‘அஸ்வினைக் கேளுங்கள், நடராஜனைக் கேளுங்கள்’: கோலியை விமர்சித்த கவாஸ்கர் மீது பாய்ந்த  ரசிகர்கள்

‘அஸ்வினைக் கேளுங்கள், நடராஜனைக் கேளுங்கள்’: கோலியை விமர்சித்த கவாஸ்கர் மீது பாய்ந்த  ரசிகர்கள்

கோலி, கவாஸ்கர்.

சுனில் கவாஸ்கர் தி இந்து ஸ்போர்ட்ஸ்டார் ஆங்கில ஊடகத்தில் எழுதிய பத்தியில் இந்திய அணியில் நட்சத்திர அந்தஸ்து பெற்ற வீரர்களுக்கு ஒருநியாயம் மற்ற வீரர்களுக்கு ஒரு நியாயம் என்று கடுமையாகச் சாடியிருந்தார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
சுனில் கவாஸ்கர் தி இந்து ஸ்போர்ட்ஸ்டார் ஆங்கில ஊடகத்தில் எழுதிய பத்தியில் இந்திய அணியில் நட்சத்திர அந்தஸ்து பெற்ற வீரர்களுக்கு ஒருநியாயம் மற்ற வீரர்களுக்கு ஒரு நியாயம் என்று கடுமையாகச் சாடியிருந்தார்.

அதாவது டி.நடராஜனுக்குக் குழந்தைப் பிறந்திருக்கிறது, ஆனால் அவர் யுஏஇ.யிலிருந்து நேராக ஆஸ்திரேலியா அழைத்துச் செல்லப்பட்டு இன்னமும் அவர் அங்கேயே இருக்க வைக்கப்பட்டுள்ளார், அதுவும் வெறும் வலைப்பயிற்சி வீச்சாளராக என்றும் கோலிக்கு விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது, இதுதன இந்திய அணியின் பாகுபாடு என்று சாடியிருந்தார்.

அதே போல் ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு போட்டியில் விக்கெட்டுகள் எடுக்கவில்லை எனில் அடுத்த போட்டியில் வீட்டுக்கு அனுப்பப்படுவார், ஆனால் அணியில் தன்னை நிலை நிறுத்திக் கொண்ட நட்சத்திர வீரர்கள் எவ்வளவு சொதப்பினாலும் அணியில் நீடிக்கிறார்கள், காரணம் அஸ்வினின் ஓபன் டாக் தான். மனதுக்குப் பட்டதை நேரடியாகப் பேசுபவர் என்று கவாஸ்கர் இந்திய அணியில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளைச் சாடியுள்ளார். மேலும் தன்னை நம்பவில்லை என்றால் அஸ்வினையே கேளுங்கள், நடராஜனைக் கேளுங்கள் என்று அவர் அந்தப் பத்தியை முடித்திருந்தார்.

கவாஸ்கரின் இந்தக் கருத்துக்கு கோலி ரசிகர்களிடையே கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

அதில், ’சச்சின் டெண்டுல்கர் அளவுக்கு கோலியும் ஒரு மிகப்பெரிய வீரர்தான், சச்சின் எத்தனையோ தொடர்களிலிருந்து விலகியிருக்கிறாரே கவாஸ்கருக்கு அவரைத் தட்டிக் கேட்க முடிந்திருக்கிறதா’ என்று ரசிகர் ஒருவர் ட்விட்டர் தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

மற்றும் சிலர் பிரதேச பக்தி பொங்க கவாஸ்கர் பேசுகிறார், ரோஹித் சர்மாவுக்கு இடைஞ்சலாக கோலி இருப்பதால் கவாஸ்கர், டெல்லிக்காரர் கோலியை இப்படியெல்லாம் விமர்சிக்கிறார் என்று கவாஸ்கரைச் சாடியுள்ளனர்.

இன்னும் சிலர் ரோஹித் சர்மா ஆஸ்திரேலிய தொடரை விட்டது ஏன், இதை கவாஸ்கர் ஏன் கண்டிக்கவில்லை என்று கேட்கின்றனர்.

வேறு சிலர் நடராஜனை வேண்டுமென்றே யாரும் வலையில் வீசச் சொல்லவில்லை, அவருக்கு அது ஒரு படிக்கல்லாக அமையும் என்கின்றனர்.

இன்னும் சிலர் கோலிக்கு கிரிக்கெட்தான் வாழ்க்கை என்றாலும் ஒட்டுமொத்த வாழ்க்கையே அதுவாகாது, சொந்த வாழ்க்கை மனைவி, குழந்தை என்ற எண்ணங்கள் இருக்கக் கூடாதா என்று கவாஸ்கரைச் சாடியுள்ளனர்.

வேறு சிலர் கவாஸ்கரின் ஆகிருதி, அவரது பங்களிப்பு, எவ்வளவு பெரிய வீரர், இந்திய கிரிக்கெட்டின் பெருமையை உலக கிரிக்கெட் அரங்கில் உயர்த்தியவர் என்பதெல்லாம் தெரியாமல் அவரைக் கண்டபடி மரியாதை இன்றி ஏசி வருகின்றனர்.

இன்னும் சிலர் கவாஸ்கர் சுட்டிக்காட்டுவதில் விஷயமிருப்பதாகவும் பதிவிட்டு வருகின்றனர்.
Published by:Muthukumar
First published: