முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / இந்த கணக்கை 50 வினாடிகளில் போட்டு விடலாம். முயற்சி செய்து பாருங்களேன்!

இந்த கணக்கை 50 வினாடிகளில் போட்டு விடலாம். முயற்சி செய்து பாருங்களேன்!

கணித புதிர்

கணித புதிர்

கணக்கின் மைப்புள்ளியே லாஜிக் தான். அந்த முடிச்சை அவிழ்த்துவிட்டால் கணக்கு தீர்ந்துவிடும்

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Chennai |

வெவ்வேறு விதமான கணித புதிர்களை தினமும் பயிற்சி செய்து வருகிறோம். புதிர்கள் மற்ற கணக்குகளை போல அல்ல. அதன் ட்ரிக் மற்றும் லாஜிக் புரிந்துவிட்டால் நிமிடத்திற்குள் அதை தீர்த்துவிடலாம் என்று உணர்ந்திருப்பீர்கள். ஆனால் ஒவ்வொரு கணக்கு புதிரும் ஒவ்வொரு லாஜிக்கை அடிப்படையாக கொண்டு இருக்கும்.

ஒரு கணக்கின் அடிப்படை சாரம் புரிந்துவிட்டால், அதை நிமிடத்திற்குள் முடித்துவிடலாம். அதில் உள்ள எண்களின் நேரடி கூட்டல், கழித்தல், பெருக்கல் மட்டும் இல்லாமல் அந்த எண்களை வைத்து சிறிய அளவிலான உட்கணக்குகள் போடப்பட்டு அதை சேர்த்து ஒரு விடையாக கொடுக்கப்பட்டிருக்கும். மூளையை கொஞ்சம் கூடுதலாக கசக்க வேண்டும். சரி இன்றைய கணக்கிற்கு வருவோம்.

கணக்கு வரிசையில் முதல் விடை எப்படி வந்தது என்பதை கண்டுபிடித்துவிட்டாலே பாதி வேலை முடிந்துவிடும். முதல் வரிசை எண்களை பிரித்து - சேர்த்து , கூட்டி, கழித்து பார்த்தால் விடை கிடைத்து விடும். நேரடியாக கொடுக்கப்பட்டுள்ள கணக்கை மட்டும் போடாமல் பொதுவாக ஏதாவது லாஜிக் மறைந்திருக்கிறதா யோசித்து பாருங்கள்.

இந்த கணக்கு பள்ளி குழந்தைகள் போடும் தரத்தில் தான் உள்ளது. பள்ளி மாணவர்கள் முதல் யார் வேண்டுமானாலும் முயற்சி செய்யலாம். எளிமையான ட்ரிக் தான். கணக்கிற்குளேயே யோசிக்காமல் பொதுவாக அந்த எண்களை வைத்து யோசித்து பாருங்கள். இது தான் இந்த கணக்கிற்கான ஹிண்ட்.

இந்த கணக்கை போட அதிகபட்சம் 50 வினாடிகள் தான் ஆகும். மீண்டும் ஒரு முறை இந்த எண்களை குலுக்கி எடுத்து விடை எப்படி வந்தது என்று போட்டுப்பாருங்கள். விடை கிடைக்காமல் போகாது. விடை கிடைத்துவிட்டது என்று நம்புகிறோம். உங்களுக்கு 32 என்று விடை கிடைத்திருந்தால் அது தான் சரியானது. எப்படி வந்தது என்பதை சொல்கிறோம்.

இந்த கணக்கின் பொதுவான லாஜிக் என்னவென்றால் அனைத்து எண்களையும் தனித்தனியாக கூட்டி இரண்டால் பெருக்க வேண்டும். அவ்வளவு தான் இப்போது சொல்லுங்கள்…இந்த கணக்கு ஈஸி தானே. இப்போது கூட மீண்டும் ஒரு முறை முயற்சி செய்து பாருங்க.

11 + 11 = (1 + 1) + (1 + 1) = 4 * 2 = 8

13 + 13 = (1 + 3) + (1 + 3) = 8 * 2 = 16

15 + 15 = (1 + 5) + (1 + 5) = 12 * 2 = 2

17 + 17 = (1 + 7) + (1 + 7) = 16 * 2 = 32

இதையும் முயற்சி செய்து பாருங்க : வெறும் கூட்டல், பெருக்கல் தான் .. 2 நிமிடத்திற்குள் கணக்கை போட்டு முடிங்க பார்க்கலாம்!

அவ்வளவு தான் கணக்கே. எல்லோருக்கும் கணக்கு எளிதாக வரும். தினமும் பயிற்சி செய்யுங்கள். ஒரு நாள் நிச்சயம் உங்களுக்கும் சரியான விடை முதல் முயற்சியிலேயே கிடைத்துவிடும். நாளைய புதிரில் கூட கிடைத்துவிடலாம். விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி ....

First published:

Tags: Trending