• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • பாக் முன்னாள் கேப்டன் சர்ஃபராஸ் அகமதுவை களத்தில் கடுப்பேற்றிய அஃப்ரிடி! - வைரலாகும் வீடியோ!

பாக் முன்னாள் கேப்டன் சர்ஃபராஸ் அகமதுவை களத்தில் கடுப்பேற்றிய அஃப்ரிடி! - வைரலாகும் வீடியோ!

சர்ஃபராஸ் அகமது

சர்ஃபராஸ் அகமது

சர்ஃபராஸ் தனக்கு சீனியர் என்ற முறையில் அஃப்ரிடி கொஞ்சம் பொறுமையை கையாண்டிருக்கலாம் எனவும், பவுன்சர்கள் என்பது கிரிக்கெட்டின் ஒரு அங்கம் என்பதால் சர்ஃபராஸ் இதை பெரிதுபடுத்தியிருக்கக்கூடாது என இரு தரப்பும் மீது ரசிகர்கள் சாடல்

  • Share this:
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி 20 கிரிக்கெட் தொடரின் லீக் தொடரின் லீக் போட்டி ஒன்றில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சர்ஃபராஸ் அகமதுக்கும், இளம் வீரரான ஷாகீன் அப்ரிடிக்கும் இடையே களத்தில் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள் கொரோனா பரவல் காராணமாக அபுதாபியில் நடைபெற்று வருகிறது. நேற்று 23வது லீக் போட்டியில் Lahore Qalandars மற்றும் Quetta Gladiators அணிகள் மோதின. இந்த ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் கேப்டன் சர்ஃபராஸ் அகமது 19வது ஓவரில் ஆடிக்கொண்டிருந்த போது, அந்த ஓவரில் ஆளுயர பவுன்சர் ஒன்றை வீசினார் ஷாகீன் அப்ரிடி.

பவுன்சராக வீசப்பட்ட பந்து, பேட்டிங் செய்த குவெட்டா கிளாடியேட்டர்ஸ் கேப்டன் சர்ஃபராஸ் அகமதுவின் ஹெல்மெட்டை பதம் பார்ததுவிட்டு, விக்கெட் கீப்பரை கடந்து தேர்ட் மேன் திசைக்கு சென்றது. அந்த நேரத்தில் ரன் எடுப்பதற்காக மறு முனைக்கு வந்த சர்ஃபராஸ் அகமது, பவுன்சர் வீசிய அப்ரிடியை நோக்கி ஏதோ பேசியுள்ளார்.

Also Read:    ட்ரெண்டிங்கில் ஆங்கிலேயரை ஆட்டம் காணவைத்த “ஜம்புத்தீவு பிரகடனம்”: சுதந்திர போராட்ட வரலாற்றின் மைல்கல் இன்று!

இதனால் கடுப்படைந்த அப்ரிடி முன்னாள் கேப்டன், சீனியர் என்றும் பார்க்காமல், உடனடியாக அவருடன் வார்த்தை மோதலில் ஈடுபட்டார். சர்ஃபராஸ் அகமதுவின் அருகில் சென்று அவர் ஆக்ரோஷமான சைகைகளை செய்ததால் நடுவர்கள் மற்றும் களத்தில் இருந்த வீரர்கள் ஓடோடி வந்து இருவருக்குமிடையேயான நெருக்கடியை போக்கி விலகிச் செல்ல வழிவகை செய்தனர். இருவருக்கும் இடையிலான இந்த திடீர் மோதல் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்னிங்ஸ் முடிவில் அப்ரிடியின் நடத்தை குறித்து கள நடுவருடன் பேசியவாறு சர்ஃபராஸ் அகமது சென்றார்.

Also Read:   ‘மருத்துவ கட்டிப்பிடித்தல்’ தொழிலின் அனுபவங்களை பகிர்ந்த ஆச்சரியப் பெண்மணி: ஒரு மணி நேரத்திற்கு ரூ.7300 வசூலிக்கிறாராம்!பொதுவாக கிரிக்கெட்டில் சீனியர்களை, ஜூனியர்கள் மதித்து நடப்பது என்பது ஒரு பன்பாடாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த விஷயம் தான் பாகிஸ்தான் அணியின் குறைபாடாக இருப்பதாக முன்னாள் வீரர் வசீம் அக்ரம் சமீபத்தில் தெரிவித்திருந்தார். அவர் கூறியதை நிஜமாக்கும் வகையில் தான் அப்ரிடி மற்றும் சர்ஃபராஸ் அகமது இடையிலான வாக்குவாதம், மோதல் இருந்ததாக சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கருத்துக்களை கூறிவருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சர்ஃபராஸ் தனக்கு சீனியர் என்ற முறையில் அஃப்ரிடி கொஞ்சம் பொறுமையை கையாண்டிருக்கலாம் எனவும், பவுன்சர்கள் என்பது கிரிக்கெட்டின் ஒரு அங்கம் என்பதால் சர்ஃபராஸ் இதை பெரிதுபடுத்தியிருக்கக்கூடாது என இரண்டு தரப்பு மீதும் குற்றம் சுமத்தி சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கருத்து கூறியதை பார்க்க முடிந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: