கோடிகளில் ஏலம் விடப்பட உள்ள ஷேக்ஸ்பியரின் முதல் நாடகத் தொகுப்பு..!

கலிபோர்னியாவில் உள்ள மில்ஸ் என்னும் தனியார் கல்லூரி இந்தத் தொகுப்பை இத்தனைக் காலம் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கோடிகளில் ஏலம் விடப்பட உள்ள ஷேக்ஸ்பியரின் முதல் நாடகத் தொகுப்பு..!
ஷேக்ஸ்பியர்
  • News18
  • Last Updated: January 11, 2020, 4:27 PM IST
  • Share this:
ஆங்கில இலக்கிய உலகின் மிகப்பெரிய எழுத்தாளரான ஷேக்ஸ்பியரின் முதல் நாடகத் தொகுப்பு நேற்று ஏலம் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்டிஸ் ஏல நிறுவனம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

’Comedies, Histories and Tragedies' எனப் பெயரிடப்பட்டுள்ள அந்தத் தொகுப்புதான் ஷேக்ஸ்பியரின் முதலாவது தொகுப்பு ஆகும். இதுபோன்ற 6 தொகுப்புகள் மட்டும் தனி நபர்களின் கைகளில் உள்ளது. இதில் 36 நாடகங்கள் இடம்பெற்றுள்ளன.

வரலாற்று சிறப்பு வாய்ந்த நாடகங்களான் மேக்பெத், டெம்பெஸ்ட், அஸ் யூ லைக் இட் போன்ற நாடகங்கள் இந்தத் தொகுப்பில்தான் இடம்பெற்றுள்ளன. ஷேக்ஸ்பியரின் மறைவுக்குப் பின்னர் அவரது நண்பர் ஒருவர் அவரது நகைச்சுவை, வரலாறு மற்றும் துயர நாடகங்களை ஒருங்கிணைத்து இத்தகைய தொகுப்பாக உருவாக்கியுள்ளார்.


ஏலத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்தத் தொகுப்பு வரும் வாரம் முதல் லண்டன், நியூயார்க், ஹாங்காங் மற்றும் பெய்ஜிங் ஆகிய ஒவ்வொரு நாடுகளிலும் குறிப்பிட்ட காலத்துக்கு பார்வைக்காக வைக்கப்படும். ஏப்ரல் 24-ம் தேதி ஏலம் நடைபெறும். 28 கோடி ரூபாய் 42 கோடி ரூபாய் வரையில் ஏலம் போகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கலிபோர்னியாவில் உள்ள மில்ஸ் என்னும் தனியார் கல்லூரி இந்தத் தொகுப்பை இத்தனைக் காலம் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க: காதலைச் சொல்ல 6 மாத உழைப்பில் ஒரு திரைப்படத்தையே உருவாக்கிய காதலன்!- வீடியோ
First published: January 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்