முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / Math riddle | சின்ன ட்ரிக் தான்.. 90 நொடிகளில் புதிரை தீர்த்துவிட்டால் நீங்க தான் புத்திசாலி..!

Math riddle | சின்ன ட்ரிக் தான்.. 90 நொடிகளில் புதிரை தீர்த்துவிட்டால் நீங்க தான் புத்திசாலி..!

கணித புதிர்

கணித புதிர்

ரொம்ப சிரமப்படத் தேவை இல்ல... எளிமையான கணக்கு தான். 1 நிமிடம் நிதானமாக யோசித்தால் புதிருக்கு விடை கிடைத்துவிடும்.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

வெவ்வேறு விதமான கணித புதிர்களை தினமும் பயிற்சி செய்து வருகிறோம். புதிர்கள் மற்ற கணக்குகளை போல அல்ல. அதன் ட்ரிக் மற்றும் லாஜிக் புரிந்துவிட்டால் நிமிடத்திற்குள் அதை தீர்த்துவிடலாம் என்று உணர்ந்திருப்பீர்கள். ஆனால் ஒவ்வொரு கணக்கு புதிரும் ஒவ்வொரு லாஜிக்கை அடிப்படையாக கொண்டு இருக்கும்.

ஒரு கணக்கின் அடிப்படை சாரம் புரிந்துவிட்டால், அதை நிமிடத்திற்குள் முடித்துவிடலாம். அதில் உள்ள எண்களின் நேரடி கூட்டல், கழித்தல், பெருக்கல் மட்டும் இல்லாமல் அந்த எண்களை வைத்து சிறிய அளவிலான உட்கணக்குகள் போடப்பட்டு அதை சேர்த்து ஒரு விடையாக கொடுத்திருப்பார்கள். மூளையை கொஞ்சம் கூடுதலாக கசக்க வேண்டும். சரி இன்றைய கணக்கிற்கு வருவோம்.

முதல் இரண்டு சமன்பாடுகளை தீர்க்கும்போதே கணக்கின் ட்ரிக் தெரிந்து விடும். அதை மற்ற சமன்பாடுகளில் போட்டு சரி பார்த்தல் விடை தானாக கிடைத்துவிடும். இந்த கணக்கை போட அதிகபட்சம் 90 வினாடிகள் ஆகும். அதற்குள் நீங்கள் நிச்சயம் கண்டுபிடித்து விடுவீர்கள். முயற்சி செய்து பாருங்கள். இடதுபக்கம் உள்ள எண்களை பெருக்கல் செய்தால் மட்டும் விடை கிடைத்துவிடாது என்று உங்களுக்கு பார்த்ததும் தெரிந்திருக்கும்.

ஆனால் அந்த விடையில் உள்ள எண்களை ஏதாவது செய்து பார்த்தால் கொடுக்கப்பட்டுள்ள விடை கிடைக்கிறதா பாருங்கள். பாதி விடையை சொல்லிவிட்டோம். மீண்டும் ஒரு முறை கணக்கை போட்டு முயற்சி செய்து பாருங்கள். நிச்சயம் விடை கிடைக்கும்.

போட்டீர்களா... உங்களுக்கு 10 என்று விடை கிடைத்திருந்தால் அது தான் சரியானது. அப்படி கிடைக்கவில்லை என்றால் கீழுள்ள விளக்கத்தை படித்துப்பாருங்கள்.

ஒவ்வொரு சமன்பாடுகளாகத் தீர்க்க ஆரம்பிக்கலாம். ஒவ்வொரு சமன்பாட்டின் உண்மையான பெருக்கல் பலன்களை முதலில் கண்டுபிடித்துக் கொள்ளலாம்

=> 11 x 11 = 121

=> 22 x 22 = 484

=> 33 x 33 = 1089

=> 44 x 44 = 1936

இப்போது, ​​ஒவ்வொரு சமன்பாட்டிலும் உள்ள அனைத்து பெருக்கல் பலன்களின் ஒவ்வொரு இலக்கத்தையும் கூட்டுவோம். அப்போது கொடுக்கப்பட்டுள்ள விடை வருகிறதா என்று பாப்போம்.

=> 11 x 11 = 121 = 1 + 2 + 1 = 4

முதல் சமன்பாட்டிற்கு சரியாக வந்துவிட்டது. மற்ற சமன்பாடுகளையும் பார்ப்போம்.

இதையும் முயற்சி செய்து பாருங்க: லாஜிக் கண்டுபிடிங்க... 1 நிமிடத்தில் புதிருக்கு விடை கிடைத்துவிடும்! - இதை ட்ரை பண்ணி பாருங்க!

=> 22 x 22 = 484 = 4 + 8 + 4 = 16

=> 33 x 33 = 1089 = 1 + 0 + 8 + 9 = 18

=> 44 x 44 = 1936 = 1 + 9 + 3 + 6 = 19

எல்லாவற்றிற்கும் சரியாக பொருந்துகிறது. இப்போது  இந்த லாஜிக் பயன்படுத்தி இறுதி சமன்பாட்டையும் தீர்ப்போம்…

=> 55 x 55 = 3025

=> 55 x 55 = 3025 = 3 + 0 + 2 + 5 = 10

சரியான விடை கிடைத்துவிட்டது. அவ்வளவு தான் மக்களே..! எளிமையாக தானே இருக்கிறது. இனி கணக்கு புதிர்களை பார்த்து பயப்பட வேண்டாம். இனி எந்த கணக்காக இருந்தாலும் ஒரு கை பார்த்துவிடலாம் தானே?

First published:

Tags: Trending