ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

சின்ன பாம்பு என நினைத்து வாலை பிடித்த நபர்... ஆள் உயரத்திற்கு வெளியே வந்த ராஜநாகம் - ஷாக்கிங் வீடியோ

சின்ன பாம்பு என நினைத்து வாலை பிடித்த நபர்... ஆள் உயரத்திற்கு வெளியே வந்த ராஜநாகம் - ஷாக்கிங் வீடியோ

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

சின்ன பாம்பு தான் என நினைத்து அதன் வாலை பிடித்த நபருக்கு அடுத்த சில நொடிகளில் பேரதிர்ச்சி காத்திருந்தது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பார்கள். ஆனால் அப்படிப்பட்ட பாம்பை அசால்ட்டாக பிடிக்கும் வீடியோக்கள் பலவற்றை சமூக வலைதளத்தில் பார்த்து இருப்போம். பாம்பு பிடிப்பதில் மிகவும் அனுபவம் வாய்ந்தவர்கள் மட்டுமே அதில் சிறப்பாக செயல்பட முடியும். சற்று தவறினாலும் அது உயிருக்கே ஆபத்தாகி விடும். சில சமயங்களில் எப்படிப்பட்ட அனுபவம் வாய்ந்த பாம்பு பிடிப்பவர்களும் பாம்பு கடியில் சிக்கி மரணமடைந்த செய்திகளையும் நாம் கேட்டிருப்போம்.

  பாம்பு இனத்தில் மிகவும் விஷம் கொண்ட பாம்பு என்றால் அது ராஜநாகம் தான். கடித்த உடன் ரத்தம் உறைந்து கடிப்பட்டவர்கள் நொடியில் மரணத்தை சந்திப்பார்கள். அப்படிப்பட்ட ராஜநாகத்தின் கடியிலிருந்து சில நொடிகளில் ஒருவர் தப்பி உள்ள வீடியோ வெளியாகி உள்ளது.

  வீட்டின் குளியலறை ஒன்றில் பாம்பு ஒன்று நுழைந்துள்ளது. அதனை பிடிக்க சென்ற நபர் சிறிய நாகம் என்று நினைத்து அதன் வாலை பிடித்து இழுத்துள்ளார். அப்போது 14 அடி உயர ராஜநாகம் வெளியே வந்தது. இதனை சற்றும் எதிர்பார்க்காத அந்த நபர் அதிர்ச்சியில் திகைத்து போனார்.

  இந்த வீடியோ கர்நாடாக மாநிலத்தில் எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆள் உயரத்திற்கு வெளியே வந்த நாஜநாகத்தை பார்த்த, பாம்பு பிடிக்கும் நபர் ஆடிபோய் விட்டார். பயத்தில் அவர் கையில் வைத்திருந்த குச்சியை தூக்கி எரியும் காட்சிகளும் பதிவாகி உள்ளன. சற்று அவர் தாமதித்து நகராமல் இருந்திருந்தால் நாஜநாகத்தின் கொடிய விஷத்திற்கு ஆளாகி இருப்பார்.

  இந்த வீடியோவை ஐஎப்எஸ் அதிகாரி பிரவீன் கஸ்வான் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், பாம்பை பிடிப்பதற்கு முன் இருமுறை யோசியுங்கள். அதுவும் குறிப்பாக நாஜநாகத்தை பிடிக்கும் போது என்றுள்ளார். இந்த வீடியோவை பார்த்த பலர் லைக் செய்தும் பகிர்ந்தும் உள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Vijay R
  First published:

  Tags: Viral