ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

காரை ஸ்டார்ட் செய்த உடன் விசித்திரமான சத்தம்... என்ஜினை திறந்து பார்த பெண் அதிர்ச்சி

காரை ஸ்டார்ட் செய்த உடன் விசித்திரமான சத்தம்... என்ஜினை திறந்து பார்த பெண் அதிர்ச்சி

காரை பெண் ஸ்டார்ட் செய்த போது ஒரு விசித்திரமான சத்தம் வந்துள்ளது. முதலில் அந்த பெண்ணுக்கு அந்த சத்தம் எங்கிருந்து வருகிறது என்பது தெரியவில்லை.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

மனிதர்கள் தனது சுயலாபத்திற்காக காடுகளை அழிப்பது நமக்கே பேராபத்தாக அமையும். காடுகளை அழிப்பதால் அதில் வாழும் விலங்குகள் குடியிருப்பு வீடுகளில் நுழைகின்றன். இதனால் நாம் யோசிக்க கூட முடியாத இடங்களில் வன விலங்குகள் இருக்கும் சூழல் ஏற்படுகிறது. இதுப்போன்று ஒரு நிலை தான் ஸ்காட்லாந்தில் உள்ள ஒரு பெண்ணுக்கு நேர்ந்துள்ளது.

Also Read : கொடூரமாக 80 பேரை வேட்டையாடிய 'ஒசாமா பின்லேடன்' முதலை..!

அந்த பெண் கார் எடின்பார்க் என்ற ஏரிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த காரை பெண் ஸ்டார்ட் செய்த போது ஒரு விசித்திரமான சத்தம் வந்துள்ளது. முதலில் அந்த பெண்ணுக்கு அந்த சத்தம் எங்கிருந்து வருகிறது என்பது தெரியவில்லை. இதானல் கார் என்ஜின் பெட்டியை திறக்க அந்த பெண் முடிவு செய்துள்ளார. என்ஜின் பெட்டியை திறந்த பெண் அதிர்ச்சியில் கத்தினாள், உள்ளே ஒரு நீர் நாய் இருந்துள்ளது.

இதை தொடர்ந்து அந்த நீர் நாயை பத்திரமாக மீட்க விலங்குகள் நல ஆர்வலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த கார் என்ஜின் பூட்டப்பட்டிருந்தும் அதனுள் பூனை எப்படி வந்தது என்பது தெரியாமல் உள்ளது. அந்த நீர் நாய் வெளியே எடுக்கப்பட்டப் போது மிகவும் பயந்து போய் இருந்தது. அதற்கு எந்த மருத்துவ சிகிச்சையும் தேவையும் இல்லை என்று அவர் தனது ஃபேஸ்புக் பதிவல் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Viral