வீட்டு சாதனங்கள் விற்பனை செய்யும் கடையின் வெளியே அமர்ந்து டிவியை வேடிக்கைப் பார்க்கும் குழந்தைகளுக்கு கடை ஊழியர் ஒருவர் கார்டூன் படம் போட்டுக்காட்டும் வீடியோ வைரலாகி வருகிறது.
அன்பு சூழ் உலகில் அன்பை காட்டுவதற்கும் பெறுவதற்கும் தயக்கம் என்பது கூடவே கூடாது. இந்த இயந்திர உலகில் காலத்தின் பின்னால் அனைவரும் ஓடிக்கொண்டிருக்கும் தருணத்தில் யாரோ ஒருவர் மற்றவருக்கு தேவையான அன்பை மிக அழகாக கொடுத்து செல்கின்றனர். அப்படி ஒரு சாம்பவம் தான் இங்கு நிகழ்ந்துள்ளது.
வீட்டு சாதனங்களை விற்பனை செய்யும் பிரபலமான கடையின் வாசலில் டிவி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதனை கடைக்கு வெளியே அமர்ந்து இரண்டு குழந்தைகள் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இதனை கவனித்த கடை ஊழியர் ஒருவர் வேகமாக வெளியே வந்து அந்த டிவியில் குழந்தைகளுக்கு பிடித்தமான கார்டூன் சேனலை மாற்றி வைக்கிறார்.
View this post on Instagram
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியான இந்த வீடியோ தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது. இதுபோன்ற பல சம்பவங்கள் நடப்பதை நாம் அறிந்திருப்போம். இதேப்போன்று பர்கர் கிங் நிறுவனத்தின் கிளை மேலாளராக இருக்கும் ஒருவர், ஏழை சிறுமி ஒருவருக்கு தனது சொந்த காசில் பர்கர் வாங்கிக் கொடுத்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வந்தது குறிப்பிடதக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.