ஒரே நேரத்தில் எட்டு ஜீன்ஸ் பேண்ட்.... திருட முயன்று சிக்கிய பெண்...! வைரல் வீடியோ

ஒரே நேரத்தில் எட்டு ஜீன்ஸ் பேண்ட்.... திருட முயன்று சிக்கிய பெண்...! வைரல் வீடியோ
News18
  • News18
  • Last Updated: November 23, 2019, 4:58 PM IST
  • Share this:
ஒரே நேரத்தில் எட்டு ஜீன்ஸ் பேண்ட்-ஐ அணிந்து திருட முயன்ற பெண் ஒருவர் சிக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஜீன்ஸ் பேண்ட் என்பது பலருக்கு சவுகரியம் அளித்தாலும், நீண்ட நேரம் அதனை அணிவதில் சிக்கல் இருக்கிறது. ஒரு ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருப்பதே சிரமமாக இருக்கும் நிலையில், ஒரு பெண் எட்டு ஜீன்ஸ் பேண்ட்-ஐ அணிந்து நூதனமாக திருட முயன்றுள்ளார்.

வெனிசூலாவைச் சேர்ந்த பெண் தான் திருடிய பேண்ட்-ஐ கழற்றும் வீடியோ வைரலாகி வருகிறது. ட்ரெயல் பார்ப்பதற்காக எடுத்துச் சென்ற எட்டு ஜீன்ஸ் பேன்ட்களையும் ஒன்றுக்கும் மேல் ஒன்றாக போட்டுக்கொண்டு கடையிலிருந்து வெளியேற முயன்றார். ஆனால், அந்தப் பெண் நடந்து செல்லும் போது சந்தேகம் அடைந்த கடையின் பாதுகாவலர் இதைக் கண்டுபிடித்துள்ளார்.


வீடியோவில், குளியலறையில் வைத்து தான் அணிந்த எட்டு ஜீன்ஸ் பேண்ட்களை அந்தப் பெண் ஒன்று ஒன்றாகக் கழட்டுகிறார். அந்தக் காவலாளி ஜீன்ஸ் பேண்ட் எண்ணிக்கையை வீடியோவாக எடுத்துக்கொண்டே கணக்கிடுகிறார்.
Woman caught stealing eight pairs of jeans by wearing them all at once from r/trashy

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
First published: November 23, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்