முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / சைபர் குற்றங்களால் அதிகமான பாதிப்படைந்த நபர்களின் பட்டியலில் இந்தியாவின் இடம் பற்றிய அதிர்ச்சி தகவல்!

சைபர் குற்றங்களால் அதிகமான பாதிப்படைந்த நபர்களின் பட்டியலில் இந்தியாவின் இடம் பற்றிய அதிர்ச்சி தகவல்!

சைபர் கிரைம்

சைபர் கிரைம்

Cyber Crime | சைபர் குற்றங்களால் 2021 ஆம் ஆண்டில் மட்டுமே கிட்டத்தட்ட 1.68 பில்லியன் டாலருக்கு 60 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் இருந்து பணம் திருடப்பட்டிருக்கிறது.

  • Last Updated :

தொழில்நுட்ப ரீதியாக உலகம் பல துறைகளில் முன்னேறி வரும் அதே நேரத்தில் குற்றங்களும் புதிய வழிகளில் மக்களை பாதித்து வருகிறது. ஆன்லைன் என்பதை தவிர்க்கவே முடியாத இன்றைய காலகட்டத்தில் சைபர் குற்றங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகளில் கோடிக்கணக்கானவர்கள் சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்கா FBI இன் சமீபத்திய அறிக்கையின்படி சைபர் குற்றத்தால் பாதிக்கப்பட்ட நபர்கள் அதிகம் இருக்கும் முதல் ஐந்து உலக நாடுகளில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது என்பது அதிர்ச்சி அளிக்கும் செய்தியாக உள்ளது.

சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து கொண்டே வருவது கிட்டத்தட்ட அனைவரும் அறிந்த செய்தி தான். ஆனால் உலக அளவிலேயே முதல் ஐந்து இடங்களில் உள்ள ஒரு நாடாக இந்தியா இருப்பது கொஞ்சம் அதிர்ச்சியாகத் தான் இருக்கிறது.

முதல் ஐந்து நாடுகளில் அதிக பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கையில் நான்காவது இடத்தில் இந்தியா இருக்கிறது. FBI வெளியிட்ட இந்த அறிக்கை 2017 முதல் 2021 ஆம் ஆண்டு இறுதிவரை சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் வெளியாகியுள்ளது. நான்காவது இடத்தில் இருக்கும் இந்தியாவில் 3131 நபர்கள் சைபர் குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்றாவது இடத்தில் கிட்டத்தட்ட 6000 நபர்கள் பாதிக்கப்பட்டதாக கனடா இருக்கிறது.

Read More : உலகிலேயே மிகப்பெரிய விஸ்கி பாட்டில் ஏலத்தில் விற்பனை... விலை எவ்வளவு தெரியுமா.? 

முதல் இரண்டு இடங்களில் எதிர்பார்க்க முடியாத இரண்டு நாடுகள் லட்சக்கணக்கான சைபர் சைபர் க்ரைம் பாதிப்பாளர்களைக் கொண்டுள்ளது. இரண்டாவது இடத்தில் மூன்று லட்சத்துக்கும் மேலான பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையுடன் இங்கிலாந்தும், முதலிடத்தில் கிட்டத்தட்ட நான்கரை லட்சத்துக்கும் மேலான பாதிக்கப்பட்டவுடன் அமெரிக்காவும் உள்ளது.

இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான் சீனா ஆகிய நாடுகளில் சைபர் குற்ற த்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகக் குறைந்த அளவில் தான் உள்ளது. அதேபோல ஜப்பானிலும் குறைவான அளவு புகார்கள் தான் பதிவாகியுள்ளன. இந்த நாடுகளில் 500 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று அறிக்கையின் மூலம் தகவல் வெளியாகியுள்ளது.

சைபர் குற்றத்தால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை எத்தனை நபர்கள் புகார் செய்திருக்கிறார்கள் என்ற அடிப்படையில்தான் வெளியாகியுள்ளது. புகார்கள் தராத எவ்வளவோ நபர்கள் பாதிக்கப்பட்டு இருக்கலாம். ஃபிஷிங் பற்றி தான் அதிக நபர்கள் புகாராக பதிவு செய்திருக்கிறார்கள். இதற்கு அடுத்ததாக டெலிவரி செய்யப்படாத அல்லது பணம் செலுத்தாத போலியான / ஏமாற்றும் ஆன்லைன் பரிவர்த்தனைகள் சைபர் குற்றமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதில் அதிசயதக்க விஷயம் என்னவென்றால் சைபர் குற்றத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் முதியவர்களாக இருக்கிறார்கள். இவர்களிடம் இருந்து பெரிய அளவில் பணமும் திருடு போயிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

top videos

    2021 ஆம் ஆண்டில் மட்டுமே கிட்டத்தட்ட 1.68 பில்லியன் டாலருக்கு 60 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் இருந்து பணம் திருடப்பட்டிருக்கிறது.

    First published:

    Tags: Cyber attack, Cyber crime, Cyber fraud