முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / Math riddle | 20 நொடிக்குள் இந்த பள்ளிக் கணக்கை போட முடிகிறதா பாருங்க!

Math riddle | 20 நொடிக்குள் இந்த பள்ளிக் கணக்கை போட முடிகிறதா பாருங்க!

கணித புதிர்

கணித புதிர்

ரொம்ப சிரமப்படத் தேவை இல்ல... எளிமையான கணக்கு தான். நிதானமாக யோசித்தால் புதிருக்கு விடை கிடைத்துவிடும்

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • chennai |

வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு என்று செய்யலாம் என்று யோசிக்கும்போது ஒரு சிலர் படம், சீரிஸ் என்று பார்ப்பார்கள். சிலர் தூங்குவார்கள். ஒரு சிலர் ஓய்வு நேரத்தில் ஏதாவது கற்றுக்கொள்ள நினைப்பார்கள். சிலர் புதிர், விடுகதைகள், சுடோகு போன்றவற்றை போடுவார்கள். அப்படி புதிர்களை கட்டவிழ்ப்பவர்களுக்கும் அதை முயற்சி செய்ய நினைப்பவர்களுக்கும் ஒரு கணக்கு புதிரை கொண்டு வந்திருக்கிறோம்.

கணக்கு புதிர்களில் பல வகைகள் உண்டு. சமன்பாடுகள் கொண்ட புதிர்கள், வெறும் எண்களை கொண்ட புதிர்கள், படப்புதிர்கள், லாஜிக் எண்கள் என்று பல வகைகள் உண்டு. அதில் லாஜிக் கணக்கு தான் உங்களுக்கு இப்போது கொடுக்கிறோம். என்ன லாஜிக் பயன்படுத்தினால் விடுபட்ட எண்ணை கொண்டு வர முடியும் என்று சிந்தித்து பாருங்கள்.

இதில் மூன்று வட்டங்கள் உள்ளது. முதல் இரண்டு வட்டங்களும் எதோ ஒரு லாஜிக் வைத்து நிரப்பப்பட்டுள்ளது. அந்த லாஜிக் கண்டுபிடித்துவிட்டால் மூன்றாவது வட்டத்தில் விடுபட்ட எண்ணை நிரப்பிவிடலாம். ஆனால் அந்த லாஜிக் என்னவென்பதை தான் கண்டுபிடிக்க வேண்டும். மிக எளிமையான கணக்கு தான் 4 ஆம் வகுப்பு மாணவன் போடும் நிலையில் தான் கொடுத்துள்ளோம். அதனால் இந்த புதிரை பள்ளி மாணவன் முதல் யார் வேண்டுமானாலும் தீர்க்கலாம்.

பள்ளி கணக்கு தான் சொல்லி இருக்கிறோம். எனில் பெரிய பெரிய கணக்குகளாக இருக்காது. வட்டத்தில் உள்ள எண்களைக் கூட்டி பாருங்கள். பெருக்கல், அல்லது கழித்தல் முறையில் கொடுக்கப்பட்டுள்ளதா என்று சிந்தித்து பாருங்கள். கண்ணால் பார்த்து கணக்கைப் போட முடியாது. ஒரு காகிதம் எடுத்து கிறுக்கி பாருங்கள். நிச்சயம் விடை வந்தே தீரும்.

இந்த கணக்கை எல்லாம் 20 வினாடிகளில் போட்டு விடலாம். முயற்சி செய்து பாருங்கள். மீண்டும் ஒரு முறை கூட அதன் எண்களை கூர்ந்து கவனித்து பாருங்கள். விடை கிடைத்து விட்டது தானே..! அப்படி வரவில்லை என்றாலும் கவலை பட வேண்டாம். விளக்கத்தை படித்து பாருங்கள் லாஜிக் புரிந்துவிடும். மீண்டும் முயற்சிக்கலாம்.

இந்த கணக்கின் அடிப்படை லாஜிக் ஒன்றே ஒன்றுதான். அதுவும் எளிமையானது தான். கேட்டதும் அட இதை கவனிக்கலையே என்று தான் நினைப்பீர்கள். ஒவ்வொரு வட்டத்தில் இருக்கும் எண்களின் கூட்டுத்தொகையும் 9 என்று வரவேண்டும். அவ்வளவு தான் கணக்கே. இப்போது கூட கணக்கை எடுத்து பாருங்கள். விடை வராதவர்களுக்கு கூட விடை வந்து விடும்.

முதல் வட்டத்தை எடுத்துக்கொண்டால், 3,4,2 ஆகிய எண்கள் உள்ளது. அதன் கூட்டல் தொகை, 3+4+2=9 என்று வந்துவிட்டது.

அடுத்த வட்டத்தை எடுத்துக் கொண்டால், 1, 2 , 6 உள்ளது. இதன் கூட்டுத்தொகை, 1+2+6=9 என்றாகிவிட்டது.

இதையும் முயற்சி செய்து பாருங்கள்: மூன்று நிமிடம் டைம்.. விடுபட்ட மூன்று எண்களை கண்டுபிடிங்க பார்ப்போம்..!

இப்போது மூன்றாவது வட்டத்திற்கு வருவோம். 5, 0 கொடுக்கப்பட்டுள்ளது. இதில் எந்த எண்ணை சேர்த்தால் 9 வரும் என்று யோசியுங்கள். 4 என்ற எண் போதுமானது தானே?

5+4+0= 9

எனில் 4 என்பது தான் சரியான விடை. எல்லோருக்கும் கணக்கு எளிதாக வரும். தினமும் பயிற்சி செய்யுங்கள். ஒரு நாள் நிச்சயம் உங்களுக்கும் சரியான விடை முதல் முயற்சியிலேயே கிடைத்துவிடும். நாளைய புதிரில் கூட கிடைத்துவிடலாம். விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி.

First published:

Tags: Trending