Home /News /trend /

நிஜத்தில் ஒரு ‘அனபெல்’ பொம்மை... - இந்த கதை தெரியுமா உங்களுக்கு?

நிஜத்தில் ஒரு ‘அனபெல்’ பொம்மை... - இந்த கதை தெரியுமா உங்களுக்கு?

காட்சி படம்

காட்சி படம்

அனபெல் திரைப்படம் ஒரு உண்மைக் கதையை தழுவி எடுக்கப்பட்டது.

1987 ஆம் ஆண்டில் வெளியான டால்ஸ் (Dolls) மற்றும் பிறகு 1988-இல் வெளியான 'சைல்ட்ஸ் பிளே' (Child's Play) தொடங்கி 2014 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் வெளியான 'அனபெல்' சீரீஸ் வரை பொம்மைகளை மையமாக வைத்து வெளியான திகில் திரைப்படங்கள் பல உள்ளன.

பெரும்பாலான "பேய் பொம்மை" கதைகளுமே கிட்டத்தட்ட ஒரே 'கான்செப்டில்' தான் திரைக்கதைகளாக உருவாக்கப்பட்டு இருக்கும். அதாவது அந்த பொம்மை பேசி அல்லது பேசாமல் அச்சுறுத்தும் இல்லையென்றால் அது உயிர்பெறும் அல்லது ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு இருக்கும்.

நமது வீடுகளில், நமக்கு மிகவும் பரீட்சியமான பொம்மைகளை பார்க்கும் போது கூட நமக்குள் ஒரு விதமான பீதியை ஏற்படுத்தியதே - இந்த திரைப்படங்களின் மாபெரும் வெற்றி என்று கூறலாம். ஒருவேளை உங்கள் வீட்டில் இருக்கும் ஒரு பொம்மை, லேசாக அசைந்தால் அல்லது பேசினால் நீங்கள் என்ன செய்வீர்கள்?

இந்த கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லும் முன், அனபெல் திரைப்படம் ஒரு உண்மைக் கதையை தழுவி எடுக்கப்பட்டது என்பதையும், அந்த படத்தில் வருவது போலவே ஒரு பேய் பொம்மை இருந்தது, அது ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு தானாகவே நகரும் என்பதையும் இங்கே நினைவூட்ட விரும்புகிறோம்.

நம்பினால் நம்புங்கள்! இதேபோன்ற ஒரு சம்பவம் ஸ்காட்லாந்தில் நடந்துள்ளது. ஸ்காட்லாந்தில் வசிக்கும் ஒருவர் தன்னிடம் ஒரு பொம்மை இருப்பதாகவும், அதன் வாய் தானாகவே திறந்து மூடுவதாகவும் கூறி, அந்த பொம்மையின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இந்த பேய் பொம்மைக்கும், அவர் சொல்லும் கதைக்கும் சொந்தக்காரர் - ஸ்காட்லாந்தைச் சேர்ந்த 51 வயதான கிரிகோர் ஸ்டீவர்ட் ஆவார்.

also read ; ஒரே பெண்ணுக்கு 21 குழந்தைகள்.. ஆனால் எல்லாமே 2 வயதுக்கு கீழே தான் - நம்ப முடிகிறதா?

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் இந்த பொம்மையை வாங்கியதாகவும், இந்த பொம்மையின் பழைய சொந்தக்காரர், தன்னிடமிருந்து வெகு தொலைவில் வசிக்கும் ஒருவருக்கு இதை விற்க விரும்பியதாகவும் கிரிகோர் விளக்கமளித்துள்ளார். கிரிகோர் ஸ்காட்லாந்தில் வாழ்கிறார் என்பதை கண்டுபிடித்தவுடன், அவர் உடனடியாக கிரிகோரிடம் பொம்மையை விற்றுவிட்டாராம். அந்த பொம்மையுடன் தான் கிரிகோர் சில விசித்திரமான அனுபவங்களை சந்தித்து வருகிறார்.

இந்த பொம்மை தானாகவே வாயைத் திறக்குமாம்!

"அங்கிள் ஹெர்ப்" என்று அழைக்கப்படும் இந்த பொம்மை தன் வாயை இஷ்டத்திற்கு திறந்து மூடும் என்கிறார் கிரிகோர். திகிலான விடயம் என்னவென்றால். இந்த பொம்மைக்குள் அதன் வாயைத் திறக்கவும் மூடவும் உதவும் எந்த விதமான இயந்திரமும் கிடையாது. குறிப்பாக இந்த பொம்மை வருத்தமாக இருக்கும்போது வாயைத் திறக்கும் என்று கிரிகோர் குறிப்பிடுகிறார். உதாரணமாக, இந்த பொம்மையை அதன் பெட்டியில் வைத்திருந்தால், அது கோபத்தில் வாயைத் திறக்குமாம். உடனே பெட்டியில் இருந்து எடுத்தவுடன் வாயை மூடுக்கொள்ளுமாம்.

also read : வீட்டை விற்க மறுத்த மூதாட்டி... இறுதியாக ஷாப்பிங் மால் டெவலப்பர் எடுத்த அதிரடி முடிவு!

பேய் தான்.. ஆனால் ஒரு மகிழ்ச்சியான பேய்!

"பொம்மைக்குள் இருக்கும் பேய் அவருடன் சந்தோஷமாக இருக்கிறது. பழைய சொந்தக்காரர் யாரென்று இந்த பொம்மைக்கு தெரியாத காரணத்தினால் தான், இது அவருக்கு சில தொந்தரவுகளை செய்துள்ளது. பொம்மையின் முன்னாள் உரிமையாளர் இதை பூட்டியே வைத்துள்ளார்; ஆனால் நான் இந்த பொம்மைக்கு பெயர் வைத்து நன்றாக பார்த்தும் கொள்கிறேன். இதன் விளைவாக, இந்த பொம்மையைச் சுற்றி நிறைய நேர்மறை ஆற்றல் உள்ளது" என்று 'கூலாக' கூறுகிறார் கிரிகோர் ஸ்டீவர்ட்!
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Trending

அடுத்த செய்தி