முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / 'டிக்கெட் எடுக்கணுமா? குழந்தையை நீங்களே வச்சிக்கோங்க’ - ஏர்போர்ட்டில் அதிகாரிகளை அலறவிட்ட பெற்றோர்!

'டிக்கெட் எடுக்கணுமா? குழந்தையை நீங்களே வச்சிக்கோங்க’ - ஏர்போர்ட்டில் அதிகாரிகளை அலறவிட்ட பெற்றோர்!

குழந்தையை விட்டு சென்ற தம்பதி

குழந்தையை விட்டு சென்ற தம்பதி

குழந்தையை விமானத்தில் ஏற்ற வேண்டும் என்றால் கூடுதல் கட்டணம் செலுத்தி டிக்கெட்  வாங்க வேண்டும் என்று கூறியுள்ளனர்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தைகள் தான் உலகம். அவர்களை பாதுகாக்க தான் பெற்றோர்கள் ஓடி ஓடி உழைக்கிறார்கள். தாங்கள் சம்பாதித்த சொத்துக்கள் எல்லாம் தங்கள் பிள்ளைகளுக்காக தான் சேரும் என்று சொல்வது தான் வழக்கம். ஆனால் இஸ்ரேலில் ஒரு தம்பதி, குழந்தைக்கு கூடுதல் டிக்கெட் வாங்க வேண்டும் என்று கூறியதற்காக குழந்தையை விமான நிலையத்திலேயே விட்டு சென்றுள்ளனர்.

இஸ்ரேல் நகரமான டெல் அவிவில் உள்ள பென்-குரியன் விமான நிலையத்தில் பெல்ஜிய பாஸ்போர்ட் வைத்திருந்த ஒரு ஆணும் பெண்ணும் தங்கள் குழந்தையோடு வந்துள்ளனர். விமான நிலையத்திற்கு தாமதமாக வந்த தம்பதி குழந்தைக்கு டிக்கெட் வாங்கவில்லை. விமான ஊழியர்கள் குழந்தையை விமானத்தில் ஏற்ற வேண்டும் என்றால் கூடுதல் கட்டணம் செலுத்தி டிக்கெட்  வாங்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

அதற்கு அந்த தம்பதி மறுப்பு தெரிவித்துள்ளனர். நீண்ட நேரம் பணம் கட்டாமல் நின்றவர்கள் பணம் செலுத்துவதற்குப் பதிலாக, ரியான்ஏர் விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு தங்கள் குழந்தையை செக்-இன் கவுண்டரில் விட்டுவிட்டு  செக்யூரிட்டி செக் பகுதிக்கு விரைந்தனர். இதை கண்ட விமான நிலைய ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

குழந்தையை விட்டு சென்ற தம்பதியை உடனடியாக அழைத்து குழந்தையை எடுத்துசெல்லுமாறு உத்தரவிட்டனர். அதோடு கூடுதல் டிக்கெட் வாங்குவதற்கு பதிலாக குழந்தையை விட்டுச்சென்ற அவர்களது செயலை கண்டித்து அந்த தம்பதியை விமான நிலைய போலீசார் கைது செய்தனர்.

டிக்கெட் வாங்க மறுத்த தம்பதி குழந்தையை செக் இன் கவுண்டரில் விட்டுச்சென்றது விமான நிலைய ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. உடனடியாக பார்க்காவிட்டால் என்ன ஆகியிருக்கும்  என்று ரியான்ஏர் ஊழியர்கள் தெரிவித்தனர்.

First published:

Tags: Airport, Israel, Trending News