வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு என்று செய்யலாம் என்று யோசிக்கும்போது ஒரு சிலர் படம், சீரிஸ், என்று பார்ப்பார்கள். சிலர் தூங்குவார்கள். ஒரு சிலர் ஓய்வு நேரத்தில் ஏதாவது கற்றுக்கொள்ள நினைப்பார்கள். சிலர் புதிர், விடுகதைகள், சுடோகு போன்றவற்றை போடுவார்கள். அப்படி புதிர்களை கட்டவிழ்பவர்களுக்கும் அதை முயற்சி செய்ய நினைப்பவர்களுக்கும் ஒரு கணக்கு புதிரை கொண்டு வந்திருக்கிறோம்.
கணக்கு புதிர்களில் பல வகைகள் உண்டு. சமன்பாடுகள் கொண்ட புதிர்கள், வெறும் எண்களை கொண்ட புதிர்கள், படப்புதிர்கள், லாஜிக் எண்கள் என்று பல வகைகள் உண்டு. அதில் லாஜிக்கணக்கு தான் உங்களுக்கு இப்போது கொடுக்கிறோம். என்ன லாஜிக் பயன்படுத்தினால் விடுபட்ட எண்ணை கொண்டு வர முடியும் என்று சிந்தித்து பாருங்கள். சரி இன்றைய கணக்கு புதிருக்கு வருவோம்..
ஒரு கணக்கின் அடிப்படை சாரம் புரிந்துவிட்டால், அதை நிமிடத்திற்குள் முடித்துவிடலாம். அதில் உள்ள எண்களின் நேரடி கூட்டல், கழித்தல், பெருக்கல் மட்டும் இல்லாமல் அந்த எண்களை வைத்து சிறிய அளவிலான உட்கணக்குகள் போடப்பட்டு அதை சேர்த்து ஒரு விடையாக கொடுத்திருப்பார்கள். மூளையை கொஞ்சம் கூடுதலாக கசக்க வேண்டும்.
முதல் இரண்டு வரிசையில் எப்படி விடை வந்தது என்று தெரிந்துவிட்டால் லாஜிக் பிடிபட்டு விடும். விடையும் கிடைத்துவிடும். அந்த லாஜிக் தான் எப்படி என்று யோசிக்க வேண்டும். உங்களுக்கு ஒரு ஹிண்ட் கூட தருகிறோம். முதல் இரண்டு எண்களை வைத்து போடும் கணக்கின் விளைவு தான் மூன்றாவது எண்ணாக வரும். 2 மற்றும் 8 எண்களை வைத்து 9 ஐ வரவைக்க என்ன செய்ய வேண்டும் என்று யோசியுங்கள்.
கொஞ்சம் சிக்கலான லாஜிக் தான். ஆனால் அதை கண்டுபிடித்துவிட்டால். கணக்கு 10 நொடிகளில் முடிந்துவிடும். அதனால் அதிகபட்சம் 60 நொடிகள் வரை எடுத்துக் கொள்ளுங்கள். கூட்டல், கழித்தல், என்று அந்த எண்களை வைத்து என்ன செய்ய முடியும் என்று பாருங்கள். நிச்சயம் உங்களுக்கு விடை கிடைக்கும்.உங்களுக்கு விடை 8 என்று வந்திருந்தால் அது தான் சரியானது. விடை வராதவர்கள் வாழ்ந்த வேண்டாம். விளக்கத்தை படித்துவிட்டு மீண்டும் முயற்சி செய்யுங்கள்.
முதல் 2 எண்களை கூட்டி அதில் இருந்து 1 ஐக் கழித்தால் மூன்றாவது எண் வந்துவிடும். இது தான் லாஜிக்.
2 + 8 = 10 என்று வருகிறதா… அதில் இருந்து 1 ஐக் கழிக்க வேண்டும்.
10- 1 = 9 மூன்றாவது கட்டத்தில் உள்ள எண் வந்துவிட்டதா. அவ்வளவு தான். அதே போல போட்டால் விடை கிடைத்துவிடும்.
இதையும் முயற்சி செய்துபாருங்கள்: 20 நொடிக்குள் இந்த பள்ளிக் கணக்கை போட முடிகிறதா பாருங்க!
இரண்டாவது வரிசையை பார்ப்போம்,
3 * 2 = 5 - 1 = 4 விடை சரியாக வந்ததா.. இப்போது விடுபட்ட எண்ணைக் கண்டுபிடிப்போம்.
3 + 6 = 9 - 1 = 8
8 என்பது தான் சரியான விடை. எல்லோருக்கும் கணக்கு எளிதாக வரும். தினமும் பயிற்சி செய்யுங்கள். ஒரு நாள் நிச்சயம் உங்களுக்கும் சரியான விடை முதல் முயற்சியிலேயே கிடைத்துவிடும். நாளைய புதிரில் கூட கிடைத்துவிடலாம். விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி ....
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Trending