Home /News /trend /

41 ஆண்டுகளில் ஒருவர் மாறி, ஒருவராக 60 வழக்குகளை தொடுத்த தம்பதியர் - சமரசமாக உச்ச நீதிமன்றம் அறிவுரை!

41 ஆண்டுகளில் ஒருவர் மாறி, ஒருவராக 60 வழக்குகளை தொடுத்த தம்பதியர் - சமரசமாக உச்ச நீதிமன்றம் அறிவுரை!

love failure

love failure

விவகாரத்து பெற்ற ஒரு தம்பதியர் கடந்த 41 ஆண்டுகளில் ஒருவரை எதிர்த்து ஒருவராக 60 வழக்குகளை தொடுத்துள்ளனர்.

    விவகாரத்து பெற்ற ஒரு தம்பதியர் கடந்த 41 ஆண்டுகளில் ஒருவரை எதிர்த்து ஒருவராக 60 வழக்குகளை தொடுத்துள்ளனர். அந்த இருவரையும் சமரசமாக செல்லுமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. நீதிமன்றத்திலேயே பொழுது கழிக்க வேண்டும் என்பது சிலரது விருப்பமாக இருக்கிறது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

    வழக்கறிஞர்களின் புத்திகூர்மை திறன் காக்கப்பட வேண்டும் என்றும், பிரிந்த தம்பதியருக்கான வழக்கறிஞர் இந்த விவாகரத்தை சுமூகமாக தீர்க்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் கிருஷ்ணா முராரி மற்றும் ஹிமா கோலி ஆகியோர் இந்த அமர்வில் இடம்பெற்றிருந்தனர்.

    நீதிபதிகள் இதுகுறித்து கூறுகையில், “என்ன செய்வது, சில மக்கள் சண்டையிடுவதையே விரும்புகின்றனர். எப்போதும் நீதிமன்றத்தில் இருக்க வேண்டும் என்பதே அவர்களது விருப்பமாக இருக்கிறது. இல்லாவிட்டால் அவர்களுக்கு தூக்கம் வராது’’ என்று குறிப்பிட்டனர்.

    முன்னதாக, திருமணம் செய்து சேர்ந்து வாழ்ந்த 30 ஆண்டு காலத்திலும், அதைத் தொடர்ந்து பிரிந்து வாழும் 11 ஆண்டு காலத்திலும் என 41 ஆண்டுகளில் இந்த கணவன், மனைவி சார்பில் மொத்தம் 60 வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன என்ற தகவல் நீதிபதிகளிடம் தெரிவிக்கப்பட்டது. அதைக் கேட்டு அவர்கள் தங்கள் ஆச்சரியத்தை வெளிப்படுத்தினர்.

    தம்பதியர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்களிடம் நீதிபதிகள் கூறுகையில், “பிரிந்து வாழும் இவர்கள் இருவரும், அவர்களது பிரச்சினைகளை சமரச முயற்சி மூலமாக தீர்த்துக் கொள்ள வேண்டும். அதுவும் குறிப்பிட்ட கால அளவில் நடைபெற்று முடிக்க வேண்டும். இடைப்பட்ட காலத்தில் வேறெந்த வழக்குகளையும் முன்னெடுக்க இவர்களுக்கு அனுமதி கிடையாது’’ என்று தெரிவித்தனர். பெண்ணின் வழக்கறிஞரிடம் நீதிபதிகள் குறிப்பிடுகையில், “நீங்கள் இருவரையும் வைத்து வழக்கு வாதிட முடியாது. நீங்கள் சாப்பிடுவதற்கான கேக் கிடைக்காது’’ என்று கூறினர்.

    9 பெண்களை திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்த நபருக்கு உருவான புதிய சிக்கல்


    சவுதி பெண் மிரட்டல்

    இதற்கிடையே, சவுதி அரேபியாவில் வாழும் பெண் ஒருவர், தனது கணவர் விவாகரத்து வழங்காவிட்டால் நிர்வாணமாக நடந்து செல்ல இருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார். கோரிக்கை நிராகரிக்கப்பட்டால் சொன்னதைச் செய்வேன் என மனைவி மிரட்டியதால், அந்தக் கணவரும் வேறு வழியின்றி விவாகரத்து வழங்க சம்மதித்துள்ளார் என்று ‘கல்ஃப் நியூஸ்’ ஊடகம் தெரிவிக்கிறது.

    முன்னதாக, அந்த நபர் ஷரியா நீதிமன்றத்தை அணுகி தனக்கு விருப்பத்திற்கு மாறாக விவாகரத்து கோரப்படுவதால் அதை நிராகரிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். ஆனால், விவகாரத்துக்கு தேவையான காரணங்கள் இருப்பதாகக் கூறி அவரது கோரிக்கையை ஷரியா நீதிமன்றம் நிராகரித்தது. இதைத் தொடர்ந்து, அந்தக் கணவர் வேறு வழியின்றி விவாகரத்து பெற ஒப்புக் கொண்டார்.
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Marriage Life

    அடுத்த செய்தி