ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

ராசியான பொருள் கைய விட்டு போகாது - டிவிட்டரில் வைரலாகும் ஆஸ்திரேலிய பெண்ணின் கதை

ராசியான பொருள் கைய விட்டு போகாது - டிவிட்டரில் வைரலாகும் ஆஸ்திரேலிய பெண்ணின் கதை

ஆஸ்திரேலிய பெண் ஜெனி

ஆஸ்திரேலிய பெண் ஜெனி

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல பொருட்களோடு நாம் நெருங்கி ஒட்டிவிடுவோம். பொதுவாக பொருள்களுக்கு உயிர் கிடையாது என்றாலும் நாம் அதன் மீது மிகுந்த பற்று கொண்டவராக இருப்போம்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொருளும் ராசி கொண்டதாக இருக்கும். உதாரணத்திற்கு நம்மில் பலருக்கு பைக், கார், மொபைல் போன் போன்றவை நமக்கு ராசியான பொருளாக இருக்கும். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் ஒருவரும், தன் வாழ்க்கையோடு மிக நெருங்கிய தொடர்புடைய இது போன்ற பொருள் ஒன்று குறித்த கதையை டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். அவரது கதையை டிவிட்டர் யூஸர்கள் பலரும் மிகுந்த ஆர்வத்துடன் படித்து பகிர்ந்து வருகின்றனர்.

வாழ்க்கையோடு இணைந்து பயணிக்கும் மோதிரத்தின் கதை

டிவிட்டரில் ஆஸ்திரேலிய பெண் வெளியிட்டுள்ள பதிவுகளில் கூறியிருப்பதாவது: “இது மிக நீண்ட பெரிய கதை. சிலருக்கு இது போர் அடிக்கக் கூடும். எனக்கு அப்போது 14 வயது இருக்கும். ஒரு பையன் எனக்கு நட்புக்கு அடையாளமான மோதிரம் கொடுத்தான். அது 9 காரட் தங்கம். மோதிரத்தின் மீது கால் பங்கு நிலவு மற்றும் நட்சத்திரங்கள் போன்றவை தீட்டப்பட்டிருந்தன. ஒரு வார ஊதியத்தில் எனக்கு அந்த மோதிரத்தை அந்த பையன் வாங்கிக் கொடுத்தான்.

எங்கள் நட்பு நல்ல படியாக சென்று கொண்டிருந்தது. பிறகு ஒரு நாள் நான் அந்த பையன் உடனான நட்பை கைவிட்டுவிட்டேன். உண்மையை சொல்வது என்றால், நான் அந்த மோதிரத்தை திருப்பி கொடுத்து விட்டேன். அந்த பையன் நல்ல கிரிக்கெட் வீரர்; வேகப்பந்து வீச்சாளர். கோபத்தில் அந்த மோதிரத்தை சாலையில் தூக்கியெறிந்து விட்டான். கடைசியாக அப்போது தான் அந்த மோதிரத்தை நான் பார்த்தேன். சாலையை ஒட்டியிருந்த குதிரை லாயத்தில் அந்த மோதிரம் விழுந்து விட்டது. அதற்குப் பிறகு அந்த மோதிரத்தை யாரும் கண்டிருக்க மாட்டார்கள் என நினைத்துக் கொண்டிருந்தேன்.

20 வருடங்கள் கழித்து திரும்பக் கிடைத்த மோதிரம்...

20 வருடங்கள் கழித்து அந்த பையனின் சகோதரியை நான் சந்தித்தபோது, அவர் அந்த மோதிரத்தை அணிந்திருந்தார். அவர் என்னிடம் பேசுகையில், “ஜென்னி உனக்கு நினைவிருக்கிறதா? மோதிரத்தை தூக்கியெறிந்த அடுத்த நாளன்று பல மணி நேரமாக ஒட்டுமொத்த குடும்பத்தையும் இந்த மோதிரத்தை தேடி என் சகோதரன் அலையவிட்டான்’’ என்றார். அத்துடன் அந்த மோதிரத்தை எனக்கு கொடுத்துவிட்டார். எந்த சூழ்நிலையிலும், எவ்வளவு நாட்கள் ஆனாலும் மோதிரம் எனக்கு திரும்ப கிடைக்கும் என்பதை தெரிந்து கொண்டேன்.

Also see... அடக்கொடுமையே நடுரோட்டில் ஸ்கூட்டரில் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த நிலை; சிக்கிய அப்பாவி இளைஞர்! 

தற்போது விமானப் பயணம் செய்பவர்களுக்கு இரவலாக அந்த மோதிரத்தை கொடுக்கிறேன். அந்த மோதிரம் மிகவும் அதிர்ஷ்டமானது. அது நம் கையில் இருந்தால் பயம் போய்விடும். ஆகவே விமானப் பயணம் செய்ய பயமாக இருக்கிறது எனக் கூறுபவர்களுக்கு இதை இரவலாக கொடுத்து வருகிறேன். அவர்களும் அதை பயன்படுத்திவிட்டு என்னிடம் திருப்பிக் கொடுத்து விடுவர்’’ என்று அந்த பெண் தெரிவித்துள்ளார்.

எழுத்தாளருக்கும் கூட உதவியாக இருந்த மோதிரம்

கடைசியாக சில மாதங்களுக்கு முன்பு எழுத்தாளர் ஒருவரை சந்தித்ததாகவும், அவர் விமானப் பயணம் செய்ய அச்சம் கொண்டிருந்த நிலையில், அவருக்கு மோதிரத்தை கொடுத்து அனுப்பி வைத்ததாகவும் ஜென்னி கூறியுள்ளார். பயணம் முடித்து திரும்பி வருகையில், மோதிரத்தை அவர் பத்திரமாக திருப்பி ஒப்படைத்தார் என்று குறிப்பிட்டுள்ள ஜென்னி, தொடர்ந்து இதுபோல பலருக்கும் மோதிரத்தை இரவலாக கொடுக்க இருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Viral