• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • 24,000 ஆண்டுகள் பழமையான சிறிய உயிரினிங்களை மீண்டும் ஆய்வகத்தில் உயிர்ப்பித்த ரஷ்ய விஞ்ஞானிகள்!

24,000 ஆண்டுகள் பழமையான சிறிய உயிரினிங்களை மீண்டும் ஆய்வகத்தில் உயிர்ப்பித்த ரஷ்ய விஞ்ஞானிகள்!

மாதிரி படம். (REUTERS)

மாதிரி படம். (REUTERS)

ஜூலை 2020ல், விஞ்ஞானிகள் டைனோசர்களின் வயதிலிருந்தே கடலின் அடிப்பகுதியில் செயலற்ற நிலையில் இருந்த நுண்ணுயிரிகளை வெற்றிகரமாக புதுப்பித்தனர்.

  • Share this:
‘வாழ்க்கை எப்போதும் ஒரு வழியைக் கண்டுபிடிக்கும்' என்ற முக்கிய பாடத்தை நமக்கு ஜுராசிக் பார்க் கற்பித்துள்ளது. இந்நிலையில் 24,000 ஆண்டுகளாக ஆர்க்டிக் பெர்மாஃப்ரோஸ்டில் உறைந்திருந்த சிறிய உயிரினங்கள் ஒன்று சமீபத்தில் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டன. ஒரு ஆய்வகத்தில் ரஷ்ய விஞ்ஞானிகள் 24,000 ஆண்டுகளாக ஆர்க்டிக் பெர்மாஃப்ரோஸ்டில் உறைந்திருந்த சிறிய ‘ஜாம்பி’களை மீண்டும் உயிர்ப்பித்து குளோன்களை உருவாக்கி உள்ளனர். பண்டைய காலத்து உயிரினங்கள் உயிர்த்தெழுப்பப்படுவது இது முதல் முறை அல்ல. ஜூலை 2020ல், விஞ்ஞானிகள் டைனோசர்களின் வயதிலிருந்தே கடலின் அடிப்பகுதியில் செயலற்ற நிலையில் இருந்த நுண்ணுயிரிகளை வெற்றிகரமாக புதுப்பித்தனர்.

சைபீரிய பெர்மாஃப்ரோஸ்டில் உறைந்திருந்த முதிர்ச்சியற்ற பழ திசுக்களில் இருந்து 30,000 ஆண்டுகள் பழமையான தாவரங்களை கூட விஞ்ஞானிகள் மீளுருவாக்கம் செய்துள்ளனர். அண்டார்டிகாவில் 1,500 ஆண்டுகளாக பனிக்கட்டியாக இருந்த அண்டார்டிக் பாசியை ஆராய்ச்சியாளர்கள் மீட்டெடுத்துள்ளனர். நூற்புழுக்கள் எனப்படும் சிறிய புழுக்கள் கூடுதலாக இரண்டு சைபீரிய இடங்களில் வரலாற்று நிரந்தரத்திலிருந்து மீட்கப்பட்டு புத்துயிர் பெற்றன. இவ்வாறு வரலாறுகள் இருக்க சமீபத்தில் தற்போது பழங்கால உயிரினம் ஒன்று உயிர்பிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வாயை வட்டமிடும் சிறிய முடிகளின் சக்கரம் போன்ற வளையத்திற்காக இந்த சிறிய உயிரினங்கள், நுண்ணிய உயிரினங்கள் (Bdelloid rotifers ) அல்லது வீல் அனிமல்ஸ் என பெயரிடப்பட்டுள்ளன. ரோட்டிஃபர்கள் (rotifers) நன்னீர் சூழலில் வாழும் பலசெல்லுலர் நுண்ணிய விலங்குகள். இவை சுமார் 50 மில்லியன் ஆண்டுகளாக உள்ளன. இந்த 50 மில்லியன் ஆண்டுகளில் இவை உயிர்வாழ புதிய வழிமுறைகளை கற்று கொண்டுள்ளன என்று கூறுகிறார்கள் விஞ்ஞானிகள். நவீன ரோட்டிஃபர்கள் மைனஸ் 4 டிகிரி பாரன்ஹீட்டில் (மைனஸ் 20 டிகிரி செல்சியஸ்) உறைந்து பின் 10 ஆண்டுகளுக்குப் பிறகு புத்துயிர் பெறலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் முன்பு கண்டறிந்தனர்.

ஆனால் இப்போது விஞ்ஞானிகள் ப்ளீஸ்டோசீன் சகாப்தத்தின் பிற்பகுதியில் (2.6 மில்லியன் முதல் சுமார் 11,700 ஆண்டுகளுக்கு முன்பு வரை) பண்டைய சைபீரிய பெர்மாஃப்ரோஸ்டில் உறைந்த ரோட்டிஃபர்களை மீண்டும் உயிர்ப்பித்துள்ளனர். இந்த பழங்கால ரோட்டிஃபர்கள் பார்த்தினோஜெனீசிஸ் மூலம் இனப்பெருக்கம் செய்யத் தொடங்கியது, அவற்றின் மரபணு நகல்களாக இருந்த குளோன்களை உருவாக்கியது. இந்த ஆய்வில், பயன்படுத்தப்பட்ட தற்போதைய மாதிரிகள் வடகிழக்கு சைபீரிய பெர்மாஃப்ரோஸ்ட் ரேடியோகார்பனில் இருந்து மீட்கப்பட்டது.

இவை 24,000 ஆண்டுகளுக்கு முந்தையது. உறைந்த நிலையில் ரோட்டிஃபர் உயிர் வாழ்வதை காட்டிய மிக நீண்ட வரலாறு இதுவாகும். ரஷ்யாவின் புஷ்சினோவில் உள்ள Institute of Physicochemical and Biological Problems in Soil Science-ஐ சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஸ்டாஸ் மலாவின் கூறுகையில், ரோட்டிஃபர்கள் கிரிப்டோபயோசிஸைப் பயன்படுத்த பரிணாமம் அடைந்தன.ஏனெனில் அவற்றில் பெரும்பாலானவை உறைபனி அல்லது வறண்டுபோகும் நீர்நிலைகளில் வாழ்வதாக குறிப்பிட்டார்.

Also read... பறவைகள் தேடும் முதியவர் லியோனார்டோ - யார் இவர்?

மேலும் அவை அவற்றின் வளர்சிதை மாற்றத்தை நிறுத்தி, நிலைமைகள் மேம்படும்போது கிரிப்டோபயோசிஸிலிருந்து மீள உதவும் சேப்பரோன் புரதங்கள் போன்ற சில சேர்மங்களை குவிப்பதாக குறிப்பிட்டார். பூமியின் மிக பழமையான சில உயிரினங்களின் குறிப்பிடத்தக்க உயிர்வாழும் சக்தியை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. அவை ஆய்வகத்தில் மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவதற்கு முன் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆக்ஸிஜன் அல்லது எந்தவொரு உணவும் இல்லாமல் இருக்க கூடும் என்பது விஞ்ஞானிகளின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: