கடந்த ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் வரையிலான மாதங்களில், அண்டார்டிகாவின் வடக்கு பகுதியிலுள்ள பிரதான நிலப்பகுதியான தீபகற்பத்தில் வெப்பநிலையானது 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் (35.6 மற்றும் 37.4 டிகிரி பாரன்ஹீட்) வரை எட்டியதாக கிங் ஜார்ஜ் தீவில் உள்ள சிலி விமானப்படையின் ஃப்ரீ பேஸ் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். அந்த வெப்பநிலை "வழக்கமான நிலையை விட 2 டிகிரி செல்சியஸுக்கும் மேல்" இருப்பதாக சிலி அண்டார்டிக் நிறுவனம் (INACH) வெளியிட்டுள்ள அறிக்கையில் காலநிலை ஆய்வாளர் ரவுல் கோர்டோ குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த ஆண்டு மட்டும் அண்டார்டிக் தீபகற்பத்தின் வடக்கு முனையில் நிகழ்ந்த சராசரி அதிகபட்ச வெப்பநிலை 0 டிகிரிக்கு மேல் இருந்தது. இதுபோன்ற அதிகமான வெப்பநிலை நிகழ்வு கடந்த 31 ஆண்டுகளாக நடக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார். இந்த நிகழ்வு, 20ம் நூற்றாண்டின் இறுதியில் இப்பகுதியில் காணப்பட்ட கடல் வெப்பமயமாதலின் வீதம் தற்போது மீண்டும் தொடங்குகிறது என்பதைக் குறிக்கக்கூடும். மேலும் இது மிகவும் "ஆபத்தானது" என்று அந்த ஆய்வாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Also read: தாடி வைத்திருப்பவரா நீங்கள்? - முகக்கவசங்கள் அணியும்போது கவனிக்க வேண்டியவை இதோ..
இருப்பினும், தெற்கு அரைக்கோளத்தின் குளிர்கால வெப்பநிலை இதற்கு மாறாக உள்ளது. கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் மட்டும் பதிவான வெப்பநிலை -16.8 டிகிரி செல்சியஸை எட்டியது. இது கடந்த 1970ம் ஆண்டுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள மிகக் குறைவான வெப்பநிலை என தெரிவித்துள்ளார். அண்டார்டிக் தீபகற்பம் தெற்கு அரைக்கோளத்தின் அடிவாரத்தில் அமைந்துள்ள அண்டார்டிகாவின் பிரதான நிலப்பகுதியின் வடக்குப் பகுதி ஆகும்.
மேற்பரப்பில், இது அண்டார்டிகாவின் மிகப்பெரிய, மிக முக்கியமான தீபகற்பமாகும். ஏனெனில் இது கேப் ஆடம்ஸுக்கு (வெட்டல் கடல்) இடையேயான ஒரு கோட்டிலிருந்து 1,300 கிலோமீட்டரும் (810 மைல்), எக்லண்ட் தீவுகளுக்கு தெற்கே உள்ள ஒரு நிலப்பரப்பிலிருந்தும் நீண்டுள்ளது. அண்டார்டிக் தீபகற்பம் தற்போது ஏராளமான ஆராய்ச்சி நிலையங்களைக் கொண்டுள்ளது. அர்ஜென்டினா, சிலி மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து அறிவியல் மற்றும் இராணுவத் தளங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Antarctica