வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு என்று செய்யலாம் என்று யோசிக்கும்போது ஒரு சிலர் படம், சீரிஸ், என்று பார்ப்பார்கள். சிலர் தூங்குவார்கள். ஒரு சிலர் ஓய்வு நேரத்தில் ஏதாவது கற்றுக்கொள்ள நினைப்பார்கள். சிலர் புதிர், விடுகதைகள், சுடோகு போன்றவற்றை போடுவார்கள். அப்படி புதிர்களை கட்டவிழ்ப்பவர்களுக்கும் அதை முயற்சி செய்ய நினைப்பவர்களுக்கும் ஒரு கணக்கு புதிரை கொண்டு வந்திருக்கிறோம்.
கணக்கு புதிர்களில் பல வகைகள் உண்டு. சமன்பாடுகள் கொண்ட புதிர்கள், வெறும் எண்களை கொண்ட புதிர்கள், படப்புதிர்கள், லாஜிக் எண்கள் என்று பல வகைகள் உண்டு. அதில் லாஜிக் கணக்கு தான் உங்களுக்கு இப்போது கொடுக்கிறோம். என்ன லாஜிக் பயன்படுத்தினால் விடுபட்ட எண்ணை கொண்டு வர முடியும் என்று சிந்தித்து பாருங்கள்.
ஒரே ஒரு வரி தான் மொத்த கணக்கே, அதில் கொடுக்கப்பட்டுள்ள 4 எண்கள் எந்த வரிசையில் என்ன தொடர்பை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது என்று கண்டுபிடித்து விட்டால் அதற்கு அடுத்து வரும் எண்ணை எளிதாக கணக்கிட்டு விடலாம். கணக்கும் முடிந்துவிடும். அந்த எண்களுக்கு இடையேயான சம்பந்தம் மட்டும் தான் இங்கே மேட்டர்.
ஆனால் தான் இங்கு சிக்கலும் கூட.. ஒரு பேப்பர் பென்சில் எடுத்து எண்கள் இடையே எதை கூட்டினால் அல்லது எதை பெருக்கினால் அடுத்த எண் வரும் என்று சிந்தித்து பாருங்கள். கொஞ்சம் அதிகம் சிந்திக்க வேண்டி இருக்கும். உங்கள் கற்பனை வளங்களை கூட உள்ளே புகுத்தி பாருங்க.. விடை கிடைக்கலாம்.
இந்த கணக்கை போடா அதிகபட்சம் 70 வினாடிகள் தான் ஆகும். அதற்கு முன்னதாகவே நீங்கள் முடித்துவிட்டீர்கள் என்றால் சூப்பர் போங்க… அந்த நேரத்திற்குள் வராதவர்கள் கவலைப்பட வேண்டாம், ‘சித்திரமும் கைப்பழக்கம்’ என்பது போல் பழக பழக வந்துவிடும். விடைக்கு வருவோம்..
இந்த கணக்கின் அடிப்படை லாஜிக் என்னவென்றால் வரிசையில் உள்ள எண்களை எண் வரிசைப்படி ஒரு எண்ணால் பெருக்கி, பெருக்கிய எண்ணின் இரண்டு மடங்கை கழிக்க வேண்டும். வார்த்தையால் பார்க்கும் போது கடினமாக தெரியும். கொடுக்கப்பட்டுள்ள எண்களை வைத்து பார்ப்போம்..
முதல் எண் 13 இல் இருந்து தொடங்குவோம்,
(13 * 1 ) - 1² = 13 - 1 =12
இப்போது முதல் எண்ணில் இருந்து இரண்டாவது எண் வந்து விட்டதா? இதை வைத்து அடுத்த எண்ணை முயற்சிப்போம்.
(12 * 2 ) - 2² = 24 - 4 = 20
இதேபோல நான்காவது எண்ணிற்கும் முயற்சிப்போம்.
(20 * 3 ) - 3² = 60 - 9 = 51
இதையும் முயற்சி செய்து பாருங்க: முக்கோணத்தில் விடுபட்ட எண்ணை 70 வினாடிக்குள் கண்டிச்சுட்டா நீங்க தான் சூப்பர் பாஸ்!
இப்போது இறுதியாக கேள்விக்கு வந்துவிட்டோம். இப்போது கூட இதுவரை போட்ட முறையை பயன்படுத்தி நீங்கள் உங்கள் விடையை கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். கிடைக்கவில்லை என்றால் கீழே உள்ளதை பாருங்கள்.
(51 * 4 ) - 4² = 204 -16 =188
188 என்பது தான் சரியான விடை. அவ்வளவுதான் கணக்கே. இப்போது மீண்டும் நீங்களே முயற்சி செய்து பாருங்கள். எல்லோருக்கும் கணக்கு எளிதாக வரும். தினமும் பயிற்சி செய்யுங்கள். ஒரு நாள் நிச்சயம் உங்களுக்கும் சரியான விடை முதல் முயற்சியிலேயே கிடைத்துவிடும். நாளைய புதிரில் கூட கிடைத்துவிடலாம். விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Trending