வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு என்று செய்யலாம் என்று யோசிக்கும்போது ஒரு சிலர் படம், சீரிஸ், என்று பார்ப்பார்கள். சிலர் தூங்குவார்கள். ஒரு சிலர் ஓய்வு நேரத்தில் ஏதாவது கற்றுக்கொள்ள நினைப்பார்கள். சிலர் புதிர், விடுகதைகள், சுடோகு போன்றவற்றை போடுவார்கள். அப்படி புதிர்களை கட்டவிழ்ப்பவர்களுக்கும் அதை முயற்சி செய்ய நினைப்பவர்களுக்கும் ஒரு கணக்கு புதிரை கொண்டு வந்திருக்கிறோம்.
கணக்கு புதிர்களில் பல வகைகள் உண்டு. சமன்பாடுகள் கொண்ட புதிர்கள், வெறும் எண்களை கொண்ட புதிர்கள், படப் புதிர்கள், லாஜிக் எண்கள் என்று பல வகைகள் உண்டு. அதில் லாஜிக் கணக்கு தான் உங்களுக்கு இப்போது கொடுக்கிறோம். என்ன லாஜிக் பயன்படுத்தினால் விடுபட்ட எண்ணை கொண்டு வர முடியும் என்று சிந்தித்து பாருங்கள்.
இதில் நடுவில் ஒரு 4 x 4 கட்டம் கொடுத்துள்ளோம். அது தான் புதிரே. அதில் இடையில் மூன்று எண்கள் விடுபட்டுள்ளது. சுற்றி கொடுக்கப்பட்டுள்ள 4 தெரிவுகளில் எந்த எண்கள் சரியாக பொருந்தும் என்று கணக்கிட்டு கண்டுபிடித்தால் போதும். விடைகளையும் கொடுத்துவிட்டோம். அதில் எது சரியானது என்று கண்டுபிடித்தால் மட்டும் போதும். எளிமையான லாஜிக் தான்.
கொடுக்கப்பட்டுள்ள கட்டத்தில் இருக்கும் எண்களைக் கூர்ந்து கவனியுங்கள்.
எந்த முறையில் அந்த எண்கள் அடுக்கப்பட்டிருக்கிறது என்று யோசித்து பாருங்கள். கட்டத்தில் குறுக்காக உள்ள எண்களை பாருங்கள், இடம்-வலம், மேல் -கீழ் வரிசை என்று அனைத்து வகைகளிலும் அலசி ஆராய்ந்து பாருங்கள். இரண்டு வரிசைகளை கவனித்தால் நிச்சயம் லாஜிக் பிடிபட்டு விடும்.
அதிகபட்சம் 3 நிமிடங்கள் வரை எடுத்துக்கொள்ளலாம். எனவே மீண்டும் கொஞ்சம் மூளையை கசக்குங்க. கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் என்று ஏதாவது பொருந்துமா என்று கூட முயலுங்கள். உங்களுக்கு விடை வந்திருக்கும் என்று நம்புகிறேன். அப்படி வரவில்லை என்றாலும் கவலை பட வேண்டாம். விளக்கத்தை படித்து பாருங்கள் லாஜிக் புரிந்துவிடும். மீண்டும் முயற்சிக்கலாம்.
இந்த கணக்கில் உள்ள ஒரே ஒரு லாஜிக் என்னவென்றால் இந்த கட்டத்தில் உள்ள இடம்-வலம், மேல் -கீழ் வரிசை என்று எதை கூடினாலும் 20 என்ற மதிப்பு வரவேண்டும். அவ்வளவு தான் அதை வைத்து விடுபட்ட இடத்தில் எதை போட்டால் மொத்த வரிசையின் மதிப்பு 20 என வரும் என்று கணக்கிட்டால் புதிர் முடிந்துவிடும்.
முதல் கிடைமட்ட வரிசையை எடுத்துக்கொள்வோம்,
இடம்-வலம் வரிசையில் உள்ள எண்களை கூட்டி பார்ப்போம்,
8 + 6 + 4 + 2 = 20
அதேபோல முதல் செங்குத்து வரிசையில் மேல் -கீழ் உள்ள எண்களை கூட்டலாம்,
8 + 7 + 4 + 1 = 20
இப்போது விடுபட்ட எண்கள் இருக்கும் வரிசையில் எதை போட்டால் 20 வரும் என்று பார்க்கலாம். இரண்டாவது கிடைமட்ட வரிசையில் ஒரு எண் இல்லை..அதன் மற்ற எண்களை கூட்டி பார்ப்போம்.
7 + 6 + ? + 2 =20
15+ ? = 20
மற்ற எண்களின் கூட்டல் 15 என்று கிடைத்துள்ளது. எனில் இதோடு எந்த எண்ணைக் கூட்டினால் 20 வரும்? 5 என்பது சரியான விடை. இப்போது, இரண்டாவது கிடைமட்ட வரிசையில் 5 வரும் என்று தெரிந்துவிட்டது.விடைகளில் A,C,D ஆகிய 3 தெரிவுகளிலும் 5 உள்ளது. எனவே அடுத்த எண்ணை கண்டுபிடிக்கலாம்.
இதையும் முயற்சி செய்து பாருங்கள்: சின்ன ட்ரிக் தான்.. 90 நொடிகளில் புதிரை தீர்த்துவிட்டால் நீங்க தான் புத்திசாலி..!
அடுத்து இரண்டாவது செங்குத்து வரிசையில் ஒரு எண்ணை கண்டுபிடிக்க வேண்டும். மற்ற எண்களை கூட்டி 20 மதிப்பை அடைய எவ்வளவு குறைவாக உள்ளது என்று பார்ப்போம்,
6 + 6 + ? + 4 = 20
16 + ? = 20
20-16 = 4
எனவே இரண்டாவது செங்குத்து வரிசையில் வரும் 4 என்ற மதிப்பை கண்டுபிடித்துவிட்டோம். விடைகளில் A,D ஆகிய 2 தெரிவுகளிலும் 4 உள்ளது. இதில் எது விடை என்று கண்டுபிடிக்க 3 ஆவது செங்குத்து வரிசையில் கிடைத்த மதிப்பை சேர்த்து கணக்கிடுவோம்.
4 + 5 + ? + 7 = 20
16 + ? = 20
20 - 16 = 4
இப்போது மிஸ் ஆன மூன்று எண்களும் கிடைத்துவிட்டது. இதை அடுக்கினால் விடைகளில் A என்ற தெரிவு தான் சரியாக பொருந்தும். விடை கிடைத்துவிட்டது தானே? நீங்களே மீண்டும் தனியாக முயற்சி செய்து பாருங்கள் .
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Trending