• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • அமெரிக்காவில் உடை அவிழ்வதைக் கூட கவனிக்காமல் திருட்டில் ஈடுபட்ட பெண்!

அமெரிக்காவில் உடை அவிழ்வதைக் கூட கவனிக்காமல் திருட்டில் ஈடுபட்ட பெண்!

உடையை கவனிக்காமல் திருட்டில் ஈடுபட்ட பெண்

உடையை கவனிக்காமல் திருட்டில் ஈடுபட்ட பெண்

திருட்டை தடுப்பதற்காக அபராத தொகைகள் உயர்த்தப்பட்டபோதும், திருட்டு நிகழ்வுகள் குறையவில்லை என காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
அமெரிக்காவில் உடை அவிழ்வதைக் கூட பொருட்படுத்தாமல் பெண் ஒருவர் பார்சலை திருடிச் சென்றார்.

பார்சல் மற்றும் கொரியர் டெலிவரி செய்யும்போது, உரிமையாளர் வீட்டில் இல்லாதபோது, வீட்டு தாழ்வாரத்தில் வைத்துவிட்டு செல்வது இயல்பானது. இந்தியாவில் உள்ள கொரியர் நிறுவனங்கள் இந்த நடைமுறையை பெரும்பாலும் கடைபிடிப்பதில்லை என்றாலும், மிகவும் அரிதான சில டெலிவரியை உரிமையாளரின் வீட்டு முன்பு வைத்துவிட்டு செல்கின்றனர். ஆனால், அமெரிக்காவில் வீட்டில் உரிமையாளர் இல்லையென்றாலும், கொரியரை வீட்டு முன்பு வைத்துவிட்டு சென்றுவிடுவார்கள். ஒருவேளை பார்சல் திருடப்பட்டால், வீட்டு உரிமையாளர் மட்டுமே அதற்கு பொறுப்பு.

அவ்வாறு வீட்டு முன்பு வைக்கப்பட்ட பார்சல் ஒன்றை, இளம் வயது பெண் ஒருவர் திருடிச் சென்றுள்ளார். அவர் பார்சலை திருடும் காட்சிகள் அந்த வீட்டில் இருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது இணையத்தில் வெளியாகியிருக்கும் அந்த வீடியோவில், பார்சல் இருக்கும் வீட்டுக்கு அந்த பெண் வேகவேகமாக ஓடி வருகிறார். அப்போது அவரின் மேலாடை நீங்கிவிடுகிறது. இருந்தபோதும், உடையைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் தான் திருட வந்த பார்சலை எடுத்துக்கொண்டு, வந்தவேகத்தில் திரும்பிச் சென்றுவிடுகிறார்.

வீட்டுக்கு திரும்பிய அந்த பார்சலின் உரிமையாளர், பார்சல் இல்லாததையறிந்து சிசிடிவி கேமராவை சோதனை செய்கிறார். அப்போது, பெண் ஒருவர் வந்து பார்சலை திருடிச் செல்லும் காட்சி பதிவாகியிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைகிறார். பார்சலை திருடிச் செல்லும் பெண்ணின் உருவம் தெளிவாக பதிவாகியுள்ளது. அந்த பார்சலில் புதிய துணி இருந்ததாக தெரிவித்துள்ள வீட்டின் உரிமையாளர், இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த காவல்துறை அதிகாரி அலன் ரோஷன், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விரைவாக திருட்டில் ஈடுபட்ட பெண்ணை கண்டுபிடித்துவிடுவோம் எனக் கூறியுள்ளார்.

Also read... கோக்கைன்னுக்கு அடிமையாவது போல கிரெடிட் கார்டைப் பயன்படுத்துவதில் அடிமையாகும் மக்கள்: MIT வெளியிட்ட ஆய்வறிக்கை!

அமெரிக்காவில் திருட்டு குற்றச்சாட்டுகளுக்கு கடுமையான தண்டனை கிடையாது. பொருளின் தன்மைக்கு ஏற்ப குறிப்பிட்ட தொகையை அபராதமாக செலுத்தினால், வழக்கில் இருந்து விடுதலையாகிவிடலாம். அதனால், இதுபோன்ற திருட்டில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, ஜார்ஜியா நகரப்பகுதியில் அதிகளவிலான பார்ச்சல் திருட்டு நடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திருட்டை தடுப்பதற்காக அபராத தொகைகள் உயர்த்தப்பட்டபோதும், திருட்டு நிகழ்வுகள் குறையவில்லை என காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே, கிரெடிட் கார்டுகளை திருடுவதை வழக்கமாகக் கொண்ட திருடனுக்கு டெக்சாஸ் நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததுள்ளது. ஜீன் லூயிஸ் என்ற 46 வயது நபர், 2019 மற்றும் 2020-களில் வங்கி மோசடி, டெபிட் கார்டு மோசடிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார். பல்வேறு குற்ற மற்றும் மோசடி வழக்குகளில் தொடர்புடையவர் என்பதால், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜீன் லூயிஸூக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: