பெண்ணின் சாதுர்யம்... ஆணின் விவேகம்... நொடிப் பொழுதில் காப்பாற்றப்பட்ட சிறுமி - அதிர்ச்சி வீடியோ

பெண்ணின் சாதுர்யம்... ஆணின் விவேகம்... நொடிப் பொழுதில் காப்பாற்றப்பட்ட சிறுமி - அதிர்ச்சி வீடியோ

நொடிப் பொழுதில் காப்பாற்றப்பட்ட சிறுமி

பெண்ணின் சாதுர்யத்தாலும் ஆணின் விவேகத்தாலும் நொடி பொழுதில் காப்பாற்றப்பட்ட சிறுமியின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

 • Share this:
  சாலையை கடப்பதற்காக பெண் ஒருவர் சாலையின் ஓரத்தில் நிற்கின்றார். அதே நேரம் அவர் அருகில் ஆண் ஒருவரும் வந்து நிற்கின்றார். இருவரும் சாலையை கடப்பதற்க்காக நின்று கொண்டிருக்கையில் எதிரே இருசக்கர வாகனத்தில் அமர்ந்திருப்பவர் ஒருவர் சிறுமியிடம் பேசிக்கொண்டிருக்கிறார். திடீரென சிறுமி யாரும் எதிர்பாராமல் சாலையை கடக்க துள்ளலோடு முன் வருகிறார்.

  இதனை எதிர்புறம் சாலையை கடக்க நின்று கொண்டிருந்த பெண் கவனித்து சட்டென்று தனது அருகில் இருந்த ஆணின் தோள்பட்டையில் கைவைத்து அவரை காப்பாற்றும் படி கூற உடனே சுதாரித்து கொண்ட இளைஞர் ஓடோடி சிறுமியை நொடிப்பொழுதில் தூக்கி விட்டு சாலையின் மறு ஓரம் நகர்ந்து விடுகின்றார்.

   

      

  நொடி புழுதியில் நடக்கும் இந்த சம்பவத்தின் வீடியோ இணையவாசிகளை கண் இமைக்காமல் காணவைத்து வைரலாகி வருகின்றது. பலரும் குழந்தயை காப்பாற்றிய ஆணுக்கும், தக்க சமயத்தில் நினைவூட்டிய பெண்ணுக்கும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

   

      

      

        உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

   
  Published by:Sankaravadivoo G
  First published: