ராஜஸ்தானில் உள்ள தௌசா அரசு மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் மூலம் ஜெய்ப்பூரில் இருந்து தெளசா வரை காலணிகள் ஏற்றி எடுத்துச் செல்லப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. வீடியோவில், மூட்டை மூட்டையாகக் காலணிகளை ஆம்புலன்சில் இருந்து கீழே இறக்குவது தெளிவாகத் தெரிந்தது.
View this post on Instagram
அவசர காலத்தில் மக்களுக்காக இயங்க வேண்டிய அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ், இதர பணிகளுக்கு உபயோகப்படுத்தப்படுவதாக கண்டனங்கள் எழுந்தன.
இதுகுறித்து தெளசா அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவர் சிவராம் மீனா, ஆம்புலன்ஸ் டிரைவரை உடனடியாக பணிநீக்கம் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் அந்த டிரைவர் பணியில் சேர்க்கப்பட்டதாகவும், இந்த சம்பவம் குறித்த விசாரிக்கக் குழு அமைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
குழுவின் அறிக்கை வந்ததும், டிரைவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இது தீவிரமான சம்பவம் என்றும், இதற்கான முறையான விசாரணை நடத்தப்பட்டு தவறு இழைத்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ambulance, Rajasthan, Viral Video