ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

100 அழைப்பிதழ்கள்.. மெஹந்தி விழா.. கோலாகலமாக நடந்த செல்ல நாய்களில் திருமணம்!

100 அழைப்பிதழ்கள்.. மெஹந்தி விழா.. கோலாகலமாக நடந்த செல்ல நாய்களில் திருமணம்!

நாய்களுக்கு திருமணம்

நாய்களுக்கு திருமணம்

திருமணம் என்றால் சும்மா விளையாட்டு கல்யாணம் போல் அல்லாமல் மனிதர்களுக்கு செய்வது போலவே சுமார் 100 அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு சுற்றத்தாரை அழைத்துள்ளனர்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Haryana, India

ஹரியானா மாநிலம் குருகிராமில் வழக்கத்திற்கு மாறாக இரண்டு நாய்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர் . இந்த நாய்கள் திருமணம் ஹரியானா மட்டுமன்றி ஒட்டுமொத்த உலகத்தின் கவனத்தையும் தன்பக்கம் ஈர்த்துள்ளது.

குருகிராமில் உள்ள பாலம் விஹார் பகுதியில் ராணி என்ற நபர் தனது கணவருடன் வசித்து வந்தார். திருமணத்திற்குப் பிறகு அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இந்த தனிமையை சமாளிக்க தனது மனைவிக்கு கணவர் 3 ஆண்டுகளுக்கு முன்பு கோவிலில் இருந்து ஒரு பெண் நாயை எடுத்து வந்து ஸ்வீட்டி என்று பெயரிட்டு வளர்த்து வந்துள்ளார். குழந்தை இல்லாததால் ஸ்வீட்டியை தங்கள் மகள் போலவே கவனித்து வந்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் அதற்கு திருமணம் செய்து வைக்கலாம் என்று தோன்றியுள்ளது. அவர்களது பக்கத்துக்கு வீட்டில் உள்ளவர்கள், 8 வருடங்களுக்கு முன்பு ஒரு தெரு நாயை தத்தெடுத்து ஷெரு என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். எனவே இந்த இரண்டு நாய்களுக்கும் திருமணம் செய்து வைக்க முடிவானது.

இதையும் படிங்க: சஃபாரி வாகனத்தினுள் தாவிக் குதித்த சிங்கம்... வைரலாகும் வீடியோ

திருமணம் என்றால் சும்மா விளையாட்டு கல்யாணம் போல் அல்லாமல் மனிதர்களுக்கு செய்வது போலவே சுமார் 100 அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு சுற்றத்தாரை அழைத்தும், ஆன்லைன் மூலமாகத் தொடர்பு கொண்டும் திருமணத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை மாலை மெஹந்தி விழா நடந்துள்ளது. மண நாள் அன்று பெண் நாய் ஸ்வீட்டிக்கு புடவை அணிவிக்கப்பட்டதுடன் மெகந்தியும் வைக்கப்பட்டு திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. பூஜை, புனஸ்காரத்துடன் அச்சு அசலாக நிஜ கல்யாணம் போலவே நடந்தேறிய இத்திருமண நிகழ்வு பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

அதோடு தன பெண்குழந்தைகளை புதிய குடும்பத்திற்கு அனுப்பும்போது செய்யப்படும் கண்ணியதானமும் ஸ்வீட்டிக்கு செய்யப்பட்டுள்ளது. இது, பாலம் விஹார் பகுதியில் உள்ள ஜிலே சிங் காலனியில் உள்ள அவர்களது முழு சுற்றுப்புறத்திலும் ஆர்வத்தைத் தூண்டி கலந்துகொள்ள செய்துள்ளது.

சமீபகாலமாக செல்லப் பிராணிகள் மக்களைத் தாக்கும் சம்பவங்களால், என்சிஆர் பகுதியில் நாய்-மனித உறவுகளை ஸ்கேனரின் கீழ் கொண்டு வருவதால், இந்த நாய் திருமணம் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

Published by:Ilakkiya GP
First published:

Tags: Dog, Haryana, Marriage