முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / காரை டிரைவிங் செய்யாமல் ரீல்ஸ் மோகத்தில் மூழ்கிய ஜோடி.! - திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்..!

காரை டிரைவிங் செய்யாமல் ரீல்ஸ் மோகத்தில் மூழ்கிய ஜோடி.! - திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்..!

வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!

வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!

சமீப ஆண்டுகளாக இன்ஸ்டா அல்லது ஃபேஸ்புக் உள்ளிட்ட பிரபல சோஷியல் மீடியா பிளாட்ஃபார்ம்களில் ரீல்ஸ்கள் அல்லது ஷார்ட் வீடியோஸ் மிக வைரலான கன்டென்ட்களாக இருக்கின்றன.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சமீப ஆண்டுகளாக இன்ஸ்டா அல்லது ஃபேஸ்புக் உள்ளிட்ட பிரபல சோஷியல் மீடியா பிளாட்ஃபார்ம்களில் ரீல்ஸ்கள் அல்லது ஷார்ட் வீடியோஸ் மிக வைரலான கன்டென்ட்களாக இருக்கின்றன. சோஷியல் மீடியா மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக பலரும் வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டு லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ்களை அள்ள நினைக்கிறார்கள்.

எப்படியாவது தங்களது கன்டென்ட்களை வைரலாக்கி அதன் மூலம் செலிபிரிட்டியாகி விட வேண்டும் என்று துடிக்கிறார்கள். இந்த தேவையற்ற துடிப்பின் காரணமாக பலரும் அடிக்கடி சட்ட திட்டங்கள் மற்றும் விதிகளை மறந்துவிட்டு கன்டென்ட்ஸ்களை உருவாக்க பல ஆபத்தான விஷயங்களை செய்வதில் ஈடுபாடு காட்டுகிறார்கள்.

அப்படிப்பட்ட வீடியோ ஒன்று சில நாட்களாக சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் ஒரு ஜோடி காரில் ரீல் ஷூட் செய்வதை நம்மால் பார்க்க முடிகிறது. பூங்காக்கள் முதல் பெருநகரங்கள் வரை இன்ஸ்டா ரீல்ஸ் ஷூட் செய்யும் காட்சி தான் சகஜமான ஒன்றாக இருக்கிறதே.! காரில் ஷூட் செய்தது என்ன பெரிய விஷயமா என்று நீங்கள் நினைக்கலாம்.

Read More : கூகுள் செய்த அதிகாரிக்கு மரண தண்டனை விதித்த கிம்..! இதைத்தான் தேடினாராம் அந்த அதிகாரி..

ஆனால் இந்த வீடியோவில் ஓடும் காரில் ரீல்ஸ் எடுப்பதில் மும்முரம் காட்டுகிறது குறிப்பிட்ட ஜோடி. அதிலும் டிரைவிங் செய்ய வேண்டிய டிரைவர் சீட்டில் இருந்த அந்த ஆண், ஸ்டியரிங் பிடித்து காரை ஓட்டுவதை நிறுத்தி விட்டு முழுவதுமாக இடது பக்கம் திரும்பி தன்னுடன் பயணம் செய்யும் இளம்பெண்ணின் கையை பிடித்து இழுத்து, கையால் அந்த பெண்ணின் தலையை தட்டி விளையாட்டாக சண்டை போடுகிறார்.

ஒரு கட்டத்தில் தன்னுடைய இரண்டு கால்களையும் தூக்கி முன்பக்கத்தில் இளம்பெண் அமர்ந்திருக்கும் சீட்டின் ஹெட்ரெஸ்ட்டின் மேல் அலேக்காக தூக்கி வைத்து ரிலாக்ஸ் செய்கிறார். இந்த காட்சி முழுவதையும் பின் சீட்டில் அமர்ந்திருக்கும் யாரோ ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். கார் ஓரளவு நல்ல வேகத்தில் சென்று கொண்டிருக்கும் போது அதை பொறுப்பாக இயக்க வேண்டிய டிரைவர் சீட்டில் இருக்கும் ஆண் ரீல்ஸ்க்காக, செய்த பொறுப்பற்ற செயல்களும், அதை பார்த்தும் கூட சிறிதும் பயப்படாமல் ஜாலியாக இருக்கும் காரின் முன்சீட்டில் அமர்ந்திருக்கும் இளம்பெண்ணின் ரியாக்ஷனும் வீடியோ பார்க்கும் நம்மை பதைபதைக்க வைக்கிறது.

ரீல்ஸ் மோகத்திற்காக தன் உயிரை மட்டுமல்லாது பிறரின் உயிரையும் ஆபதில் ஆழ்த்தும் இதுபோன்ற சோஷியல் மீடியா அடிமைகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசனைகள் தொடர்ந்து வலியுறுத்தி கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். குறிப்பிட்ட இந்த ஜோடி சென்று கொண்டிருந்த கார் மஹிந்திரா நிறுவனத்தின் XUV 700 கார் என்பதும், குறிப்பிட்ட அந்த ஆண் ரீல்ஸ் செய்வதற்காக காரில் கொடுக்கப்பட்டிருக்கும் அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டென்ஸ் சிஸ்டம்ஸ் எனப்படும் ADAS அம்சத்தை பயன்படுத்தியதும் தெரிய வந்துள்ளது. ADAS-ஐ பயன்படுத்தி காரை ஓட்டி கொண்டே ரீல்ஸ்காக கேமராவுக்கு போஸ் கொடுத்து இருக்கும் நபரையும், அதனை கண்டிக்காத அந்த இளம் பெண்ணையும் நெட்டிசன்கள் திட்டி தீர்த்து வருகின்றனர்.

ஒரு ட்விட்டர் யூஸர் பதிவிட்டுள்ள கமெண்ட்ஸில் இந்தியாவில் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோலைத் தவிர, மற்ற ADAS அம்சங்கள் ஒரு ஜோக் & ஜோக்கர்கள் இதை காட்டுகிறார்கள் என காட்டமாக கூறி இருக்கிறார். மற்றொரு யூஸர் காரில் கொடுக்கப்பட்டிருக்கும் மேம்பட்ட அம்சங்களை தவறாக பயன்படுத்தி இருக்கும் இந்த ஜோடி மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்தால் சோஷியல் மீடியாவிற்காக கண்டதை செய்யும் மற்றவர்களுக்கு அது ஒரு சிறந்த பாடமாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

First published:

Tags: Trending, Viral