Home » News » Trend » SHIRT WORN BY MARADONA WHEN HE SCORED HAND OF GOD GOAL AUCTION RIZ GHTA

விற்பனைக்கு வரும் மறைந்த மரடோனாவின் ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி.. விலை எவ்வளவு தெரியுமா?

மரடோனா 1986ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் அணிந்திருந்த ஷர்ட் ஒன்று விற்பனைக்கு வந்துள்ளது. இந்த ஷர்ட் தற்போது மான்செஸ்டரில் உள்ள இங்கிலாந்தின் தேசிய கால்பந்து அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

விற்பனைக்கு வரும் மறைந்த மரடோனாவின் ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி.. விலை எவ்வளவு தெரியுமா?
மரடோனா சுவரோவியம் (படம்: Reuters)
  • Share this:
1986ம் ஆண்டு மெக்ஸிகோவில் நடந்த உலகக் கோப்பையின் காலிறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக டியாகோ மரடோனா தனது புகழ்பெற்ற “ஹாண்ட் ஆஃப் காட்” கோலை அடித்தபோது அவர் அணிந்திருந்த ஜெர்ஸி விற்பனைக்கு வருவதாகவும், சுமார் 20 லட்சம் டாலர்களுக்கு அது கிடைக்கக்கூடும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான நட்சத்திர வீரர் மரடோனா. அர்ஜென்டினா அணி 1986ல் உலக சாம்பியன் பட்டம் வெல்ல முக்கியக் காரணமாக இருந்தவர். தாய்நாட்டு அணிக்காக 4 முறை உலக கோப்பையில் விளையாடியதுடன், இத்தாலியின் நேபோலி கிளப் அணிக்காகவும் விளையாடி தன் திறமையை வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறார்.

இவர் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் மூளையில் ரத்தம் உறைந்து பாதிப்பு ஏற்பட்டதால், அறுவை சிகிச்சை செய்துகொண்டு வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில், கடந்த 25ம் தேதி ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக அவர் மரணமடைந்தார். இதையடுத்து அவரது உடல் அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் ஏர்ஸ் அருகே உள்ள அவரது சொந்த ஊரில் பெல்லா விஸ்டா கல்லறையில் பெற்றோரின் சமாதிகளுக்கு அருகே 27ம் தேதி நல்லடக்கம் செய்யப்பட்டது.


அவரின் இறுதிச் சடங்கில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் என 30க்கும் குறைவானவர்களே பங்கேற்றாலும், இறுதி ஊர்வலத்தின்போது சாலையின் இருபுறமும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு கண்ணீர் மல்க தங்களின் பிரியாவிடையைச் செலுத்தினர்.

இந்த நிலையில், மரடோனா 1986ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் அணிந்திருந்த ஷர்ட் ஒன்று விற்பனைக்கு வந்துள்ளது. இந்த ஷர்ட் தற்போது மான்செஸ்டரில் உள்ள இங்கிலாந்தின் தேசிய கால்பந்து அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. மெக்ஸிகோ நகரில் நடந்த காலிறுதி ஆட்டத்தின் பின்னர் மரடோனாவால் முன்னாள் இங்கிலாந்து வீரர் ஸ்டீவ் ஹாட்ஜுக்கு இந்தச் சட்டை வழங்கப்பட்டது.

Also read: நீருக்கடியில் 3 நிமிடங்களில் 20 மேஜிக் ட்ரிக்ஸ்... கின்னஸ் சாதனை படைத்த இங்கிலாந்து மெஜிசியன்!தற்போது இந்த சட்டையின் விற்பனை குறித்து பேசிய நியூ ஜெர்சியில் உள்ள கோல்டின் ஏலத்தின் உரிமையாளர் டேவிட் அமர்மன், மரடோனாவின் சட்டைக்கு 20 லட்சம் டாலர் வரை பெற முடியும் என்றும் அதன் உரிமையாளர் அதை விற்கத் தயாராக இருக்கிறார் எனவும் கூறியுள்ளார். "ஹாண்ட் ஆஃப் காட்" ஜெர்சி மிகவும் மதிப்புமிக்கது. ஆனால் உரிமையாளர் 20 லட்சம் டாலருக்கு விற்பனையைத் தருவதாக முன்வந்திருப்பதாக அறிகிறேன் என்று அமர்மன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சமீபத்தில் மரடோனாவின் ரூக்கி கால்பந்து கார்டு 10,000 டாலருக்கு விற்கப்பட்டது. அதுவும் அவர் இறப்பதற்கு முன்னர். ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு சில நூறு டாலர்களுக்கு விற்கப்பட்ட அந்த கார்டுகள், அவரது மரணத்திற்குப் பின்பு ஆன்லைனில் 20,000 டாலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார். அதேபோல, 20 லட்சம் டாலர் விலைக்கு ஜெர்ஸி எவ்வாறு விற்கப்படும் என்பதைச் சொல்வது மிகக் கடினம். என்றாலும், பணம் வைத்திருக்கும் ஒரு நபர் அந்த விலை கொடுத்து அந்த ஜெர்சியை ஏன் வாங்கமாட்டார்! விற்பனையாவது சாத்தியம்தான் என்றார் அமர்மன்.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
First published: November 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories