குடிச்சுட்டு பைக் ஓட்டியவரின் பரிதாப நிலை.. காவல்துறை பகிர்ந்த வீடியோ

சிசிடிவி காட்சிகள்

சைபராபாத் போக்குவரத்து காவல்துறையினர் மதுபோதையில் பைக் ஓட்டி சென்றவரின் பரிதாப காட்சிகளை வெளியிட்டுள்ளனர்.

 • Share this:
  தெலங்கானா மாநிலம் சைபராபாத் மாநில காவல்துறையினர் தங்கள் ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அளவுக்கு அதிகமாக மதுகுடித்து விட்டு நிதானம் இல்லாமல் சாலையில் பைக் ஓட்டும் நபரின் வீடியோ தான் அது. அவரால் சாலையில் நேராக பைக் ஓட்ட முடியமால் தட்டுதடுமாறி எதிரில் வருபவர்களை திசைமாற வைத்துள்ளார்.

  சைபராபாத் காவல்துறையினர் இந்த வீடியோவை விழிப்புணர்வுக்காக வெளியிட்டுள்ளனர். இதுப்போன்று யாரும் குடித்துவிட்டு பைக் ஓட்ட வேண்டாம் என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது. போதையில் வண்டி ஓட்டும் அவர் ஹெல்மெட் இருந்தும் அதனை அவரது பைக் கண்ணாடியில் தொங்கவிட்டுள்ளார்.  இந்த வீடியோவில் வரும் நபர் பைக் ஓட்ட முடியாமல் தடுமாறி சாலையின் ஓரத்தில் விழுந்து கிடக்கிறார். அந்த வழியாக வந்த ஜோடி ஐயோ, பாவம் முடியாமல் விழுந்து கிடக்கிறார் என்று நினைத்து அவருக்கு ஓடிவந்து உதவுகின்றனர். ஆனால் அவர் மதுபோதையில் இருப்பது உதவியபின் தான் தெரியவந்துள்ளது.

  அந்த நபர் மீண்டும் பைக்கில் ஏறி சாலையில் பைக்கை அங்கும் இங்குமாக  ஓட்டி செல்கிறார். இதனால் அந்த சாலையில் ஒரு பிரளயமே உருவாகியது. மதுபோதையில் பைக் ஒட்டியதால் எதிரில் வந்தவர்களுக்கு தான் ஆபத்து அதிகமாக இருந்தது. கடைசியாக அவர்  ஒரு கார் மீது மோதி மீண்டும் கீழே விழுகிறார்.

  இந்த வீடியோ ஃபேஸ்புக்கில் பலரால் ஷேர் செய்யப்பட்டும், லைக்ஸ்களை அள்ளியும் வருகிறது. காவல்துறையினர் இந்த விழிப்புணர்வு வீடியோ காமெடியாக இருந்தாலும் குடித்துவிட்டு பைக் ஓட்ட வேண்டாம் என்பதே முக்கியத்துவமாக அமைந்துள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: