முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / சூரியன் உண்மையில் உடைந்ததா? ஆராய்ச்சியாளர் சொன்ன தெளிவான விளக்கம்!

சூரியன் உண்மையில் உடைந்ததா? ஆராய்ச்சியாளர் சொன்ன தெளிவான விளக்கம்!

சூரியன்

சூரியன்

‘சூரியன் உடைந்தது’ என்ற ஆராய்ச்சியாளர் டமிதா ஸ்கோவ் பயன்படுத்திய வார்த்தைகளை கொண்டு செய்திகள் வந்து மக்களை அச்சப்படுத்தியது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சூரியனில் மேல் பரப்பு வெடித்து அலைகள் சூறாவளி புயல் போல் காட்சியளிக்கும் துல்லியமான வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவு வருகிறது. 'சூரியன் உடைந்தது’ என்ற வார்த்தைகள் கொண்டு ஆராய்ச்சியாளர் டமிதா ஸ்கோவ் பதிவிட்ட ட்வீட் இணையத்தில் வைரலாகி அனைவரையும் அதிர்சிக்குள்ளாக்கியது.

நாசாவின் James Webb telescope மூலம் இந்த காட்சிப் பதிவாகப்பட்டுள்ளது என முதலில் தகவல் வந்தது. அந்த வீடியோவில் சூரியனின் முழு வட்டமான உருவம் தெரிகிறது. அதில் சூரியனின் மேல் பரப்பில் சூறாவளி போல் சூரிய அலைகள் மேலே கிளம்புகிறது. அது தத்துருவமாகப் பார்க்கச் சூரியன் வெடித்துக் கிளம்பும் அலைகள் போல் காட்சியளித்தது.

சூரியக் குடும்பத்தின் மூல ஆற்றலே சூரியன் என்ற நிலையில் சூரியனில் இருந்து கிளம்பிய சூரிய புயல் அலைகளினால் விஞ்ஞானிகள் குழப்பம் அடைந்ததாகவும் தகவல்கள் பரவின. திடீரென சூரியனில் புயல் அலைகள் தோன்றியதால் அதற்கான காரணமும் ஆராய்ச்சியாளர்களுக்கு விசித்திரமாக தெரிந்தன.

இதன் பிறகு ‘சூரியன் உடைந்தது’ என்ற ஆராய்ச்சியாளர் டமிதா ஸ்கோவ் பயன்படுத்திய வார்த்தைகளை கொண்டு செய்திகள் வந்தன. இதனால் பூமிக்கு ஏதும் பாதிப்பா, அல்லது இதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பது குறித்து பல வியூகங்கள் எழுந்தன.

தற்போது இந்த தகவல்களுக்கே ஆராய்ச்சியாளர் டமிதா ஸ்கோவ் விளக்கமளித்துள்ளார். அதில், ‘11 ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனிலிருந்து இப்படி அலைல வருவது இயல்பான ஒன்று தான். ஆனால் இதில் புரியாதது என்னவென்றால், மற்ற அலைகள் சூரியனிலிருந்து வெளியேறினால் வான்வெளியில் மறைந்துவிடும். ஆனால் இந்த முறை வந்த அலையோ சூரியனின் மேற்பரப்பில் சுற்றிவருகிறது. இதை தவிற இந்த நிகழ்வு இயல்பான ஒன்று தான்’ என தனது கட்டுரையில் எழுதியுள்ளார். ஆராய்ச்சியாளர் ஸ்காட் மெக்கின்டோஷ் சூரியனின் 55° அட்சரேகை மேற்பரப்பில் 11 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த நிகழ்வு இயல்பாக நடப்பவைதான் என கூறியுள்ளார்.

சூரியனை பற்றி பல்வேறு யூகங்கள் வந்து மக்களை அச்சப்படுத்திய நிலையில் ஆராய்ச்சியாளர்களின் இந்த விளக்கம் மக்களை நிம்மதியடையச்செய்துள்ளது. 2025 பிப்ரவரியில் யூரோப்பியன் விண்கலம் சூரியனை சுற்றி வந்து அதன் படங்களை தத்ரூபமாக எடுக்கவிருப்பதால், இந்த நிகழ்வுகள் குறித்து மேலும் தகவல்கள் கிடைக்கும் என கூறியுள்ளனர்.

First published:

Tags: NASA, Sun