தென்கொரியாவில் ரூ.3 கோடி மதிப்பிலான ஓவியம் சேதம் - 2 பேர் கைது

ஓவியம்

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஓவியரான ஜான்ஒன் (JonOne) கைப்பட வரைந்த அந்த ஓவியத்தின் மதிப்பு சுமார் 3 கோடி ரூபாயாகும்.

  • News18
  • Last Updated :
  • Share this:
தென்கொரியாவில் மால் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த 3 கோடி ரூபாய் மதிப்பிலான ஓவியத்தை சேதப்படுத்திய காதலர்கள் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தென்கொரிய தலைநகரம் சியோலில் உள்ள லாட்டி வேர்ல்டு (LOTTE WORLD MALL)மாலில் ஓவியம் ஒன்று பார்வையாளர்களுக்காக வைக்கப்பட்டிருந்தது. அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஓவியரான ஜான்ஒன் (JonOne) கைப்பட வரைந்த அந்த ஓவியத்தின் மதிப்பு சுமார் 3 கோடி ரூபாயாகும். 2016 ஆம் ஆண்டு சியோலில் மக்கள் முன்பாக நேரடியாக அந்த ஓவியத்தை அவர் வரைந்திருந்தார். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அந்த மாலுக்கு சென்ற காதலர்கள் இருவர், ஓவியத்தை பார்த்து மெய்சிலிர்த்துள்ளனர். ஓவியத்தின் அருகே கலர் மற்றும் பிரஷ் வைக்கப்பட்டிருந்ததால், தாங்களும் அந்த ஓவியத்தின் மீது வண்ணமடித்துள்ளனர்.

சிறிது நேரம் கழித்து அந்த ஓவியத்தை பார்த்த மால் கண்காட்சி குழுவினர் அதிர்ச்சியடைந்தனர். ஏனென்றால், மிக அழகிய வேலைபாடு மற்றும் நேர்த்தியாக வரையப்பட்டிருந்த அந்த ஓவியத்தின் மீது மிகவும் மோசமாக இருந்தது. இதனையடுத்து, யார் இதனை செய்தார்கள்? என அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளைக் கொண்டு ஆய்வு செய்தனர். அப்போது, காதலர்கள் இருவரும் மதிப்பு மிக்க ஓவியத்தின் மீது வண்ணம் அடித்து விளையாடிக் கொண்டிருந்தது தெரிந்தது. உடனடியாக காவல்துறையிடம் புகார் அளித்த கண்காட்சிக் குழுவினர், அவர்களை கைது செய்ய வேண்டும் என முறையிட்டனர்.

Also read... வீட்டில் இருந்து பார்சல் கவரை திருடி செல்லும் அணில் - வைரல் வீடியோ!

காவல்துறையினரும் வழக்குப்பதிவு செய்து காதலர்களை தேடினர். வண்ணப்பூச்சுகளின் மீது இருந்த கைரேகையை பதிவு செய்து அவர்களை தேடினர். அவர்கள் அதே மாலில் மற்றொரு புறத்தில் இருந்தை கண்டுபிடித்து காதலர்களை கைது செய்தனர். அவர்களிடம் இது குறித்து காவல்துறையினர் கேள்வி எழுப்பினர். அப்போது காதலர்கள் இருவரும் கூறிய பதில், கண்காட்சி ஏற்பாட்டாளர்களை திகைப்படையச் செய்தது. அதாவது, ஜான்ஒன் தத்ருபமாக மக்கள் முன்பு வரைந்த ஓவியத்தை நினைவுகூறும் விதமாக, ஓவியம் வரைய பயன்படுத்தப்பட்ட பிரஷ் மற்றும் பெயிண்டுகளும் வைக்கப்பட்டிருந்துள்ளது. காதலர்கள் இருவரும் யார் வேண்டுமானாலும் அதன் மீது வரையலாம் என தவறாக எண்ணி, ஓவியத்தின் மீது கிறுக்கி சேதப்படுத்தியுள்ளனர்.

இது குறித்து பேசிய கண்காட்சி ஏற்பாட்டாளர் காங் வூக் (Kang Wook) கைது செய்யப்பட்ட இருவரும் விடுதலை செய்யப்பட்டதாக தெரிவித்தார். அவர்கள் இருவரும் தவறுதலாக ஓவியத்தின் மீது கிறுக்கியதை ஒப்புக்கொண்டதாக கூறிய காங் வூக், ஓவியத்தை வரைந்த கலைஞர் ஜான்ஒன்னிடம் இதைப் பற்றி தெரிவிக்க உள்ளதாகவும் தெரிவித்தார். ஜான் ஒன் பதிலுக்கு ஏற்ப ஓவியத்தை மீண்டும் வரைவது குறித்தும், அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்தும் முடிவு செய்யப்படும் என காங் வூக் கூறினார். இந்த சம்பவத்துக்குப் பிறகு அந்த ஓவியத்துக்கு கண்ணாடி அரண் பொருத்தப்பட்டு, ஓவியத்தை யாரும் தொடக்கூடாது என்ற எச்சரிக்கையும் எழுதி ஒட்டப்பட்டுள்ளது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: