30 ஆண்டு கால சிகரெட் பழக்கம்; அடர் கருப்பு நிறத்தில் நுரையீரல்! மிரண்டு போன மருத்துவர்கள்

30 ஆண்டு கால சிகரெட் பழக்கம்; அடர் கருப்பு நிறத்தில் நுரையீரல்! மிரண்டு போன மருத்துவர்கள்
நுரையீரல்
  • News18
  • Last Updated: November 20, 2019, 6:15 PM IST
  • Share this:
சீனாவில் 30 ஆண்டுகள் தொடர்ச்சியாக சிகரெட் புகைத்தவரின் நுரையீரல் அடர் கருப்பு நிறத்தில் இருந்ததைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சீனாவைச் சேர்ந்த 52 வயதான நபர் சுமார் 30 ஆண்டு காலம் தொடர்ச்சியாக சிகரெட் புகைக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளார். சமீபத்தில் உயிரிழந்த அவர், உடலுறுப்புகளைத் தானம் செய்வதற்கு ஒப்புக்கொண்டுள்ளார். அதனையடுத்து அவரது உடலில் அறுவைச் சிகிச்சை செய்து உடலுப்புகளை மருத்துவர்கள் அகற்றினர்.

அப்போது அவரது நுரையீரலை அகற்றியபோது மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுவரையில் மருத்துவர்கள் பார்த்திராத வகையில் நுரையீரல் அடர் கருப்பு நிறத்தில் இருந்துள்ளது. 30 ஆண்டுகாலம் சிகரெட் புகைத்ததன் விளைவாக நுரையீரல் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது.
அந்த நுரையிரலை வேறு ஒருவருக்கு பயன்படுத்த முடியாது என்று மருத்துவர்கள் மறுத்துவிட்டனர். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது. சுமார் 25 லட்சம் பேர் அந்த வீடியோவை பார்வையிட்டுள்ளனர்.

Also see:

 
First published: November 20, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்