடலாம். அதில் உள்ள எண்களின் நேரடி கூட்டல், கழித்தல், பெருக்கல் மட்டும் இல்லாமல் அந்த எண்களை வைத்து சிறிய அளவிலான உட்கணக்குகள் போடப்பட்டு அதை சேர்த்து ஒரு விடையாக கொடுத்திருப்பார்கள். மூளையை கொஞ்சம் கூடுதலாக கசக்க வேண்டும்.கசக்கி பாருங்கள்.

அதேபோல் கண்ணால் பார்த்தால் மட்டும் கணக்கு வந்துவிடாது. காகிதத்தை வைத்து கொஞ்சம் கிறுக்கி பாருங்கள். கொடுக்கப்பட்டுள்ள 3 எண்களை என்ன செய்தால் நடுவில் உள்ள எண் கிடைக்கும் என்று போட்டு பாருங்கள். பள்ளி அளவு கணக்கு என்று சொல்லிவிட்டோம். அதனால் கூட்டல், கழித்தல் பெருக்கல் தான் இருக்கப்போகிறது. எதை கூட்ட வேண்டும் எதை பெருக்க வேண்டும் என்று சிந்தியுங்கள்.

இந்த கணக்கை போட அதிகபட்சம் 30 வினாடிகள் தான் ஆகும். அதற்கு முன்னதாகவே நீங்கள் முடித்துவிட்டீர்கள் என்றால் சூப்பர் அந்த நேரத்திற்குள் விடை வராதவர்கள் கவலைப்பட வேண்டாம், ‘சித்திரமும் கைப்பழக்கம்’ என்பதுபோல் பழக பழக வந்துவிடும். விடைக்கு வருவோம்..

இந்த கணக்கின் அடிப்படை லாஜிக் என்னவென்றால் முக்கோணத்தின் மேலே உள்ள எண்ணையும் இடது முறம் உள்ள எண்ணையும் கூட்டி அதை வலதுபுறம் உள்ள எண்ணால் பெருக்க வேண்டும். அப்படி செய்தால் முக்கோணத்தின் நடுவில் உள்ள எண் கிடைத்துவிடும்.

முதல் முக்கோணத்தை பார்ப்போம்,

முக்கோணத்தின் மேல் உள்ள எண் = 7

முக்கோணத்தின் இடதுபுறம் உள்ள எண் = 5

இரண்டையும் கூட்டினால்,

7 + 5 = 12

இப்போது வலதுபுறம் உள்ள எண்ணால் பெருக்கவேண்டும்.

12 * 4 = 48

முக்கோணத்தின் நடுவில் உள்ள எண் கிடைத்துவிட்டது.

அடுத்த முக்கோணத்தை பார்ப்போம்,

முக்கோணத்தின் மேல் உள்ள எண் = 9

முக்கோணத்தின் இடதுபுறம் உள்ள எண் = 6

இரண்டையும் கூட்டினால்,

9 + 6 = 15

இப்போது வலதுபுறம் உள்ள எண்ணால் பெருக்கவேண்டும்.

15 * 3 = 45

இதையும் முயற்சி செய்து பாருங்க: இந்த எண்வரிசையின் லாஜிக் கண்டுபிடித்து அடுத்து வரும் எண்ணை கண்டுபிடிங்க பார்ப்போம்!

இறுதியாக கேள்விக்கு வருவோம்,

முக்கோணத்தின் மேல் உள்ள எண் = 5

முக்கோணத்தின் இடதுபுறம் உள்ள எண் = 8

இரண்டையும் கூட்டினால்,

5 + 8 = 13

இப்போது வலதுபுறம் எண் ஏதும் கொடுக்கவில்லை. ஆனால் நடுவில் உள்ள எண் கொடுக்கப்பட்டுள்ளது. அப்போது கணக்கை தலைகீழாக செய்து பார்க்க வேண்டும். நடுவில் உள்ள எண்ணில் இருந்து நம்மிடம் இருக்கும் கூடல் எண்ணை வகுத்தால் வலதுபுறம் விடுபட்ட எண் கிடைத்துவிடும் தானே?

நடுவில் உள்ள எண் = 78

78 / 13 = 6

எனில், முக்கோணத்தில் விடுபட்ட எண் 6. உங்களுக்கும் இதே விடை வந்திருக்கிறதா? இல்லை என்றாலும் மீண்டும் முயற்சி செய்து பாருங்கள். தினமும் இப்படி எளிதான கணக்கு புதிர்களை போட்டு பாருங்கள்… உங்களுக்கும் கணக்கு கைப்பிள்ளையாக மாறிவிடும்.

First published:

Tags: Trending