முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / எனக்கு கணக்கு வராது என்று இனி சொல்லாதீங்க... இதை ட்ரைப் பண்ணி பாருங்க..!

எனக்கு கணக்கு வராது என்று இனி சொல்லாதீங்க... இதை ட்ரைப் பண்ணி பாருங்க..!

கணக்கு புதிர்

கணக்கு புதிர்

கணக்கை எண்களாக பார்க்கும் போது தான் அது பெரிதாகவும் சிக்கலாகவும் தோன்றும். அதை விட படங்களாக பார்க்கும் போது ஆர்வமாக இருக்கும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

உங்களுக்கு பிடிக்காத பாடம் எது என்று கேட்டால் பெரும்பாலும் கணக்கு என்றுதான் சொல்வார்கள். ஆனால், உண்மையில் எல்லா பாடங்களை விட எளிமையானது  கணக்கு பாடம் தான். புரிதலும் ஆழ்ந்த ஈடுபாடும் இருந்தால் மட்டும் போதும். எந்த கணக்காக இருந்தாலும் நிமிடங்களில் போட்டு தூசி தட்டிவிடலாம். 

எந்த கணக்காக இருந்தாலும் அதை சிறுவயதில் நாம் கேட்ட விடுகதையை போல் நினைத்துக்கொள்ளுங்கள். கணக்கை எண்களாக பார்க்கும் போது தான் அது பெரிதாகவும் சிக்கலாகவும் தோன்றும். அதை விட படங்களாக பார்க்கும் போது ஆர்வமாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் எனது இந்த விடுகதையை தீர்க்க முயற்சி செய்யலாம்.

என்ன படங்களை பார்த்ததும் தலை சுற்றுவது போல இருக்கிறதா? இன்னும் கொஞ்சம் முயற்சி செய்து பாருங்கள் . ஹிண்ட் கூட கொடுக்கிறேன்... ஒரே மாதிரியான படங்கள் நிச்சயம் ஒரே மதிப்பை தான் பெற்றிருக்கும்... அப்படி பார்த்தால் கணக்கு 20 நொடிகளில் முடிந்து விடும். திரும்ப கணக்கை கவனித்து பாருங்களேன்...

சரி விடையை பார்ப்போமா? படங்களில் உள்ளதை கொஞ்சம் வரிசை மாற்றி பார்க்கலாம். அப்போது கணக்கு எளிதாகும். இரண்டாவது வரிசையை பாருங்கள்! ஒரே மாதிரியான 2 கிறிஸ்மஸ்   பந்துகள் இருக்கின்றதா ?

ஒரே மாதிரியான படங்கள் நிச்சயம் ஒரே மதிப்பை தான் பெற்றிருக்கும் என்று சொன்னோம் அல்லவா?

பந்து +பந்து=14 எனில் இரண்டு பந்துகளை கூட்டினால்,

2*பந்து =14

பந்து =14/2

பந்து =7

எனவே ஒரு பந்தின் மதிப்பு 7 என்று தெரிந்துவிட்டது.

இந்த பந்தோடு இருக்கும் வேறு வரிசை இருக்கிறதா என்று பாருங்கள். மூன்றாவது வரிசை இருக்கிறது.

ஏற்கனவே பந்தின் மதிப்பு 7 என்று தெரியும்.

7- மரம் = 6

மரம் = 7-6 =1

அப்போது கிறிஸ்மஸ் மரத்தின் மதிப்பு 1 என்று தெரிந்து விட்டது.

மரம் இருக்கும் முதல் வரிசையை கவனியுங்கள்,

பரிசு + மரம்= 10 என்றால் இப்போது கணக்கு பாதி தீர்ந்தது தானே,

பரிசு +1= 10

பரிசு = 10-1 =9

எனவே பரிசின் மதிப்பு =9 என்று தெரிந்து விட்டது.

இறுதியாக, நான்காவது வரிசைக்கு வரலாம்,

பரிசு + பனி மனிதன் = 14

பரிசின் மதிப்பு =9 என தெரியும்,

9+பனி மனிதன் =14

பனி மனிதன் =14 - 9

பனி மனிதன் = 5  விடை கிடைத்துவிட்டது!

இப்போது சொல்லுங்கள் கணக்கு எளிதுதானே ? விளக்கத்திற்கு முன்பே விடை கண்டுபிடித்திருந்தால் இனி உங்களுக்கு கணக்கு எல்லாம் அசால்ட்டாக வரும். முயற்சி செய்து பாருங்க.

First published:

Tags: Entertainment