Home /News /trend /

டிஜிட்டல் உலகில் வளர்ந்து வரும் இளவரசன்.. சர்வதேச NFT தினம் இன்று.!

டிஜிட்டல் உலகில் வளர்ந்து வரும் இளவரசன்.. சர்வதேச NFT தினம் இன்று.!

NFT

NFT

படங்கள், கலை, இசை, வீடியோக்கள் எந்த டிஜிட்டல் சொத்தும் NFT ஆகலாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India
செப்டம்பர் 20 ஆம் தேதியான இன்று முதல் சர்வதேச NFT தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் NFT சமூகத்தில் படைப்பாளிகள் மற்றும் சேகரிப்பாளர்களைக் கொண்டாட உருவாக்கப்பட்டதாகும். மக்கள் NFTகளைப் பற்றி அறிந்து கொள்ளவும், தங்கள் சொந்த சேகரிப்பைத் தொடங்கவும் இது வழிவகுக்கும்.

NFT - non fungible token என்றால் என்ன?

NFT என்பது ஒரு குறிப்பிட்ட டிஜிட்டல் அல்லது திறமான சொத்துடன் தொடர்புடைய பிளாக்செயினில் உருவாக்கப்படும் பதிவாகும். NFT இன் உரிமையானது பிளாக்செயினில் பதிவு செய்யப்பட்டு, டிஜிட்டல் தளத்திலேயே வர்த்தகம் செய்யப்படும். உண்மையான செல்வத்தை போலவே இதுவும் பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்படும்.

NFTகள் பிளாக்செயினில் உள்ள தனித்துவமான கிரிப்டோகிராஃபிக் டோக்கன்கள் அல்லது டிஜிட்டல் சேகரிப்புகள் ஆகும். படங்கள், கலை, இசை, வீடியோக்கள் எந்த டிஜிட்டல் சொத்தும் NFT ஆகலாம். NFT ஐ உருவாக்குவது "minting" என்று குறிப்பிடப்படுகிறது, மேலும் NFTகளை வைத்திருக்கும் திறன் பாதுகாப்பானது, சரிபார்க்கக்கூடியது மற்றும் உரிமையாளரின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ளது என்று கூறப்படுகிறது

சுதந்திர தினத்திற்காக வெளியிடப்படும் மெய்நிகர் 3டிNFT தபால்தலைகள்

இப்போது பல வீடியோ கேமிங் நிறுவனங்களும் NFT களை பயன்படுத்தத் தொடங்கியுள்ளது . தனியார் நிறுவனங்கள் பல தாங்கள் தயாரித்த NFT கள் கொண்டு தங்கள் நிறுவன பொருட்கள் பெறவும் , பயன்படுத்தவும் வசதி செய்கின்றன.

NFT கடந்துவந்த பாதை:

மே 2014
நேம் காயின் பிட்காயின் ஃபோர்க் எனும் நிறுவனத்தால் முதல் "NFT" குவாண்டம் டோக்கன்கள் அச்சிடப்பட்டது. அது இன்றைய நிலை போல் அல்லாமல் ஆரம்ப கால டிஜிட்டல் டோக்கன்களாக இருந்தது.

செப்டம்பர் 2017
ERC-721 ஆனது 'டாப்பர் லேப்ஸ் CTO டெட் ஷெர்லி' ஆல் வெளியிடப்பட்டது, இதில் தான் "NFT" என்ற சொல் முதல் முறையாக பயன்படுத்தப்பட்டது. மேலும் ERC-721 NFTகளை உருவாக்குவதற்கான தரநிலையாக மாறியது.

டிசம்பர் 2017
முழு Web3 ஸ்பேஸிற்கான NFT சந்தைகளில் ஒன்றான OpenSea நிறுவனம் அதன் படைப்பாளிகள், சேகரிப்பாளர்கள் மற்றும் NFT ஆர்வலர்களின் உருகும் பாத்திரமாக மாறுகிறது. இன்றைய தினத்தின் நினைவாகத் தான் சர்வதேச NFT தினமும் உருவாக்கப்பட்டது.

பசுமை NFTகளைப் பற்றி நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய அனைத்தும் இங்குள்ளன.!

அக்டோபர் 2020
டாப்பர் லேப்ஸ் ஃப்ளோ, பிளாக்செயினில் NBA டாப் ஷாட்டை அறிமுகப்படுத்தியது.  NFT மோகத்தைத் தூண்டும் தீப்பொறியாக இவை கருதப்படுகிறது. இதுவும் ஒரு வகை NFT வர்த்தக முறை தான்.

ஏப்ரல் 2021
Bored Ape Yacht Club ஆனது அடையாளம் காணக்கூடிய NFTகளில் ஒன்றாக மாறியது. பிரபலங்கள் மற்றும் செல்வாக்கு செலுத்துபவர்கள் தங்கள் அடையாளமாக இந்த NFT களை பகிர்ந்து கொள்கிறார்கள்.

செப்டம்பர் 2022
ERC-721 வெளியிடப்பட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, சர்வதேச NFT தினம் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட நாளாக மாறுகிறது.
Published by:Ilakkiya GP
First published:

Tags: Digital Currency

அடுத்த செய்தி