Home /News /trend /

பேய் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக நினைத்துக் கொண்டிருந்த பெண் - காத்திருந்த அதிர்ச்சி

பேய் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக நினைத்துக் கொண்டிருந்த பெண் - காத்திருந்த அதிர்ச்சி

பேய் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக நினைத்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

பேய் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக நினைத்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

இரவு பேய் தான் பாலியல் சீண்டலில் ஈடுபடுகிறது என்ற பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • intern, IndiaSingaporeSingaporeSingapore
  சிங்கப்பூரைச் சேர்ந்த பெண்  ஒருவர் பேய் தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக நினைத்துகொண்டிருந்த நிலையில் சிசிடிவி கேமரா மூலம் உண்மை தெரியவந்துள்ளது. 

  வீட்டிற்கு வெளியே இடி இடித்தாலும் கூட கேட்காது என்ற அளவில் நம்மில் பலர் அசந்து தூங்குவது உண்டு. தூக்கத்தில் எது நடந்தாலும் தெரியாது. சில சமயம், ஆழ்ந்த உறக்கத்தில் கனவுகள் வரும். கனவுகள் உண்மை போலத் தோன்றினாலும் பின்னர் கண்விழித்தவுடன் அவை மாயை என்பது தெரியவரும்.

  அதிலும், இளம் வயதில் உள்ள பலருக்கு இரவு நேரத்தில் கொஞ்சம் கிளுகிளுப்பான கனவுகளும் வருவது உண்டு. இன்னும் சிலர், தான் தூக்கத்தில் இருந்தபோது தன்னை பேய் வந்து அடி, அடியென அடித்துவிட்டதாகக் கூறுவார்கள். இதுவும் கூட ஒருவித மாயை தான் என்றாலும், பேய் வந்து தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்து கொண்டதாக எவரும் கூறியதில்லை.

  ஆனால், சிங்கப்பூரைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு, இதுபோன்ற அனுபவம் நிகழ்ந்துள்ளது. இதன் பின்னணியில் உள்ள உண்மை என்னவென்று தெரிந்து கொள்வதற்காக, அந்தப் பெண் தீவிரமாக ஆராய்ந்தபோதுதான் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தன.

  கடந்த ஆண்டு மே மாதம், இந்தப் பெண் தன்னுடைய ஆண் நண்பருடன் அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள வீடு ஒன்றில் குடியேறினார். புதிதாகக் குடிவந்தவர்களிடம் சமூக ரீதியான நட்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் வீட்டின் உரிமையாளர் இவர்களுக்கு ஜூன் மாதத்தில் மது விருந்து கொடுத்தார்.

  கட்டிப்பிடித்து முத்தமிட்ட நிழல்:

  மது போதையில் நிதானம் இழந்த அந்தப் பெண் சற்று நேரத்தில் தூங்கச் சென்றுவிட்டார். சாதாரண தூக்கத்தில் இருப்பவர்களுக்கே என்ன நடக்கிறது என்று தெரியாது, அதுவும் போதையில் தூங்குபவர்களுக்கு எதுவும் புரியப்போவதில்லை.

  அந்த வகையில், இருட்டில் ஒரு உருவம் தன்னை கட்டிப்பிடித்து, முத்தமிடுவதைப் போல உணர்ந்தார் அந்த பெண். சற்று நேரம் கழித்து கண் விழித்தபோது தன்னை நெருங்கி வந்தது தன்னுடைய ஆண் நண்பராக இருக்கலாம் என்று அவரே ஆறுதல் சொல்லிக் கொண்டார்.

  ஆனால், இருட்டில் வந்த உருவத்திற்குத் தலையில் முடி இருந்தது, தன்னுடைய நண்பருக்கோ வழுக்கைத் தலை, அப்படியானால் நடந்தது என்ன என்ற குழப்பம் அந்தப் பெண்ணுக்குத் தொற்றிக் கொண்டது.

  Also Read : பாரம்பரிய முறைப்படி பங்களாதேஷ் காதலியை மணந்த சென்னை பெண்

  சிசிடிவி கேமரா வைத்து ஆராய்ச்சி:

  ஏதோ பேய் தான் தன்னிடம் தவறாக நடந்து கொள்கிறது என்று அந்தப் பெண் நினைத்துக் கொண்டார். இருப்பினும் உண்மையை அறியும் நோக்கில் படுக்கை அறையில் ரகசிய கேமரா ஒன்றை வைத்துவிட்டனர். இதற்கிடையே, ஆகஸ்ட் மாதத்தில் வீட்டின் உரிமையாளர் மற்றொரு முறை மது விருந்து கொடுத்துள்ளார்.

  அன்றைய தினமும் நிதானம் இழந்த அந்த பெண்ணும், அவரது ஆண் நண்பரும் தூங்கச் சென்றுவிட்டனர். அந்த நாளும் அதேபோன்ற பாலியல் சீண்டல் நடைபெற்றது. இதையடுத்து, காலையில் சிசிடிவி கேமராவை எடுத்து ஆராய்ந்த அந்த ஜோடியினருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

  வக்கிர எண்ணம் கொண்ட வீட்டின் உரிமையாளர் தான் இத்தனை நாளும் இந்த செயலில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பது தெரியவந்தது. 38 வயதான அந்த நபர், இரவு நேரத்தில் அத்துமீறி வந்து சீண்டலில் ஈடுபடுவதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார். இதையடுத்து அந்த நபர் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த ஜோடியினர் தற்போது வேறு வீட்டில் குடியேறிவிட்டனர்.
  Published by:Janvi
  First published:

  Tags: Sexual abuse, Sexually harrassed, Women

  அடுத்த செய்தி