மும்பையில் கிணற்றுக்குள் மூழ்கிய கார் - வைரலாகும் வீடியோ!

வைரலாகும் வீடியோ

பட்டப்பகலில் கார் ஒன்று நீரில் மூழ்கும் அந்த வீடியோ இணைய பக்கங்களை ஆக்கிரமித்தது. டிவிட்டர், இன்ஸ்டாகிராம் என சமூகவலைதளங்களில் வேகமாக பரவிய அந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் பார்வையிட்டுள்ளனர்.

 • Share this:
  மும்பையில் பெய்து வரும் கனமழையில் குடுயிருப்பு பகுதியில் இருந்த தரைத்தளம் உடைந்து கிணற்றுக்குள் கார் ஒன்று மூழ்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

  மும்பை நகரின் காட்கோபர் உள்ளிட்ட இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், அப்பகுதி சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் இருந்த குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தது. அதேபோல், ராம்நிவாஸ் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென பள்ளம் உருவாகி ஹூண்டாய் நிறுவனத்தின் காரும் மூழ்கியது. கார் மூழ்கும் வீடியோ சமூகவலை தளங்களிலும் வேகமாக பரவியது.

  இதுகுறித்து காவல்துறையினர் உடனடியாக விசாரணை நடத்தினர். அதில், ராம்நிவாஸ் குடியிருப்பு இருக்கும் பகுதியில் கனமழை பெய்துள்ளது. அப்போது, வழக்கம்போல் வறண்டாவில் அங்குடியிருப்பவர்கள் கார்களை நிறுத்தியுள்ளனர்.

  ALSO READ |   3000 ஆண்டுகள் பழமையான மம்மியின் ரகசியங்களை அறிய சி.டி ஸ்கேன் பயன்படுத்தும் இத்தாலி ஆராய்ச்சியாளர்கள்!

  அதில், ஹூண்டாய் வென்யூ (Hyundaai Venue) கார் நிறுத்தியிருந்த இடத்துக்கு அடியில் குடியிருப்புக்கு சொந்தமான கிணறு ஒன்று இருந்துள்ளது. கான்கிரீட் மேல்தளம் போடப்பட்டிருந்த கிணற்றின் மீது அந்த கார் நிறுத்தப்பட்டுள்ளது. கனமழை பெய்த்தால், காரின் எடையை தாங்காத கான்கிரீட் தளம் ரவுண்டாக உடைந்து பெரும் பள்ளம் உருவானது. மழைநீர் தேங்கியிருந்த அந்த பள்ளத்தில் ஹூண்டாய் காரும் மூழ்கியது. நல்வாய்ப்பாக காரில் யாரும் இருக்கவில்லை. ஆனால், கிணற்றுக்குள் விழுந்த கார் பலத்த சேதமடைந்தது.

      
  View this post on Instagram

   

  A post shared by Viral Bhayani (@viralbhayani)


  விசாரணையில் அந்தக் கார், அங்கு குடியிருக்கும் பங்கஜ் மேத்தா என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. தன்னுடைய கார் கிணற்றுக்குள் விழந்ததை பார்த்த அவர், மிகவும் சோகமாக இருந்தார். குடியிருப்பு வாசிகள் ஒன்றிணைந்து தனது காரை மீட்டுத் தர வேண்டும் என்றும், காருக்கு ஏற்பட்ட சேதத்தை சரிசெய்ய முன்வரவேண்டும் என்றும் பங்கஜ் மேத்தா கேட்டுக்கொண்டார்.

  ALSO READ |  ஆசியாவிலேயே முதல் முறையாக ஸ்னிஃபர் நாய்களுக்காக கல்லறை அமைத்த கேரள போலீஸ்!

  பட்டப்பகலில் கார் ஒன்று நீரில் மூழ்கும் அந்த வீடியோ இணைய பக்கங்களை ஆக்கிரமித்தது. டிவிட்டர், இன்ஸ்டாகிராம் என சமூகவலைதளங்களில் வேகமாக பரவிய அந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் பார்வையிட்டுள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  காம்பாக்ட் எஸ்.யூ.வி செக்மெண்டில் ஹூண்டாய் நிறுவனத்தின் பிரபலமான மாடல் கார்களுள் ஒன்றாக ஹூண்டாய் வென்யூ இருந்து வருகிறது. இந்த கார் சந்தையில்  அறிமுகப்படுத்தப்பட்டபோது மாருதி சுசூகி நிறுவனத்தின் விட்டாரா பிரெஸ்ஸா (Vitara Brezza) கடும் போட்டியை ஏற்படுத்தியது.

  ALSO READ |  பசியின் உச்சம்.. கிச்சன் சுவரை உடைத்து உணவு சாப்பிட்ட யானை - வைரல் வீடியோ

  பல்வேறு சமயங்களில் அந்த காரின் விற்பனையை விட, அதிக விற்பனையை பெற்று முன்னிலையில் இருந்தது. எக்ஸ் ஷோரூம் விலையில் தொடக்க விலையாக 6.92 லட்சத்தில் இருந்து 11.77 லட்சம் ரூபாய் வரையிலான விலையில் இந்தக் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  எலக்டிரிக் சன்ரூப், 8 இன்ச் டச்ஸ்கீரின் இன்போடெய்ன்மென்ட் சிஸ்டம், ஹெட்லேம்ப் புரோஜெக்டர், எல்.இ.டி டி.ஆர்எல்ஸ் மற்றும் ஆட்டோமேடிக் கிளைமேட் கன்ட்ரோல் ஆப்சன்கள் உள்ளன. பார்க்கிங் சென்சார் மற்றும் கேமரா வசதிகளும் ஹூண்டாய் வென்யூவில் இருப்பதால், வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
  Published by:Sankaravadivoo G
  First published: