பறவைகள் இடம்பெயர்ந்து போவதை ஜி.பி.எஸ் டிராக்கர் மூலம் துல்லியமாக கண்டுபிடிக்கலாம் என ஆய்வாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
பருவகால மாற்றத்தின்போது பறவைகள் இடம்பெயர்கின்றன. வெப்பநிலை, உணவு, இருப்பிடம், இனச்சேர்க்கை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக பறவைகள் இடம்பெயர்ந்து போவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், எப்படி ஒரே இடத்துக்கு ஆண்டுதோறும் செல்கின்றன? அவைகளுக்கு வழிகாட்டும் திசைமானி எது? என்பது குறித்து பல்வேறு குழப்பங்கள் தொடர்ந்து நீடித்துக் கொண்டே இருக்கின்றன. தற்போது டெக்னாலஜி வளர்ந்திருப்பதால், அதன் உதவியுடன் இந்த கேள்விகளுக்கு விடைகாண முயற்சித்த ஆய்வாளர்களுக்கு தற்போது வெற்றி கிடைத்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
பறவைகள் இடம்பெயர்வதை ஜி.பி.எஸ் டிராக்கர் மூலம் துல்லியமாக கண்டுபிடிக்க முடிவதாக கூறியுள்ளனர். வட அமெரிக்காவில் இருக்கும் ராபின் பறவை பார்ப்பதற்கு அளவில் சிறியதாக இருந்தாலும், பருவ காலத்தில் சுமார் 4,480 கிலோ மீட்டர் தொலைவுக்கு பயணம் செய்கின்றன. இதற்கு முன்பு இருந்த கருவிகள் அனைத்தும் பறவைகள் இருக்கும் இடத்தை சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவில் உத்தேசமாக கணிக்க மட்டுமே பயன்பட்ட நிலையில், சாட்டிலைட் உதவியுடன் இணைக்கப்பட்ட ஜி.பி.எஸ் டிராக்கர்கள், அமெரிக்காவில் எந்த இடத்தில் பறக்கிறது? இப்போது எங்கு இருக்கிறது என்பதைகூட துல்லியமாக தெரிவிக்கின்றன.
குறிப்பாக, ராபின் பறவையின் இடப்பெயர்வு குறித்து சூழலியல் நிபுணர் எமிலி வில்லியம்ஸ், கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார். மற்ற பறவைகள் மிக நீண்ட தொலைவு பயணிக்காதபோது இந்த பறவைகள் மட்டும் ஏன் இவ்வளவு தூரம் பறக்கின்றன? என்பதை அறிவதற்காக ஆய்வு மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார். தன்னுடைய ஆராய்ச்சிக்கு ஜி.பி.எஸ் டிராக்கர்கள் பெரும் உதவியாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
பெக்கான் (Beacon) சிக்னல் கருவி பறவைகளை தொந்தரவு செய்யாத வகையில் வடிவமைக்கப்பட்டு, ராபின் பறவைகள் மீது பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுவதாகவும், அவற்றின் ஒவ்வொரு நகர்வுகளையும் ஜி.பி.எஸ் மூலம் அறிந்து கொள்ளலாம் என எமிலி வில்லியம்ஸ் தெரிவித்தார். கார்னல் யுனிவர்சிட்டியில் சூழலியல் நிபுணராக இருக்கும் அட்ரியன் டோக்டர் (Adriaan Dokter), பறவைகள் ஆராய்ச்சி தொடர்பான பொற்காலத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார். விண்வெளியில் உள்ள அக்ரோஸ் சாட்டிலைட் மற்றும் பன்னாட்டு விண்வெளி ஆராய்ச்சி மையம் மூலம் ஜி.பி.எஸ் டிராக்கருக்கான தகவல்கள் பறிமாறப்பட்டு, பறவைகள் இடம்பெயர்தல் கண்காணிக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
Also read... மாடுகளுக்கு பானி பூரி ஊட்டிவிட்ட நபர் - வைரலாகும் வீடியோ!
அளவில் மிகச்சிறியதாக இருக்கும் ராபின் பறவைகளை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பின்தொடர்வது என்பது சாத்தியமில்லாமல் இருந்ததாக தெரிவித்துள்ள அவர், தற்போது எந்த இடத்தில் இருக்கிறது, எங்கு பறக்கிறது என்பதைக் கூட கூற முடியும் எனத் தெரிவித்துள்ளார். பறவைகள் ஆய்வுக்காக 10 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட ஆன்டனாவில் சில குறைபாடுகள் இருந்ததால், ரஷ்ய ராக்கெட் உதவியுடன் கீழே கொண்டு வரப்பட்டதாக கூறும் மார்டின் விக்கெல்ஸ்கி (Martin Wikelski), மாஸ்கோவில் இருந்து ஜெர்மனிக்கு கொண்டு செல்லப்பட்டு சரிசெய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இந்த ஆன்டனா பயன்பாட்டுக்கு வந்தவுடன், பறவை ஆய்வுக்கு உலகம் முழுவதும் உள்ள சூழலியல் நிபுணர்களுக்கு பெரும் உதவியாக இருப்பதாக கூறியுள்ளார். எமிலி வில்லியம்ஸ் பேசும்போது, அலாஸ்காவில் இருந்து 4,480 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள டெக்ஸாஸ் நகருக்கு ராபின் பறவைகள் பறந்து செல்வதாக கூறியுள்ளார். எந்த காரணத்துக்காக அவை இடம்பெயர்கின்றன என்பதை இந்த ஜி.பி.எஸ் டிராக்கர் மூலம் தங்களால் துல்லியமாக அறிய முடியும் எனக்கூறியுள்ள அவர், இது தொடர்பான முடிவுகள் விரைவில் வெளியிடப்போவதாகவும் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.