ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

’மரண பயம்’ டூரில் நேர்ந்த விபரீதம் - நூலிழையில் தப்பிய ஸ்காட்லாந்து தம்பதி!

’மரண பயம்’ டூரில் நேர்ந்த விபரீதம் - நூலிழையில் தப்பிய ஸ்காட்லாந்து தம்பதி!

ஸ்காட்லாந்து தம்பதி

ஸ்காட்லாந்து தம்பதி

சோபி, ரிச்சார்டு தம்பதியினர் மழைக்காலத்தை அனுபவிக்க ஸ்காட்லாந்திற்கு டூர் சென்றுள்ளனர்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

ஸ்காட்லாந்திற்கு டூர் சென்ற தம்பதி, தாங்கள் செல்பி எடுத்த இடத்தில் அடுத்த நொடியில் மின்னல் தாக்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

விபத்து ஏற்படுவதை முன்கூட்டியே தடுக்க யாராலும் முடியாது. யாருக்கு எப்போது, எந்தநேரத்தில் வேண்டுமானாலும் எதிர்பாராத விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. விபத்து ஏற்படுவதை முன்கூட்டியே கணிக்கும் ஒரு சக்தி இதுவரை யாரிடமும் இல்லை. எதிர்பாராத விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் ஏராளம். அதேநேரத்தில், விபத்தில் சிக்கி, அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தவர்களும் உள்ளனர். அதேமாதிரியான ஒரு அனுபவம், ஸ்காட்லாந்து தம்பதிக்கு ஏற்பட்டுள்ளது. மரண பயத்தை நேரில் அனுபவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சோபி, ரிச்சார்டு தம்பதியினர் மழைக்காலத்தை அனுபவிக்க ஸ்காட்லாந்திற்கு டூர் சென்றுள்ளனர். பல்வேறு இடங்களைச் சுற்றிப்பார்த்த அவர்கள், வடக்கு ஸ்காட்லாந்து பகுதியில் உள்ள லோச் (Loch) பகுதியில் உள்ள ஏரியைப் பார்ப்பதற்காக கடந்த வார இறுதியில் சென்றுள்ளனர். அங்கு மழைத்தூரல் பொழிந்துகொண்டே இருந்துள்ளது. அந்த மழைச்சாரலில் உலாவிய இருவரும் ஏரிக்கு அருகாமையில் நின்று செல்பி எடுக்க முடிவு செய்துள்ளனர்.

அப்போது, அந்தப் பகுதியில் திடீரென மின்னல் கடுமையாக எழுந்துள்ளது. செல்பி எடுக்கும்போது இருவரின் முடியும் வித்தியாசமான முறையில் கலைந்து இருந்ததால், நொடிப்பொழுதில் ரிச்சார்டுக்கு பயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக மனைவியின் கையைப் பற்றிய அவர், வேகமாக அவரை காருக்கு அழைத்துக் கொண்டு ஓடியுள்ளார். காருக்குள் ஏறிய பிறகு அந்த இடத்தை இருவரும் பார்க்கும்போது, கடுமையான மின்னல் அந்த இடத்தை தாக்கியுள்ளது. இவர்கள் இருவரும் புகைப்படம் எடுத்துக்கொண்ட அதே இடத்தில் மின்னல் தாக்கியதைப் பார்த்ததும் ரிச்சர்டு, சோபி இருவரும் பயத்தின் உச்சத்துக்கே சென்றுள்ளனர்.

Also read... ’உலகம் கைவிட்டுவிட்டது’ ஆப்கன் சிறுமியின் கண்ணீர் வீடியோ!

அதேநேரத்தில், அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்ததை எண்ணி மகிழ்ச்சியடைந்த அவர்கள், இதற்காக கடவுளுக்கு நன்றி கூறியுள்ளனர். தங்களுக்கு நேர்ந்த அனுபவம் குறித்து சோபி பேசும்போது, "நாங்கள் இருவரும் ஏரிக்கு அருகில் நின்று செல்பி எடுத்துக்கொண்டு இருந்தோம். அப்போது மழைத் தூரலாக பெய்து கொண்டு இருந்தது. ரிச்சர்டு என்ன நினைத்தாரோ தெரியவில்லை, திடீரென என்னுடைய கைகளைப் பற்றி வேகமாக காருக்கு இழுத்து வந்தார். நானும் அவரும் வேகமாக ஓடி வந்து காருக்குள் ஏறிக்கொண்டோம். பின்னர், நாங்கள் நின்ற இடத்தில் கடுமையான மின்னல் இறங்கியது. என்னால் நம்பவே முடியவில்லை.

மொபைலில் இருந்த செல்பி புகைப்படத்தை எடுத்து பார்த்தபோது, இருவரின் தலைமுடியும் வித்தியாசமாக கலைந்திருந்தது. ஏற்கனவே மின்னல் தாக்குவதற்குரிய இடத்தில் நாங்கள் இருந்திருக்கிறோம் என்பதை அப்போது தான் உணர்ந்தோம். கடவுளுக்கு நன்றி, அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துவிட்டோம்" என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். செல்பி எடுக்கும்போது ஒருவிதமான எலக்டிரிக் அதிர்வை ரிச்சர்டு உணர்ந்துள்ளார். அதனடிப்படையிலேயே அங்கிருந்து மனைவி சோபியை அழைத்துக்கொண்டு அவர் ஓடியுள்ளார்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Scotland