’கத்தரிக்கோல் இல்லை என்றால் என்ன? பல்லு இருக்கே’ கடை திறப்பு விழாவில் பாக்.அமைச்சரின் காமெடி!

பாக்.அமைச்சர்ன்

பற்களை கத்தரிக்கோலாக மாற்றியது பேஷ்...பேஷ் என்றும் சில ஜாலியாக கூறியுள்ளனர்.

  • Share this:
பாகிஸ்தானில் கடை திறப்பு விழாவின்போது கத்தரிக்கோல் மழுங்கியிருந்ததால், ரிப்பனை பல்லால் கடித்து கடையை திறப்பு விழா செய்த அமைச்சரின் செயல் இணையத்தில் வைரலாகியுள்ளது.

பாகிஸ்தானில் எலக்ட்ரானிக்ஸ் கடை திறப்பு விழாவுக்காக அமைச்சர் ஒருவர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், கடையை திறப்பு விழா செய்வதற்காக கட்டப்பட்டிருந்த ரிப்பனை கத்தரிக்கோல் கொண்டு நறுக்கியுள்ளார். ஆனால், அந்தக் கத்தரிக்கோல் மழுங்கியதாக இருந்ததால், இரண்டு மூன்று முறை முயற்சித்தும் ரிப்பன் வெட்டவில்லை. இதனால், தன் பல்லால் ரிப்பனைக் கடித்து, கடையை திறந்து வைத்தார். அவரின் இந்த செயல் அங்கிருந்தவர்களுக்கு நகைப்பை ஏற்படுத்தியதோடு, இணையத்திலும் வீடியோ வைரலாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தக் காமெடியை செய்தவர் அமைச்சர் ஃபயாஸ்-உல்-ஹசன் சோஹன். இவர், பாக்ஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் சிறைத்துறை அமைச்சராகவும், செய்தித் தொடர்பாளராகவும் இருந்து வருகிறார். அவர் போட்டியிட்டு வெற்றிப்பெற்ற தொகுதியான ராவல்பிண்டியில் கடை திறப்பு விழாவுக்கு அழைக்கப்பட்டுள்ளார். அப்போது, கடை திறப்பு விழாவுக்கு கட்டப்பட்டிருந்த ரிப்பனை, கத்தரிக்கோல் வெட்டாததால் பல்லால் கடித்து ரிப்பனை வெட்டினார்.



இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், எலக்டிரானிக்ஸ் கடை திறப்பு விழாவில் தான் பல்லால் ரிப்பனை கடித்த வீடியோவை அவரே சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், கொடுக்கப்பட்ட கத்தரிக்கோல் முனை மழுங்கியதாகவும், மோசமானதாகவும் இருந்தது என தெரிவித்துள்ளார். இதன்மூலம் கடையை மிகப்பெரிய நஷ்டத்திலிருந்து கடையின் உரிமையாளர் காப்பாற்றியுள்ளார் என்றும் வேடிக்கையாக தெரிவித்துள்ளார். அதாவது, மிகப்பெரிய கடையைக் கட்டி திறப்பு விழா நடத்தும் எலக்டிரானிக்ஸ் கடை உரிமையாளர், புதிய கத்தரிக்கோல் ஒன்றை கூட வாங்கிக் கொடுத்திருக்கலாம்.

ஆனால், அதில் ஏதோ பெரிய செலவு ஏற்பட்டுவிடப்போகிறது என்ற நினைப்பில் மிச்சப்படுத்தியுள்ளார் என்கிற தொனியில் அமைச்சர் கிண்டலடித்துள்ளார். அவரின் இந்த வேடிக்கையான செயல் இணையத்திலும் வைரலாகியுள்ளது. அமைச்சர் ஃபயாஸ்-உல்-ஹசன் சோஹனின் காமெடி உணர்வையும், சமயோசித்தமாக செயல்பட்டதையும் பலர் பாராட்டு தெரிவித்துள்ளனர். தான் ஒரு அமைச்சராக இருந்தாலும், அங்கிருந்தவர்களுக்கு எந்தவொரு சங்கடத்தையும் ஏற்படுத்தாமல், கலகலப்பாக மாற்றியது அவரின் பெருந்தன்மையை காட்டுவதாக இருப்பதாக சில நெட்டிசன்கள் கமெண்ட் அடித்துள்ளனர்.

Also read... எந்த ஒரு பாதுகாப்பு கவசமும் இல்லாமல் ஆயிரம் தேனீக்களின் நடுவே கம்பீரமாக நடந்த மனிதர்.. வைரல் சம்பவம்!

தேவையான நேரத்தில் புதிய கண்டுபிடிப்பை அமைச்சர் செய்து காட்டியுள்ளார் என்றும், பற்களை கத்தரிக்கோலாக மாற்றியது பேஷ்...பேஷ் என்றும் சில ஜாலியாக கூறியுள்ளனர். இதனால், டிவிட்டரில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளை அந்த வீடியோ கடந்துள்ளது.

இதேபோல், ஒரு வேடிக்கையான சம்பவம் இந்தியா - இங்கிலாந்து போட்டியிலும் அரங்கேறியது. கடந்த இரு போட்டிகளின்போது மைதானத்திற்குள் நுழைந்த ஜார்வோ, நேற்றைய ஆட்டத்தின்போதும் நுழைந்தார். இந்தமுறை பந்துவீச்சாளராக மாறி வேகமாக ஓடி பந்துவீச முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக இங்கிலாந்து வீரர் பேரிஸ்டோ மீது மோதிவிட்டார். பின்னர், ஜார்வோவை மைதான காவலர்கள் வெளியே இழுத்துச் சென்றனர்.
Published by:Vinothini Aandisamy
First published: